Singer : P. Susheela

Music by : Vijaya Bhaskar

Female : Kaalam pala kaaththirunthom
Kanna perumaanae
Karpanaiyil vaazhnthirunthom
Kanna perumaanae
Kaalam pala kaaththirunthom
Kanna perumaanae
Karpanaiyil vaazhnthirunthom
Kanna perumaanae

Female : Kavalukku vanthu nindraai
Kanna perumaanae
Kai niraiya selvam thanthaai
Kanna perumaanae

Female : Kaalam pala kaaththirunthom
Kanna perumaanae
Karpanaiyil vaazhnthirunthom
Kanna perumaanae

Female : Ooraayiram kodi uyarnthaalum unnai
Oru naalum maravaamal pani seivom kannaa
Thondraamal thondri parisaaa vanthaai
Sugamaana vaazhvondru arul seithaai mannaa

Female : Aagaayam ettum vannam
Pugazh vantha pothum
Agangaaram endrumillai
Panivundu kannaa

Female : Kavalukku vanthu nindraai
Kanna perumaanae
Kai niraiya selvam thanthaai
Kanna perumaanae

Female : Paaruvaththil dheivangal tharum ennumpothu
Paranthaaman arulindri nalvaazhvu yaedhu
Oor vanthu uravendru uravaadum neram
Orr sollil adangaathu nee thantha vaazhvu

Female : Maanikka panthalittu manai kattinaalum
Kaanikkai unakkundu kannaana kannaa

Female : Kavalukku vanthu nindraai
Kanna perumaanae
Kai niraiya selvam thanthaai
Kanna perumaanae

Female : Thaayendrum saeyendrum santhosa paattu
Thanthaikku nee thantha nalvaakku seettu
Pattaadai nagaiyendru pillaikku pottu
Paarkkindra suganthannai nilaiyaakki kaattu

Female : Maangalyam thantha deivam pallaandu vaazha
Mangaatha arul vendum navaneedha kannaa

Female : Kaalam pala kaaththirunthom
Kanna perumaanae
Karpanaiyil vaazhnthirunthom
Kanna perumaanae

Female : Kavalukku vanthu nindraai
Kanna perumaanae
Kai niraiya selvam thanthaai
Kanna perumaanae….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

பெண் : காலம் பல காத்திருந்தோம்
கண்ணப் பெருமானே
கற்பனையில் வாழ்ந்திருந்தோம்
கண்ணப் பெருமானே
காலம் பல காத்திருந்தோம்
கண்ணப் பெருமானே
கற்பனையில் வாழ்ந்திருந்தோம்
கண்ணப் பெருமானே

பெண் : காவலுக்கு வந்து நின்றாய்
கண்ணப் பெருமானே
கை நிறைய செல்வம் தந்தாய்
கண்ணப் பெருமானே

பெண் : காலம் பல காத்திருந்தோம்
கண்ணப் பெருமானே
கற்பனையில் வாழ்ந்திருந்தோம்
கண்ணப் பெருமானே

பெண் : ஓராயிரம் கோடி உயர்ந்தாலும் உன்னை
ஒருநாளும் மறவாமல் பணி செய்வோம் கண்ணா
தோன்றாமல் தோன்றி பரிசாக வந்தாய்
சுகமான வாழ்வொன்று அருள் செய்தாய் மன்னா

பெண் : ஆகாயம் எட்டும் வண்ணம்
புகழ் வந்த போதும்
அகங்காரம் என்றுமில்லை
பணிவுண்டு கண்ணா

பெண் : காவலுக்கு வந்து நின்றாய்
கண்ணப் பெருமானே
கை நிறைய செல்வம் தந்தாய்
கண்ணப் பெருமானே

பெண் : பருவத்தில் தெய்வங்கள் தரும் எண்ணும்போது
பரந்தாமன் அருளின்றி நல்வாழ்வு ஏது
ஊர் வந்து உறவென்று உறவாடும் நேரம்
ஓர் சொல்லில் அடங்காது நீ தந்த வாழ்வு

பெண் : மாணிக்கப் பந்தலிட்டு மனைக் கட்டினாலும்
காணிக்கை உனக்குண்டு கண்ணான கண்ணா

பெண் : காவலுக்கு வந்து நின்றாய்
கண்ணப் பெருமானே
கை நிறைய செல்வம் தந்தாய்
கண்ணப் பெருமானே

பெண் : தாயென்றும் சேயென்றும் சந்தோஷப் பாட்டு
தந்தைக்கு நீ தந்த நல்வாக்குச் சீட்டு
பட்டாடை நகையென்று பிள்ளைக்கு போட்டு
பார்க்கின்ற சுகந்தன்னை நிலையாக்கிக் காட்டு

பெண் : மாங்கல்யம் தந்த தெய்வம் பல்லாண்டு வாழ
மங்காத அருள் வேண்டும் நவநீதக் கண்ணா

பெண் : காலம் பல காத்திருந்தோம்
கண்ணப் பெருமானே
கற்பனையில் வாழ்ந்திருந்தோம்
கண்ணப் பெருமானே

பெண் : காவலுக்கு வந்து நின்றாய்
கண்ணப் பெருமானே
கை நிறைய செல்வம் தந்தாய்
கண்ணப் பெருமானே……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here