Kaaviya Kadhal Song Lyrics is a track from Gomathiyin Kaadhalan Tamil Film– 1955, Starring T. R. Ramachandran, Savitri, K. A. Thangavelu and Others. This song was sung by A. M. Raja and Jikki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.
Singers : A. M. Raja and Jikki
Music by : G. Ramanathan
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Female : Kaaviya kadhal vaazhvin
Oviyam naamae oviyam naamae
Kaaviya kadhal vaazhvin
Oviyam naamae oviyam naamae
Male : Poovuzhagil entha oru paavalanum paadaatha
Poovulagil entha oru paavalanum paadaatha
Male : Kaaviya kadhal vaazhvin
Oviyam naamae oviyam naamae
Female : Vil valaiththu maalaiyidum
Vedhanai illaamalae
Vil valaiththu maalaiyidum
Vedhanai illaamalae
Sollazhagaal en manaththai
Kollai konda raamarae
Male : Maan ootti vaaraamal kaar ootti vanthaen
Maan ootti vaaraamal kaar ootti vanthaen
Thaen thinai maa tharaamal thiruvarul thanthaai
Female : Aa….aa…kaaviya kadhal vaazhvin
Oviyam naamae oviyam naamae
Female : Varumai vanthaalum vanaththilae ennai
Varumai vanthaalum vanaththilae ennai
Pirinthodi pogaatha nalamagaraja
Male : Nalamaga samaiyalae theriyaatha ennai
Naayaganaai yaettrarulum thamayanthi roja
Female : Nalamagaraja
Male : Thamayanthi roja
Female : Nalamagaraja
Male : Thamayanthi roja
Both : Aa….aa…kaaviya kadhal vaazhvin
Oviyam naamae oviyam naamae
Female : Kadhalai marakkaatha thushyanthan neerae
Male : Mothiram tholaikaatha sagunthalai neeyae
Female : Erumpaiyum kollaatha saththiyavaan neerae
Male : Emanaiyum kenjaatha saaviththiri neeyae
Saaviththiri neeyae….
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம்
பெண் : காவியக் காதல் வாழ்வின்
ஓவியம் நாமே ஓவியம் நாமே
காவியக் காதல் வாழ்வின்
ஓவியம் நாமே ஓவியம் நாமே
ஆண் : பூவுலகில் எந்த ஒரு பாவலனும் பாடாத
பூவுலகில் எந்த ஒரு பாவலனும் பாடாத
ஆண் : காவியக் காதல் வாழ்வின்
ஓவியம் நாமே ஓவியம் நாமே
பெண் : வில் வளைத்து மாலையிடும்
வேதனை இல்லாமலே
வில் வளைத்து மாலையிடும்
வேதனை இல்லாமலே
சொல்லழகால் என் மனத்தைக்
கொள்ளைக் கொண்ட ராமரே
ஆண் : மான் ஓட்டி வாராமல் கார் ஓட்டி வந்தேன்
மான் ஓட்டி வாராமல் கார் ஓட்டி வந்தேன்
தேன் திணை மா தராமல் திருவருள் தந்தாய்
பெண் : ஆ…ஆ…..காவியக் காதல் வாழ்வின்
ஓவியம் நாமே ஓவியம் நாமே…..
பெண் : வறுமை வந்தாலும் வனத்திலே என்னை
வறுமை வந்தாலும் வனத்திலே என்னை
பிரிந்தோடிப் போகாத நளமகராஜா
ஆண் : நளமக சமையலே தெரியாத என்னை
நாயகனாய் ஏற்றருளும் தமயந்தி ரோஜா
பெண் : நளமகராஜா
ஆண் : தமயந்தி ரோஜா
பெண் : நளமகராஜா
ஆண் : தமயந்தி ரோஜா
இருவர் : ஆ…ஆ…..காவியக் காதல் வாழ்வின்
ஓவியம் நாமே ஓவியம் நாமே…..
பெண் : காதலை மறக்காத துஷ்யந்தன் நீரே
ஆண் : மோதிரம் தொலைக்காத சகுந்தலை நீயே
பெண் : எறும்பையும் கொல்லாத சத்தியவான் நீரே
ஆண் : எமனையும் கெஞ்சாத சாவித்திரி நீயே
சாவித்திரி நீயே