Singer : Vani Jairam

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Female : Kettaal ketta varam tharum thaayae un saranam
Kettaal ketta varam tharum thaayae un saranam
Thedi varum anbarukku dhurkkaiyamman arilirukkum
Theril varum ammanukku aadharikkum manamirukku

Female : Kettaal ketta varam tharum thaayae un saranam

Female : Naalvagai vedhangalum oru sakthiyai kaattuthammaa
Iru vinaigal oottuthammaa
Thirisooliyai pottruthammaa

Female : Kettaal ketta varam tharum thaayae un saranam
Thedi varum anbarukku thurkkaiyamman arilirukkum

Female : Aayiram peyarudaiyaal aayiram kannudaiyaal
Aayiram kayudaiyaal aayiram vadivudaiyaal
Maavilakkil kudiyiruppaal manthiraththil koluviruppaal
Kovilukkul iruntha vannam kaavalukku thaaniruppaal

Female : Kettaal ketta varam tharum thaayae un saranam
Thedi varum anbarukku thurkkaiyamman arilirukkum

Female : Maasiyil therottam panguniyil theppottam
Chiththiraiyil poochoriyal eththaniyo ursavangal
Sevadiyai thozhutha vannam devi pugazh padiduvaar
Kaavadigal soodiduvaar karagangal aadiduvaar

Female : Kettaal ketta varam tharum thaayae un saranam
Thedi varum anbarukku thurkkaiyamman arilirukkum
Dhurkkaiyamman arilirukkum
Dhurkkaiyamman arilirukkum

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம்
கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம்
தேடி வரும் அன்பருக்கு துர்க்கையம்மன் அருளிருக்கும்
தேரில் வரும் அம்மனுக்கு ஆதரிக்கும் மனமிருக்கு

பெண் : கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம்….

பெண் : நால்வகை வேதங்களும் ஒரு சக்தியை காட்டுதம்மா
இரு வினைகளை ஓட்டுதம்மா
திரிசூலியைப் போற்றுதம்மா

பெண் : கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம்
தேடி வரும் அன்பருக்கு துர்க்கையம்மன் அருளிருக்கும்

பெண் : ஆயிரம் பெயருடையாள் ஆயிரம் கண்ணுடையாள்
ஆயிரம் கையுடையாள் ஆயிரம் வடிவுடையாள்
மாவிளக்கில் குடியிருப்பாள் மந்திரத்தில் கொலுவிருப்பாள்
கோவிலுக்குள் இருந்த வண்ணம் காவலுக்கு தானிருப்பாள்

பெண் : கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம்
தேடி வரும் அன்பருக்கு துர்க்கையம்மன் அருளிருக்கும்

பெண் : மாசியில் தேரோட்டம் பங்குனியில் தெப்போட்டம்
சித்திரையில் பூச்சொரியல் எத்தனையோ உற்சவங்கள்
சேவடியைத் தொழுத வண்ணம் தேவி புகழ் பாடிடுவார்
காவடிகள் சூடிடுவார் கரகங்கள் ஆடிடுவார்……

பெண் : கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம்
தேடி வரும் அன்பருக்கு துர்க்கையம்மன் அருளிருக்கும்
துர்க்கையம்மன் அருளிருக்கும்
துர்க்கையம்மன் அருளிருக்கும்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

Check New "Badass" song lyrics from LEO: Click Here