Singer : Ilayaraja

Music Director : Ilayaraja

Lyricist : Gangai Amaran

Humming : ……………….

Male : Kaavalkkaara kaavalkkaara
Kaadu kakkum kaavalkkaara
Naadhiyatha naattai ingae
Yaaru vandhu kaakka poraa

Male : Ezha padum paadu
Engalukku yaaru
Indha nila maarum kaalam thaan
Eppozhudhu

Male : Kaavalkkaara kaavalkkaara
Kaadu kakkum kaavalkkaara

Male : Mannilae nanjai undu
Punjaiyum karutha kaadum undu
Mannilae kottum mazha
Nanjaikkum mattumae peivadhillai

Male : Thannikkum kaathukkum thaan
Baedhangal enbadhu endrumae illae
Mannilae makkalilae
Yettra irakkangal maaravillae

Male : Naadhiyum attra
Ezhaigatkku jaadhi edhukku
Needhiyum attra naattil
Naamum vaazhvadhu edharkku
Idhu maara naadu thaera
Nalla vazhithaan kaattidappaa

Male : Kaavalkkaara kaavalkkaara
Kaadu kakkum kaavalkkaara
Naadhiyatha naattai ingae
Yaaru vandhu kaakka poraa

Male : Nalla payir kaapadharkku
Thottathukkum oru vaeli undu
Vaeliyaiyum thaandi vandhu
Aadum maadum angu meivadhundu

Male : Manushan vaeli ittaa
Aadum maadum meera nyaayam undu
Vaeliyae thinbatharkku
Vaeliyum kaavalum ennathukku

Male : Mathavanukku buthi solla
Buthi irukku
Thanna thirutha
Buthimathi enga irukku
Idhu maara naadu thaera
Nalla vazhithaan kaattidappaa

Male : Kaavalkkaara kaavalkkaara
Kaadu kakkum kaavalkkaara
Naadhiyatha naattai ingae
Yaaru vandhu kaakka poraa

Male : Ezha padum paadu
Engalukku yaaru
Indha nila maarum kaalam thaan
Eppozhudhu

Male : Kaavalkkaara kaavalkkaara
Kaadu kakkum kaavalkkaara
Naadhiyatha naattai ingae
Yaaru vandhu kaakka poraa

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : கங்கை அமரன்

முனங்கல் : ……………….

ஆண் : காவல்காரா காவல்காரா
காடு காக்கும் காவல்காரா
நாதியத்த நாட்டை இங்கே
யாரு வந்து காக்க போறா

ஆண் : ஏழ படும்பாடு
எங்களுக்கு யாரு
இந்த நில மாறும் காலம்தான்
எப்பொழுது

ஆண் : காவல்காரா காவல்காரா
காடு காக்கும் காவல்காரா

ஆண் : மண்ணிலே நஞ்சை உண்டு
புஞ்சையும் கருத்த காடும் உண்டு
மண்ணிலே கொட்டும் மழ
நஞ்சைக்கும் மட்டுமே பெய்வதில்லே

ஆண் : தண்ணிக்கும் காத்துக்கும்தான்
பேதங்கள் என்பது என்றும் இல்லே
மண்ணிலே மக்களிலே
ஏற்ற இறக்கங்கள் மாறவில்லே

ஆண் : நாதியும் அற்ற
ஏழைகட்கு ஜாதி எதுக்கு
நீதியும் அற்ற நாட்டில்
நாமும் வாழ்வதெதற்க்கு
இது மாற நாடு தேற
நல்ல வழிதான் காட்டிடப்பா

ஆண் : காவல்காரா காவல்காரா
காடு காக்கும் காவல்காரா
நாதியத்த நாட்டை இங்கே
யாரு வந்து காக்க போறா

ஆண் : நல்ல பயிர் காப்பதற்க்கு
தோட்டதுக்கும் ஒரு வேலி உண்டு
வேலியையும் தாண்டி வந்து
ஆடும் மாடும் அங்கு மேய்வதுண்டு

ஆண் : மனுஷன் வேலி இட்டா
ஆடும் மாடும் மீற நியாயமுண்டு
வேலியே தின்பதற்க்கு
வேலியும் காவலும் என்னத்துக்கு

ஆண் : மத்தவனுக்கு புத்தி சொல்ல
புத்தியிருக்கு
தன்னத் திருத்த
புத்திமதி எங்க இருக்கு
இது மாற நாடு தேற
நல்ல வழிதான் காட்டிடப்பா

ஆண் : காவல்காரா காவல்காரா
காடு காக்கும் காவல்காரா
நாதியத்த நாட்டை இங்கே
யாரு வந்து காக்க போறா

ஆண் : ஏழ படும்பாடு
எங்களுக்கு யாரு
இந்த நில மாறும் காலம்தான்
எப்பொழுது

ஆண் : காவல்காரா காவல்காரா
காடு காக்கும் காவல்காரா
நாதியத்த நாட்டை இங்கே
யாரு வந்து காக்க போறா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here