Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Poovai Sengkuttuvan
Kaalam namakku thozhan
Kattrum mazhaiyum nanban
Kaalam namakku thozhan
Kattrum mazhaiyum nanban
Ponnoonjal illai poomeththai illai
Nee vantha velaiyilae
Ponnoonjal thaanae thaayin manam
Poo meththai thaanae thanthai manam
Ponnoonjal thaanae thaayin manam
Poo meththai thaanae thanthai manam
Aaraaro paadum anbaana nenjam
Kannae nee thuyilum manjamadaa
Manjamadaa…….manjamadaa……
Kaalam namakku thozhan
Kattrum mazhaiyum nanban
Chella magal selvamagal
Seerodu vaazhntha magal
Yaezhaiyudan vanthaaladaa
Sriraaman adithottu
Pin sellum seedhaikku
Perumaigal veraethadaa
Petha manam piththaaga
Bodhai manam kallaaga
Petha manam piththaaga
Bodhai manam kallaaga
Than sontham veruththaaladaa
Thanthai manam thaviththirukka
Paramanudan thunai nindra
Parvathiyum pennthaanadaa
Kaalam namakku thozhan
Kattrum mazhaiyum nanban
Female : Kaalam namakku thozhan
Kattrum mazhaiyum nanban
Thani maramaai nindravanai
Thazhuvugindra poongodiyaal
Sugamenna kandaaladaa
Kodiyundu maramundu
Kuzhanthaiyenum kaniyundu
Kuraiyenna kandaenadaa
Unathannai thuyarthannai
Naan theerkkum munnaalae
Unathannai thuyarthannai
Naan theerkkum munnaalae
Un kavalai kondaenadaa
Kannanaaga Neeyirukka
Mannanaaga avar irukka
Kavalaigal enakkethadaa
Kaalam namakku thozhan
Kattrum mazhaiyum nanban
Female : Kaalam namakku thozhan
Kattrum mazhaiyum nanban
Aariraariraaro aaraariraariraaro
Aaraariraariraaro……
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்
ஆண் : காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
பொன்னூஞ்சல் இல்லை பூமெத்தை இல்லை
நீ வந்த வேளையிலே
பெண் : பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்
பூ மெத்தை தானே தந்தை மனம்
பொன்னூஞ்சல் தானே தாயின் மனம்
பூ மெத்தை தானே தந்தை மனம்
ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம்
கண்ணே நீ துயிலும் மஞ்சமடா
மஞ்சமடா..........மஞ்சமடா
பெண் : காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
ஆண் : செல்ல மகள் செல்வமகள்
சீரோடு வாழ்ந்த மகள்
ஏழையுடன் வந்தாளடா
பெண் : ஸ்ரீராமன் அடிதொட்டு
பின் செல்லும் சீதைக்கு
பெருமைகள் வேறேதடா
ஆண் : பெத்த மனம் பித்தாக
பேதை மனம் கல்லாக
பெத்த மனம் பித்தாக
பேதை மனம் கல்லாக
தன் சொந்தம் வெறுத்தாளடா
பெண் : தந்தை மனம் தவித்திருக்க
பரமனுடன் துணை நின்ற
பார்வதியும் பெண்தானடா
ஆண் : காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
பெண் : காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
ஆண் : தனி மரமாய் நின்றவனை
தழுவுகின்ற பூங்கொடியாள்
சுகமென்ன கண்டாளடா
பெண் : கொடியுண்டு மரமுண்டு
குழந்தையெனும் கனியுண்டு
குறையென்ன கண்டேனடா
ஆண் : உனதன்னை துயர்தன்னை
நான் தீர்க்கும் முன்னாலே
உனதன்னை துயர்தன்னை
நான் தீர்க்கும் முன்னாலே
உன் கவலை கொண்டேனடா
பெண் : கண்ணனாக நீயிருக்க
மன்னனாக அவர் இருக்க
கவலைகள் எனக்கேதடா
ஆண் : காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
பெண் : காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
ஆரிராரிராரோ ஆராரிராரிராரோ
ஆராரிராரிராரோ....