Singers : T. M. Soundararajan and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male : Kannazhagu singaarikku
Vizhi irandil kanni vaithaen
Kaadhalukku seedhanamaai
Idhayathaiyae kondu vandhaen

Male : Kannazhagu singaarikku
Vizhi irandil kanni vaithaen
Kaadhalukku seedhanamaai
Idhayathaiyae kondu vandhaen
Amudhae senthaenae thirunaal kandaenae

Female : Ponnazhagu atthaanukku
Ila manadhai alli thandhaen
Poovidhazhin osaiyilae
Kadhai kadhaiyaai solla vandhaen

Female : Ponnazhagu atthaanukku
Ila manadhai alli thandhaen
Poovidhazhin osaiyilae
Kadhai kadhaiyaai solla vandhaen
Thalaivaa vandhaenae enai naan thandhaenae

Male : Kalla vizhi mogam enna mozhi paesum
Innum enna naanam ennodu

Female : Anji nindra maadhu andhi varum podhu
Mella vidum thoodhu kannodu

Male : Panjanaiyin maedaiyil
Enai thodum anbu manam

Female : Nenjamenum oonjalil
Dhinam varum inba sugam

Male : Amudhae senthaenae thirunaal kandaenae

Female : Minnum ezhil thangam mannavanin angam
Moondru thamizh sangam ingae thaan

Male : Dhaevi udal engum thaenaruvi pongum
Aasai manam yaengum angae thaan

Female : Thottavudan maeniyil
Mazhai mugil minnal varum

Male : Thulli varum kaigalo
Thalir udal pinni varum

Female : Thalaivaa vandhaenae enai naan thandhaenae

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்

ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்
அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே

பெண் : பொன்னழகு அத்தானுக்கு
இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே
கதை கதையாய் சொல்ல வந்தேன்

பெண் : பொன்னழகு அத்தானுக்கு
இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே
கதை கதையாய் சொல்ல வந்தேன்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே

ஆண் : கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்
கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும்
இன்னும் என்ன நாணம் என்னோடு

பெண் : அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது
அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது
மெல்ல வரும் தூது கண்ணோடு

ஆண் : பஞ்சணையின் மேடையில்
எனை தொடும் அன்பு மனம்

பெண் : நெஞ்சமெனும் ஊஞ்சலில்
தினம் வரும் இன்ப சுகம்

ஆண் : பஞ்சணையின் மேடையில்
எனை தொடும் அன்பு மனம்

பெண் : நெஞ்சமெனும் ஊஞ்சலில்
தினம் வரும் இன்ப சுகம்

ஆண் : அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே

ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்

பெண் : மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
மூன்று தமிழ் சங்கம் இங்கே தான்

ஆண் : தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்
தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும்
ஆசை மனம் ஏங்கும் அங்கேதான்

பெண் : தொட்டவுடன் மேனியில்
மழைமுகில் மின்னல் வரும்

ஆண் : துள்ளி வரும் கைகளோ
தளிர் உடல் பின்னி வரும்

பெண் : தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே

பெண் : பொன்னழகு அத்தானுக்கு
இளமனதை அள்ளி தந்தேன்
பூவிதழின் ஓசையிலே
கதை கதையாய் சொல்ல வந்தேன்

ஆண் : கண்ணழகு சிங்காரிக்கு
விழி இரண்டில் கண்ணி வைத்தேன்
காதலுக்கு சீதனமாய்
இதயத்தையே கொண்டு வந்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here