Singers : K. J. Yesudas and K. S. Chitra
Music by : Vijay Anand
Lyrics by : Muthulingam
Kannaana kanmaniyae
Naanum unakkaagaththaanae
Kannaana kanmaniyae
Naanum unakkaagaththaanae
Ponnaana poonguyilae neeyum enakkagaththaanae
Ondraaga mudiyaatho
En vaazhkkai unnaalae vidiyaatho
Unnaasai edhirkaalam santhosham
Poovaaga malaraatho
Thanneeril aadum oodangal polae
Dhindaadum naaningae
Manam kondaadum naalaengae
Engae en jeevan nee angae
Kannaana kanmaniyae
Naanum unakkaagaththaanae
Ponnaana poonguyilae neeyum enakkagaththaanae
Karppooram ondru karam meethu nindru
Karaiyaamal Karaigirathe
Idhai ariyaatha ondru vazhi maari sendru
Alai mothi thavigirathe
Manam analaaga kothikkirathae
Paainthodum vellaam theeyaagi ponaal
Vayal vaazha vazhiyillaiyae
Antha sumaithaangi kallae sumaiyaagi ponaal
Adhu thaanga idamillaiyae
Idhai ariyaathu en pillaiyae
Vennilavum veezhmaa sooriyanum theyumaa
Vanga kadal kaayumaa intha manam maarumaa
Female : Thanneeril aadum odangal polae
Thindaadum naaningae
Manam kondaadum naalengae
Engae en jeevan nee angae
Kannaana kanmaniyae
Naanum unakkaagaththaanae
Ponnaana poonguyilae neeyum enakkagaththaanae
Thelivaana unmai oru naalil
Ingae veliyaagum neram varum
Adhu therigindra pothum en vaasal thedi
Un paatham nadanthu varum andru
Un sogam marainthu vidum
Illaatha oorukku pogaatha paathai
Payanangal povathenna
En ennangal yaavum thavaraagi ponaal
Naan saera thayakkamenna
Unnai naan saera thayakkamenna
Saththiyathin vaazhvilae
Thozhvi endrum illaiyae
Vettri mela vettriyae
Thedi varum naalaiyae
Thanneeril aadum odangal polae
Thindaadum naaningae
Manam kondaadum naalengae
Engae en jeevan nee angae
Kannaana kanmaniyae
Naanum unakkaagaththaanae
Ponnaana poonguyilae neeyum enakkagaththaanae
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஆண் : கண்ணான கண்மணியே
நானும் உனக்காகத்தானே
கண்ணான கண்மணியே
நானும் உனக்காகத்தானே
பொன்னான பூங்குயிலே நீயும் எனக்காகத்தானே
ஆண் : ஒன்றாக முடியாதோ
என் வாழ்க்கை உன்னாலே விடியாதோ
உன்னாசை எதிர்காலம் சந்தோஷ
பூவாக மலராதோ
ஆண் : தண்ணீரில் ஆடும் ஓடங்கள் போலே
திண்டாடும் நானிங்கே
மனம் கொண்டாடும் நாளெங்கே
எங்கே என் ஜீவன் நீ அங்கே
பெண் : கண்ணான கண்மணியே
நானும் உனக்காகத்தானே
பொன்னான பூங்குயிலே நீயும் எனக்காகத்தானே
ஆண் : கற்பூரம் ஒன்று கரம் மீது நின்று
கரையாமல் கரைகிறதே
இதை அறியாத ஒன்று வழி மாறி சென்று
அலை மோதி தவிக்கிறதே
மனம் அனலாக கொதிக்கிறதே..
பெண் : பாய்ந்தோடும் வெள்ளம் தீயாகி போனால்
வயல் வாழ வழியில்லையே
அந்த சுமைதாங்கி கல்லே சுமையாகி போனால்
அது தாங்க இடமில்லையே
இதை அறியாது என் பிள்ளையே
ஆண் : வெண்ணிலவும் வீழுமா சூரியனும் தேயுமா
வங்கக் கடல் காயுமா இந்த மனம் மாறுமா
பெண் : தண்ணீரில் ஆடும் ஓடங்கள் போலே
திண்டாடும் நானிங்கே
மனம் கொண்டாடும் நாளெங்கே
எங்கே என் ஜீவன் நீ அங்கே
ஆண் : கண்ணான கண்மணியே
நானும் உனக்காகத்தானே
பொன்னான பூங்குயிலே நீயும் எனக்காகத்தானே
ஆண் : தெளிவான உண்மை ஒரு நாளில் இங்கே
வெளியாகும் நேரம் வரும்
அது தெரிகின்ற போது என் வாசல் தேடி
உன் பாதம் நடந்து வரும் அன்று
உன் சோகம் மறைந்து விடும்
பெண் : இல்லாத ஊருக்கு போகாத பாதை
பயணங்கள் போவதென்ன
என் எண்ணங்கள் யாவும் தவறாகி போனால்
நான் சேர தயக்கமென்ன உன்னை
நான் சேர தயக்கமென்ன
ஆண் : சத்தியத்தின் வாழ்விலே
தோல்வி என்றும் இல்லையே
வெற்றி மேல் வெற்றியே
தேடி வரும் நாளையே
பெண் : தண்ணீரில் ஆடும் ஓடங்கள் போலே
திண்டாடும் நானிங்கே
மனம் கொண்டாடும் நாளெங்கே
எங்கே என் ஜீவன் நீ அங்கே
ஆண் : கண்ணான கண்மணியே
நானும் உனக்காகத்தானே
பொன்னான பூங்குயிலே நீயும் எனக்காகத்தானே