Singers : Mahalakshmi Iyer and Shriram Iyer

Music by :  Shankar-Ehsaan-Loy

Female : Oo… komaanae
Oo.. endhan komaanae
Undhan maan ini naandhaanae

Female : Oo.. endhan komaanae
Undhan maan ini naandhaanae

Female : Unadhu kaattil naan nuzhaindhenae..ae..
Unadhu kaattil naan nuzhaindhenae
Vanathin vanappilae tholaindhenae

Female : Piragu undhan vizhigalai kandu
Mayangi mayangiyae vizhundhenae

Female : Undhan vaalin oosai kettae…ae….
Undhan vaalin oosai kettae…
Kanavinai niruthiyae thidukkittu vizhithenae

Female : Oo… komaanae
Undhan maan ini naandhaanae
Oo..oo… endhan komaanae
Undhan maan ini naandhaanae

Chorus : Komaanae..ae…komaanae…ae..
Komaanae…ae…endhan komaanae
Um vegam meedhu ival
Mogam kondadhai
Dhegam cholludhae….
Ival dhegam meedhu neer
Mogam kondadhai um
Vegam cholludhae komaanae…

Female : Oo…. komaanae…ae…..

Female : Unadhu ninaivugal
Enadhunavaaga..aa…
Unadhu ninaivugal enadhunavaaga
Udalum uyirum naan niraindhenae
Unadhu nizhal endhan thugilena maara
Ulagam ulagam naan marandhenae

Female : Oh undhan vaalin oosai kettae…
Ae….hoo..
Undhan vaalin oosai kettae…
Kanavinai niruthiyae thidukkittu vizhithenae

Female : Oo… komaanae
Undhan maan ini naandhaanae
Oo..oo… endhan komaanae
Undhan maan ini naandhaanae

Male : Chiru koondil adaivaayaa..
Perungaattil thirivaayaa..
Iru rekkai virippaayaa..
Ilamaanae parappaayaa..

Female : Pudhu uyarangalil en uyir parakka
Nee cheidhaayoo
Pudhu ulagangalai en vizhigalilae
Nee thirandhaayoo…

Female : Oh kanavum nanavum
Inaiyum idathil
Ennai neeyum kuzhambida cheidhaayoo

Female : Oo…komaanae
Endhan komaanae…ae….
Komaanae…ae…komaanae…
Undhan maan ini naandhaanae
Ennai konjum vedan neethaanae
Hmmm mmm komaanae………….

பாடகர்கள் : மகாலட்சுமி ஐயர் மற்றும் ஸ்ரீராம் ஐயர்

இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்

பெண் : ஓ… கோமானே
ஓ… எந்தன் கோமானே
உந்தன் மான் இனி நான்தானே

பெண் : ஓ… எந்தன் கோமானே
உந்தன் மான் இனி நான்தானே

பெண் : உனது காட்டில் நான் நுழைந்தேனே..ஏ…
உனது காட்டில் நான் நுழைந்தேனே
வனத்தின் வனப்பிலே தொலைந்தேனே

பெண் : பிறகு உந்தன் விழிகளைக் கண்டு
மயங்கி மயங்கியே விழுந்தேனே

பெண் : உந்தன் வாளின் ஓசை கேட்டே…
உந்தன் வாளின் ஓசை கேட்டே…
கனவினை நிறுத்தியே திடுக்கிட்டு விழித்தேனே

பெண் : ஓ….கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
ஓ…ஓ….எந்தன் கோமானே
உந்தன் மான் இனி நான்தானே

குழு : கோமானே…ஏ….கோமானே…ஏ….
கோமானே…ஏ….எந்தன் கோமானே
உம் வேகம் மீது இவள்
மோகம் கொண்டதை
தேகம் சொல்லுதே….
இவள் தேகம் மீது நீர்
மோகம் கொண்டதை உம்
வேகம் சொல்லுதே கோமானே…

பெண் : ஓ… கோமானே…ஏ…..

பெண் : உனது நினைவுகள்
எனதுணவாக…ஆஅ….
உனது நினைவுகள் எனதுணவாக
உடலும் உயிரும் நான் நிறைந்தேனே
உனது நிழல் எந்தன் துகிலென மாற
உலகம் உலகம் நான் மறந்தேனே

பெண் : ஓ உந்தன் வாளின் ஓசை கேட்டே…
ஏ…ஹோ….
உந்தன் வாளின் ஓசை கேட்டே…
கனவினை நிறுத்தியே திடுக்கிட்டு விழித்தேனே

பெண் : ஓ….கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
ஓ…ஓ….எந்தன் கோமானே
உந்தன் மான் இனி நான்தானே

ஆண் : சிறு கூண்டில் அடைவாயா…
பெருங்காட்டில் திரிவாயா…
இரு றெக்கை விரிப்பாயா…
இளமானே பறப்பாயா…

பெண் : புது உயரங்களில் என் உயிர் பறக்க
நீ செய்தாயோ
புது உலகங்களை என் விழிகளிலே
நீ திறந்தாயோ….

பெண் : ஓ கனவும் நனவும்
இணையும் இடத்தில்
என்னை குழம்பிடச் செய்தாயோ

பெண் : ஓ… கோமானே
எந்தன் கோமானே…ஏ….
கோமானே…ஏ….கோமானே
உந்தன் மான் இனி நான்தானே
என்னைக் கொஞ்சும் வேடன் நீதானே
ஹ்ம்ம் ம்ம்ம் கோமானே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here