Idhaya Vaasal Thiranthapothu Lyrics
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : K. V. Mahadevan
Lyrics by : Pulamaipithan
Idhayavaasal thirantha pothu uravu vanthathu
Female : Urangumpothu kanavu nooru paruvam thanthathu
Male : Malar meethilae pani sinthuthae
Female : Manamenum thaenaatril alai mothuthae indru
Idhayavaasal thirantha pothu uravu vanthathu
Malaraai malarnthaen manathil kalanthaen
Virunthaai amarnthaen un kaiyilae
Male : Enaiyae koduththaen manathai inaiththaen
Siragai viriththaen pon vaanilae
Malaraai malarnthaen manathil kalanthaen
Virunthaai amarnthaen un kaiyilae
Male : Enaiyae koduththaen manathai inaiththaen
Siragai viriththaen pon vaanilae
Vaanaththu villaalae paalam
Male : Megam sorkaththai naam kaana podum
Female : Vaanaththu villaalae paalam
Male : Megam sorkaththai naam kaana podum
Nilavennum pen thozhi en maeni poovaakki
Male : Vazhi meethu thelippaalo angae angae
Idhayavaasal thirantha pothu uravu vanthathu
Male : Urangumpothu kanavu nooru paruvam thanthathu…oo….
Vizhigal pozhiyum kavithai mazhaiyil
Manathil malarum sangeethamae
Female : Ilamai karaiyil ivalin madiyil
Kadhaigal dhinamum uruvaagumae
Vizhigal pozhiyum kavithai mazhaiyil
Manathil malarum sangeethamae
Female : Ilamai karaiyil ivalin madiyil
Kadhaigal dhinamum uruvaagumae
Ezhilaana un koondhal oram
Female : Nenjam ilaippaarum thirunalum thondrum
Male : Ezhilaana un koondhal oram
Female : Nenjam ilaippaarum thirunalum thondrum
Muppaalil moondraam paal ippothu neethaanae
Female : Eppothu madi saayum inbam inbam
Idhayavaasal thirantha pothu uravu vanthathu
Female : Urangumpothu kanavu nooru paruvam thanthathu
Male : Malar meethilae pani sinthuthae
Female : Manamenum thaenaatril alai mothuthae indru
Both : Idhayavaasal…mmmm…..mmm…..mm……
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
ஆண் : இதயவாசல் திறந்த போது உறவு வந்தது
பெண் : உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்தது
ஆண் : மலர் மீதிலே பனி சிந்துதே
பெண் : மனமெனும் தேனாற்றில் அலை மோதுதே இன்று
பெண் : இதயவாசல் திறந்த போது உறவு வந்தது
பெண் : மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
ஆண் : எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
சிறகை விரித்தேன் பொன் வானிலே
பெண் : மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
ஆண் : எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
சிறகை விரித்தேன் பொன் வானிலே
பெண் : வானத்து வில்லாலே பாலம்
ஆண் : மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும்
பெண் : வானத்து வில்லாலே பாலம்
ஆண் : மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும்
பெண் : நிலவென்னும் பெண் தோழி என் மேனி பூவாக்கி
ஆண் : வழி மீது தெளிப்பாளோ அங்கே அங்கே
பெண் : இதயவாசல் திறந்த போது உறவு வந்தது
ஆண் : உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்தது....ஊ.....
ஆண் : விழிகள் பொழியும் கவிதை மழையில்
மனதில் மலரும் சங்கீதமே
பெண் : இளமை கரையில் இவளின் மடியில்
கதைகள் தினமும் உருவாகுமே
ஆண் : விழிகள் பொழியும் கவிதை மழையில்
மனதில் மலரும் சங்கீதமே
பெண் : இளமை கரையில் இவளின் மடியில்
கதைகள் தினமும் உருவாகுமே
ஆண் : எழிலான உன் கூந்தல் ஓரம்
பெண் : நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும்
ஆண் : எழிலான உன் கூந்தல் ஓரம்
பெண் : நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும்
ஆண் : முப்பாலில் மூன்றாம் பால் இப்போது நீதானே
பெண் : எப்போது மடி சாயும் இன்பம் இன்பம்...
ஆண் : இதயவாசல் திறந்த போது உறவு வந்தது
பெண் : உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்தது
ஆண் : மலர் மீதிலே பனி சிந்துதே
பெண் : மனமெனும் தேனாற்றில் அலை மோதுதே இன்று
இருவர் : இதயவாசல் ம்ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்....