Singer : L. R. Eswari

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Female : Katti thangam mutthu pandhal jollikkindradhu
Kannam renndum muttham sindha thudikkindradhu
Kannai kondu vaa madhu kinnam kondu vaa
Kannam kondu vaa nenjil ennam kondu vaa

Female : Katti thangam mutthu pandhal jollikkindradhu
Kannam renndum muttham sindha thudikkindradhu

Female : Thaenidai ooriya maadhulai poal idhai alli edu
Aadaiyil moodiya thaamarai poovinai killi edu
Noolidai meedhinil aayiram naadagam solli vidu
Thaediya naadagam illaiyendral idhai thalli vidu

Female : Eduthu koduthu vidu Koduthu rasithu vidu
Rasitthu muditthu vidu vaa..vaa..vaa

Female : Katti thangam mutthu pandhal jollikkindradhu
Kannam renndum muttham sindha thudikkindradhu

Female : Kaaloru paadhiyum kaioru paadhiyum pinni vidu
Kaadhalin oviyam paavaiyin maeniyil minnividu
Yaeri boathaiyil aayiram varnanai
Idhai vearoru pennidam keatathunda endru sollividu

Female : Iravai nadakka vidu uravai valarthu vidu
Kadhaiyai mudithu vidu vaa..vaa..vaa

Female : Katti thangam mutthu pandhal jollikkindradhu
Kannam renndum muttham sindha thudikkindradhu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : கட்டித் தங்கம் முத்துப் பந்தல் ஜொலிக்கின்றது
கன்னம் ரெண்டும் முத்தம் சிந்தத் துடிக்கின்றது
கண்ணைக் கொண்டு வா மதுக்கிண்ணம் கொண்டு வா
கன்னம் கொண்டு வா நெஞ்சில் எண்ணம் கொண்டு வா

பெண் : கட்டித் தங்கம் முத்துப் பந்தல் ஜொலிக்கின்றது
கன்னம் ரெண்டும் முத்தம் சிந்தத் துடிக்கின்றது

பெண் : தேனிடை ஊறிய மாதுளைபோல் இதை அள்ளி எடு
ஆடையில் மூடிய தாமரைப் பூவினைக் கிள்ளி எடு
நூலிடை மீதினில் ஆயிரம் நாடகம் சொல்லி விடு
தேடிய நாடகம் இல்லையென்றால் இதைத் தள்ளி விடு

பெண் : எடுத்துக் கொடுத்து விடு கொடுத்து ரசித்து விடு
ரசித்து முடித்து விடு வா…….வா……வா…….!

பெண் : கட்டித் தங்கம் முத்துப் பந்தல் ஜொலிக்கின்றது
கன்னம் ரெண்டும் முத்தம் சிந்தத் துடிக்கின்றது

பெண் : கால் ஒரு பாதியும் கையொரு பாதியும் பின்னவிடு
காதலின் ஓவியம் பாவையின் மேனியில் மின்னவிடு
ஏறிய போதையில் ஆயிரம் வர்ணனை
இதை வேறொரு பெண்ணிடம் கேட்டதுண்டா என்று சொல்லிவிடு

பெண் : இரவை நடக்க விடு உறவை வளர்த்து விடு
கதையை முடித்து விடு வா…….வா……வா……..!

பெண் : கட்டித் தங்கம் முத்துப் பந்தல் ஜொலிக்கின்றது
கன்னம் ரெண்டும் முத்தம் சிந்தத் துடிக்கின்றது

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Vettaiyan"Manasilaayo Song: Click Here