Singers : Vani Jairam and Chorus

Music by : Shankar Ganesh

Chorus : …………….

Female : Kaalaakaalam kalyaanam aanaa
Kaaikkum pookkum thennampulla
Paalai kaatti pakkaththil aadi
Naalai eenum chinna pullai

Chorus : Laali suba laali
Ini aadum kaaigal kodi
Sammanthi murai pesa vaadiyamma
Sammanthi murai pesa vaadiyamma

Female : Kaalaakaalam kalyaanam aanaa
Kaaikkum pookkum thennampulla
Paalai kaatti pakkaththil aadi
Naalai eenum chinna pullai

Female : Pillaiyendru solvathintha thennai
Pillai pettrorgalthaandi idhan annai
Thaalikatti vaiththu vidu munnae
Adhan thalai meedhu thallaadum pinnae
Ilaneeru varum paaru
Ennai pola unnai pola

Female : Kaalaakaalam kalyaanam aanaa
Kaaikkum pookkum thennampulla
Paalai kaatti pakkaththil aadi
Naalai eenum chinna pullai

Chorus : Aahaa oho aahaa oho
Aahaa oho oohho
Aahaa oho aahaa oho
Aahaa oho oohho

Chorus : …………….

Female : Selai kattum chinna pillai polae
Adhu chinna nadai poduthu paar melae
Maalaiyittu manam mudichchathaalae adhu
Maappillaiyai theduthu kannaalae
Ilai moodum aval maeni
Ennai pola unnai pola

Chorus : Kaalaakaalam kalyaanam aanaa
Kaaikkum pookkum thennampulla
Paalai kaatti pakkaththil aadi
Naalai eenum chinna pullai

Female : Kaal vazhiyae oottri vitta neeru
Adha thalai vazhiyae thiruppo tharum paaru
Paanai pola moodi vachchathaaru
Adha padachchavana paarththu nandri kooru
Vayasu vantha neram paarthu
Ennai pola unnai pola

Female : Kaalaakaalam kalyaanam aanaa
Kaaikkum pookkum thennampulla
Paalai kaatti pakkaththil aadi
Naalai eenum chinna pullai

Chorus : Laali suba laali
Ini aadum kaaigal kodi
Sammanthi murai pesa vaadiyamma
Sammanthi murai pesa vaadiyamma

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ……………….

பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா
காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள
பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி
நாளை ஈனும் சின்னப் புள்ளை

குழு : லாலி சுப லாலி
இனி ஆடும் காய்கள் கோடி
சம்மந்தி முறை பேச வாடியம்மா
சம்மந்தி முறை பேச வாடியம்மா……

பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா
காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள
பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி
நாளை ஈனும் சின்னப் புள்ளை

பெண் : பிள்ளையென்று சொல்வதிந்த தென்னை
பிள்ளை பெற்றோர்கள்தான்டி இதன் அன்னை
தாலிக்கட்டி வைத்து விடு முன்னே
அதன் தலை மீது தள்ளாடும் பின்னே
இளநீரு வரும் பாரு
என்னைப்போல உன்னைப்போல

பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா
காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள
பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி
நாளை ஈனும் சின்னப் புள்ளை

குழு : ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ
ஆஹா ஓஹோ ஓஹ்ஹோ
ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ
ஆஹா ஓஹோ ஓஹ்ஹோ

குழு : …………………………..

பெண் : சேலைக் கட்டும் சின்னப் பிள்ளைப் போலே
அது சின்ன நடை போடுது பார் மேலே
மாலையிட்டு மணம் முடிச்சதாலே அது
மாப்பிள்ளையை தேடுது கண்ணாலே
இலை மூடும் அவள் மேனி
என்னைப்போல உன்னைப்போல

குழு : காலாகாலம் கல்யாணம் ஆனா
காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள
பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி
நாளை ஈனும் சின்னப் புள்ளை

பெண் : கால் வழியே ஊற்றி விட்ட நீரு
அத தலை வழியே திருப்பி தரும் பாரு
பானைப் போல மூடி வச்சதாரு
அத படச்சவன பார்த்து நன்றி கூறு
வயசு வந்த நேரம் பார்த்து
என்னைப்போல உன்னைப்போல

பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா
காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள
பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி
நாளை ஈனும் சின்னப் புள்ளை

குழு : லாலி சுப லாலி
இனி ஆடும் காய்கள் கோடி
சம்மந்தி முறை பேச வாடியம்மா
சம்மந்தி முறை பேச வாடியம்மா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here