Singer : S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Kannadasan
En kangal endrum un meethu
Un kangal nooru penn meethu
Engu sendraalum enna seithaalum
Unnai vidamaatten….
En kangal endrum un meethu
Yaanaigalai madakkum maathargalil oruththi
paadugindraal araiyilae ennaalum
Kaalam varum varaikkum kaaththirunthaal
Mudivil vanthuvittaal arugilae annaalil
Mannan thannai penthaanae niyaayam kettaal
Mannan thannai penthaanae niyaayam kettaal
Unnai maranthu sendru pirintha ullam purinthathaa
Aval ezhunthu vanthu thudiththa nindraal therinthathaa
En kangal endrum un meethu
Aadaigalai piriththu aasaigalai mudiththu
Maathargalai virattalaam un polae
Paavigalai mudiththa devathaigal pirappu
Ippozhuthum nadakkalaam thannaalae….
Sollum saethi theeyaaga parakkum endru
Sollum saethi theeyaaga parakkum endru
Andru oru puraththai paarththa kangal allavaa
Indru thiripuraththai eriththa kangal paaraadaa
En kangal endrum un meethu
Un kangal nooru penn meethu
Engu sendraalum enna seithaalum
Unnai vidamaatten….
En kangal endrum un meethu
Un kangal nooru penn meethu….
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : என் கண்கள் என்றும் உன் மீது
உன் கண்கள் நூறு பெண் மீது
எங்கு சென்றாலும் என்ன செய்தாலும்
உன்னை விட மாட்டேன்...........
பெண் : என் கண்கள் என்றும் உன் மீது
பெண் : யானைகளை மடக்கும் மாதர்களில் ஒருத்தி
பாடுகின்றாள் அறையிலே எந்நாளும்
காலம் வரும் வரைக்கும் காத்திருந்தாள்
முடிவில் வந்து விட்டாள் அருகிலே அந்நாளில்
பெண் : மன்னன் தன்னை பெண்தானே நியாயம் கேட்டாள்
மன்னன் தன்னை பெண்தானே நியாயம் கேட்டாள்
உன்னை மறந்து சென்று பிரிந்த உள்ளம் புரிந்ததா
அவள் எழுந்து வந்து துடித்த நின்றாள் தெரிந்ததா
பெண் : என் கண்கள் என்றும் உன் மீது.......
பெண் : ஆடைகளை பிரித்து ஆசைகளை முடித்து
மாதர்களை விரட்டலாம் உன் போலே
பாவிகளை முடித்த தேவதைகள் பிறப்பு
இப்பொழுதும் நடக்கலாம் தன்னாலே.....
பெண் : சொல்லும் சேதி தீயாக பறக்கும் என்று
சொல்லும் சேதி தீயாக பறக்கும் என்று
அன்று ஒரு புரத்தை பார்த்த கண்கள் அல்லவா
இன்று திரிபுரத்தை எரித்த கண்கள் பாரடா
பெண் : என் கண்கள் என்றும் உன் மீது...........
உன் கண்கள் நூறு பெண் மீது
எங்கு சென்றாலும் என்ன செய்தாலும்
உன்னை விட மாட்டேன்...........
பெண் : என் கண்கள் என்றும் உன் மீது...........
உன் கண்கள் நூறு பெண் மீது.....