Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : {Intha veedu namakku sonthamillai
Paaduda chinnathambi
Athanaala namakku thunbamillai
Aadudaa chinnathambi} (2)

Male : Ullavanga Ethanaiyo
Vanthu vanthu ponaanga
Santhaiyila vellaattu
Mandhaiyai pol aanaanga

Male : Intha veedu namakku
Intha veedu namakku sonthamillai
Paaduda chinnathambi
Athanaala namakku thunbamillai
Aadudaa chinnathambi

Male : Nam naattil jaathi illai
Enbathellaam poi sethi
Man veettil oru jaathi
Machi veettil maru jaaathi

Male : Dhesiya kodiyinile
Moonu vagai varnandhaan
Dhesathil irukirathu
Moonu vagai varnam thaan

Male : Yezhainga sirippinile
Iraivanaithaan kaanalam
Appadithaan nenaichirunthen
Naanum inge naalum thaan

Male : Ennaala iraivanaithaan
Paarthidave mudiyala
Naan paarthu ithu varaiyil
Yezhai inge sirikkalai

Male : Ellorumthaan sernthu
Inge yezhaigalai amukka
Avan eppadi sirikka mudiyum
Athu seppadi vithaiyaa pogum

Male : Nenjam undu nermai undu
Nammoda thaan raja

Male : {Intha veedu namakku sonthamillai
Paaduda chinnathambi
Athanaala namakku thunbamillai
Aadudaa chinnathambi} (2)

Male : Kuppaiyil kandedutha
Gundumani neethaanda
Eppothum sirichikittu
Thullugira maan thaanda

Male : Appa yaaru theriyavillai
Amma yaaru puriyavillai
Aanaalum unnudaiya
Sondhaminge naan thaanda

Male : Ellaarkkum thagappan endru
Irukirathu sami thaan
Ellorkkum veedu antha
Sami thantha boomi thaan

Male : Illaatha yezhai ellaam
Naama konda uravu thaan
Nallorgal vaazhnthu ellaam
Nammoda varavu thaan

Male : Raja pola vaazhum
Namma rajangam thaan ooru
Raja pola vaazhum
Namma rajangam thaan ooru

Male : Pallam enna medu enna
Sellum namma theru

Male : {Intha veedu namakku sonthamillai
Paaduda chinnathambi
Athanaala namakku thunbamillai
Aadudaa chinnathambi} (2)

Male : Ullavanga Ethanaiyo
Vanthu vanthu ponaanga
Santhaiyila vellaattu
Mandhaiyai pol aanaanga

Male : Intha veedu namakku
Intha veedu namakku sonthamillai
Paaduda chinnathambi
Athanaala namakku thunbamillai
Aadudaa chinnathambi

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்  : வாலி

ஆண் : {இந்த வீடு நமக்கு சொந்தமில்லை
பாடுடா சின்னதம்பி
அதனால நமக்கு துன்பமில்லை
ஆடுடா சின்னதம்பி} (2)

ஆண் : உள்ளவங்க எத்தனையோ
வந்து வந்து போனாங்க
சந்தையில வெள்ளாட்டு
மந்தையைப் போல் ஆனாங்க

ஆண் : இந்த வீடு நமக்கு
இந்த வீடு நமக்கு சொந்தமில்லை
பாடுடா சின்னதம்பி
அதனால நமக்கு துன்பமில்லை
ஆடுடா சின்னதம்பி

ஆண் : நம் நாட்டில் ஜாதில்லை
என்பதெல்லாம் பொய் சேதி
மண் வீட்டில் ஒரு ஜாதி
மச்சி வீட்டில் மறு ஜாதி

ஆண் : தேசிய கொடியினிலே
மூணுவகை வர்ணந்தான்
தேசத்தில் இருக்கிறது
மூணுவகை வர்ணம் தான்

ஆண் : ஏழைங்க சிரிப்பினிலே
இறைவனைத்தான் காணலாம்
அப்படித்தான் நினைச்சிருந்தேன்
நானும் இங்கே நாளும்தான்

ஆண் : என்னால இறைவனைத்தான்
பார்த்திடவே முடியல
நான் பார்த்து இதுவரையில்
ஏழை இங்கே சிரிக்கலை

ஆண் : எல்லோரும்தான் சேர்ந்து
இங்கே ஏழைகளை அமுக்க
அவன் எப்படி சிரிக்க முடியும்
அது செப்படி வித்தையா போகும்

ஆண் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
நம்மோடதான் ராஜா

ஆண் : {இந்த வீடு நமக்கு சொந்தமில்லை
பாடுடா சின்னதம்பி
அதனால நமக்கு துன்பமில்லை
ஆடுடா சின்னதம்பி} (2)

ஆண் : குப்பையில் கண்டெடுத்த
குண்டுமணி நீதாண்டா
எப்போதும் சிரிச்சிக்கிட்டு
துள்ளுகிற மான்தாண்டா

ஆண் : அப்பா யாரு தெரியவில்லை
அம்மா யாரு புரியவில்லை
ஆனாலும் உன்னுடைய
சொந்தமிங்கே நான்தாண்டா

ஆண் : எல்லோர்க்கும் தகப்பன் என்று
இருக்கிறது சாமிதான்
எல்லோர்க்கும் வீடு அந்த
சாமி தந்த பூமிதான்

ஆண் : இல்லாத ஏழை எல்லாம்
நாம் கொண்ட உறவுதான்
நல்லோர்கள் வாழ்ந்து எல்லாம்
நம்மோட வரவுதான்

ஆண் : ராஜா போல வாழு
நம்ம ராஜாங்கம் தான் ஊரு…….
ராஜா போல வாழு
நம்ம ராஜாங்கம் தான் ஊரு…….

ஆண் : பள்ளம் என்ன மேடு என்ன
செல்லும் நம்ம தேரு

ஆண் : {இந்த வீடு நமக்கு சொந்தமில்லை
பாடுடா சின்னதம்பி
அதனால நமக்கு துன்பமில்லை
ஆடுடா சின்னதம்பி} (2)

ஆண் : உள்ளவங்க எத்தனையோ
வந்து வந்து போனாங்க
சந்தையில வெள்ளாட்டு
மந்தையைப் போல் ஆனாங்க

ஆண் : இந்த வீடு நமக்கு
இந்த வீடு நமக்கு சொந்தமில்லை
பாடுடா சின்னதம்பி
அதனால நமக்கு துன்பமில்லை
ஆடுடா சின்னதம்பி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here