Singers : G. V. Prakash and Saindhavi
Music by : Karthik Raja
Lyrics by : Gnanakaravel
Male : Kaththi koovudhu kaadhal
Unai katti thazhuvudhu kangal
Male : Oraandu oththigai paarthen
Kaadhal naan solla
Or nodiyil kanavaai kalaindhadhu
Engo nee sella
Male : Kanneeril kooda andru eeram illai
Kaalathin thozhanaaga naanillai
Hoo oo oo ho oooo
Hoo oo oo oo ho o..(2)
Male : Engae naan povadhu
Nenjodu kelivigal
Nanjaagi ponadhae
Naan kanda kanvugal
Male : Mannil or bommai seidhae
Kaadhal per soottinen
Andha bommaiku needhaan
Vandhu uyiroottinaai
Male : Kaalam thavariya pinnaalae
Kaadhalai solla vandhenae
Neeram thavariya rayilaaga
Neeyo sendraayae
Male : Pirivin thuyarathil valiyodu
Thiruvizha nerisalil kuzhandhai pol
Neengaa ninaivil tholaindhenae
Unnaal vaazhndhenae
Male : Paarkkaadha podhum
Pesaadha podhum
Nam kaadhal nenjai thaalaattum
Hoo oo hoo oo ho oo oo
Hoo oo oo hoo
Female : Paaraiku adiyilae
Theraigal vaazhumae
Baarathai baaramaai
Ennaadhae thozhanae
Female : Puyalil saaindhaalum naanal
Meelum odiyaamalae
Nadhiyin vellaththil meengal
Neendhum oyaamalae
Female : Otrai siragaai nindrenae
Innoru siragaai serndhaayae
Yeno parandhidum munnaalae
Vittu chendraayae
Female : Kaalam veesiya kallaalae
Kalangiya kulamena aanenae
Meendum un mugam paarthenae
Nadhiyaai thelindhenae
Both : Ethanai oodal
Ethanai thedal
Aththanai kaadhal nenjodu
Hoo oo hoo oo ho oo oo
Hoo oo oo hoo
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி
இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா
பாடல் ஆசிரியர் : ஞானகரவேல்
ஆண் : கத்தி கூவுது காதல்
 உனை கட்டி தழுவுது கண்கள்
ஆண் : ஓராண்டு ஒத்திகை பார்த்தேன்
 காதல் நான் சொல்ல
 ஓர் நொடியில் கனவாய்கலைந்தது
 எங்கோ நீ செல்ல
ஆண் : கண்ணீரில் கூட அன்று ஈரம் இல்லை
 காலத்தின் தோழனாக நானில்லை
 ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
 ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ..(2)
ஆண் : எங்கே நான் போவது
 நெஞ்சோடு கேள்விகள்
 நஞ்சாகி போனதே
 நான் கண்ட கனவுகள்
ஆண் : மண்ணில் ஓர் பொம்மை செய்தே
 காதல் பேர் சூட்டினேன்
 அந்த பொம்மைக்கு நீதான்
 வந்து உயிரூட்டினாய்
ஆண் : காலம் தவறிய பின்னாலே
 காதலை சொல்ல வந்தேனே
 நேரம் தவறிய ரயிலாக
 நீயோ சென்றாயே
ஆண் : பிரிவின் துயரத்தில் வலியோடு
 திருவிழா நெரிசலில் குழந்தை போல்
 நீங்கா நினைவில் தொலைந்தேனே
 உன்னால் வாழ்ந்தேனே
ஆண் : பார்க்காத போதும்
 பேசாதா போதும்
 நம் காதல் நெஞ்சை தாலாட்டும்
 ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ
 ஹோ ஓ ஓ ஹோ ஓ
பெண் : பாறைக்கு அடியிலே
 தேரைகள் வாழுமே
 பாரத்தை பாரமாய்
 எண்ணாதே தோழனே
பெண் : புயலில் சாய்ந்தாலும் நாணல்
 மீளும் ஒடியாமலே
 நதியின் வெள்ளத்தில் மீன்கள்
 நீந்தும் ஓயாமலே
பெண் : ஒற்றை சிறகாய் நின்றேனே
 இன்னொரு சிறகாய் சேர்ந்தாயே
 ஏனோ பறந்திடும் முன்னாலே
 விட்டு சென்றாயே
பெண் : காலம் வீசிய கல்லாலே
 கலங்கிய குளமென ஆனேனே
 மீண்டும் உன் முகம் பார்த்தேனே
 நதியாய் தெளிந்தேனே
இருவர் : எத்தனை ஊடல்
 எத்தனை தேடல்
 அத்தனை காதல் நெஞ்சோடு
 ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ
 ஹோ ஓ ஓ ஹோ ஓ



