Singer : S. Janaki

Music by : M. S. Vishwanathan

Female : Kannaa…kannaa…kannaaaaa…
Kannan manam ennavo kandu vaa thendralae…

Female : Gangai karai allavo kaadhalin mandramae…

Female : Andha meeraavaippol yenginen
Dhinam vaadaamal naan vaadinen…
Meeraavaippol yenginen
Dhinam vaadaamal naan vaadinen…

Female : Kannan manam ennavo kandu vaa thendralae…
Gangai karai allavo kaadhalin mandramae…

Female : Gaanathil…kuzhal naadhathil
Oru kandharva logathil enaikkondu serppaan
Monathil…andhi nerathil
Avan munnooru muthangal ondraaga ketpaan
Kaarkoondhal dhaan neevuvaan…
Adhil kalyaana sugam theduvaan
Andha kanathil en udhattil
Than udhattaal mutheduppaan
Vaanam endhan kaalil vandhu
Kolam podaadho…

Female : Kannan manam ennavo kandu vaa thendralae…
Gangai karai allavo kaadhalin mandramae…

Female : Mogathil… vizhi orathil
Kannan paarthaalum en nenjil pasiyaari pogum
Kaamathil…naduchaamathil
Imai moodaadha en kannil nadhi odi paayum
Mai kooda karaigindradhae…
Indru panneerum sudugindradhae…
Andhi iruttil en vizhikkul
Nindriruppaan kanmanikkul…
Ingum angum engum
Kaadhalil kannan kolangal..

Female : Kannan manam ennavo kandu vaa thendralae…
Gangai karai allavo kaadhalin mandramae…

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கண்ணா …கண்ணா….கண்ணா …
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே

பெண் : கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

பெண் : அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்…
மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்…

பெண் : கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

பெண் : கானத்தில் குழல் நாதத்தில் ஒரு
கந்தர்வ லோகத்தில் எனைக் கொண்டு சேர்ப்பான்
மோனத்தில் அந்தி நேரத்தில் அவன்
முந்நூறு முத்தங்கள் ஒன்றாகக் கேட்பான்
கார் கூந்தல் தனை நீவுவான் அதில்
கல்யாண சுகம் தேடுவான்
அந்த கணத்தில் என் உதட்டில்
தன் உதட்டால் முத்தெடுப்பான்
வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ….

பெண் : கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

பெண் : மோகத்தில் விழி ஓரத்தில் கண்ணன் பார்த்தாலும்
என் நெஞ்சில் பசி ஆறிப் போகும்
காமத்தில் நடு ஜாமத்தில் இமை மூடாத
என் கண்ணில் நதி ஓடிப் பாயும்
மை கூட கரைகின்றதே….
இன்று பன்னீரும் சுடுகின்றதே
அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான்
கண்மணிக்குள் இங்கும் அங்கும் எங்கும்
காதல் கண்ணன் கோலங்கள்…..

பெண் : கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here