Singer : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Kaathalukku
Male : Naalu pakkam
Female : Kaalgalukku
Male : Naalu nadai
Female : Madharukku
Male : Naalu gunam
Female : Mai vizhikku
Male : Naalu mozhi

Female : Kaathalukku naalu pakkam
Kaalgalukku naalu nadai
Madharukku naalu gunam
Mai vizhikku naalu mozhi

Male : Kangalinaal eluthuvadhae mudhal pakkam
Kalanthu kollum idhayangalae irandam pakkam
Female : Ennuvadhai solluvadhae moondram pakkam
Eeruyirum inaivadhu thaan naalam pakkam

Male : Kaathalukku naalu pakkam

Female : Aasai midhakaiyilae anna nadai podum
Aruginil vaa vendraal chinna nadai podum
Male : Kattilukku sellgaiyiilae kanni nadai podum
Kaar irulil panjanaiyil enna nadai podum

Female : Kaalgalukku naalu nadai

Male : Kaadhalanin paarvaiyilae thalai kavilum oru gunam
Kaigalukkul irukkaiyilaekan maraikkum maru gunam
Female : Alli varum ninaivugalai adakki vaikkum oru gunam
Anaikkaiyilae athanaiyum maranthirukkum marugunam

Male : Madharukku naalu gunam

Female : Thanakkul thanimaiyilae sirikkum mozhi ondru
Thalaimagam kangalukkum anuppum mohi ondru
Male : Aasai malar poothathu pol veesum mozhi ondru
Aduthavarkku theriyaamal pesum mozhi ondru

Female : Kaathalukku naalu pakkam
Kaalgalukku naalu nadai
Male : Madharukku naalu gunam
Mai vizhikku naalu mozhi

Hummming : Both ….

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : காதலுக்கு
ஆண் : நாலு பக்கம்
பெண் : கால்களுக்கு
ஆண் : நாலு நடை
பெண் : மாதருக்கு
ஆண் : நாலு குணம்
பெண் : மைவிழிக்கு
ஆண் : நாலு மொழி

பெண் : காதலுக்கு நாலு பக்கம் கால்களுக்கு நாலு நடை
மாதருக்கு நாலு குணம் மைவிழிக்கு நாலு மொழி

ஆண் : கண்களினால் எழுதுவதே முதல் பக்கம்
கலந்து கொள்ளும் இதயங்களே இரண்டாம் பக்கம்
பெண் : எண்ணுவதைச் சொல்லுவதே மூன்றாம் பக்கம்
ஈருயிரும் இணைவதுதான் நாலு பக்கம்

ஆண் : காதலுக்கு நாலு பக்கம்

பெண் : ஆசை மிதக்கையிலே அன்னநடை போடும்
அருகினில் வாவென்றால் சின்னநடை போடும்
ஆண் : கட்டிலுக்குச் செல்கையிலே கன்னி நடை போடும்
காரிருளில் பஞ்சணையில் என்ன நடை போடும்

பெண் : கால்களுக்கு நாலு நடை

ஆண் : காதலனின் பார்வையிலே தலை கவிழும் ஒரு குணம்
கைகளுக்குள் இருக்கையிலே கண் மறைக்கும் மறு குணம்
பெண் : அள்ளி வரும் நினைவுகளை அடக்கி வைக்கும் ஒரு குணம்
அணைக்கையிலே அத்தனையும் மறந்திருக்கும் மறுகுணம்

ஆண் : மாதருக்கு நாலு குணம்

பெண் : தனக்குள் தனிமையிலே சிரிக்கும் மொழி ஒன்று
தலைமகன் கண்களுக்கும் அனுப்பும் மொழி ஒன்று
ஆண் : ஆசைமலர் பூத்ததுபோல் வீசும் மொழி ஒன்று
அடுத்தவர்க்குத் தெரியாமல் பேசும் மொழி ஒன்று

பெண் : காதலுக்கு நாலு பக்கம் கால்களுக்கு நாலு நடை
ஆண் : மாதருக்கு நாலு குணம் மைவிழிக்கு நாலு மொழி

முனகல் : இருவர் ……………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here