Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Madhvilae pazhaiyathu mangaiyil pudhiyathu
Madhvilae pazhaiyathu mangaiyil pudhiyathu
Indru naan tharuvathu endrumae iniyathu
Indru naan tharuvathu endrumae iniyathu
Madhvilae pazhaiyathu mangaiyil pudhiyathu
Anthiyilae oru maaligai
Manjaththil malligai malaraada
Azhagiya kinnaththil palavagai
Madhurasam anantha kavipaada
Anthiyilae oru maaligai
Manjaththil malligai malaraada
Azhagiya kinnaththil palavagai
Madhurasam anantha kavipaada
Chandhiran oliyil mangaiyin maeni
Thalathala vendraada
Thaavi vizhunthoru kaaviyam seivom
Aavi kalanthaada….
Chandhiran oliyil mangaiyin maeni
Thalathala vendraada
Thaavi vizhunthoru kaaviyam seivom
Aavi kalanthaada….
Madhvilae pazhaiyathu mangaiyil pudhiyathu
Indru naan tharuvathu endrumae iniyathu
Indru naan tharuvathu endrumae iniyathu
Paraseegamennum naattil vaaznthathoru
Paadum paravai andro…oo…oo…
Paththi pengalthanai suttri vaiththu
Vilaiyaadum paravai andro….oo…oo…
Paraseegamennum naattil vaaznthathoru
Paadum paravai andro…oo…oo…
Paththi pengalthanai suttri vaiththu
Vilaiyaadum paravai andro….oo…oo…
Kadhal illaiyenil
Vaazhvil yaedhu sugam
Kaanum aasai undo
Kannum kannum oru pennum
Ullavarai veru ennam undo
Madhvilae pazhaiyathu mangaiyil pudhiyathu
Thoorigaiyai aadavittu mael vizhunthu
Moochu vittu naal muzhuthum aadi varalaam
Nooru vargai aana pinnum veru vagai
Vendumendru devanukku dhoothu vidalaam
Paalirukkum maeni idhu
Panju padumpaadu pada panthu vilaiyaadi vidalaam
Paalirukkum maeni idhu
Panju padumpaadu pada panthu vilaiyaadi vidalaam
Paadhi varai solli vittaen meedhiyai
Kaanbatharkku palliyarai sendru vidalaam
Madhvilae pazhaiyathu mangaiyil pudhiyathu
Indru naan tharuvathu endrumae iniyathu
Indru naan tharuvathu endrumae iniyathu
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : மதுவிலே பழையது மங்கையில் புதியது
மதுவிலே பழையது மங்கையில் புதியது
இன்று நான் தருவது என்றுமே இனியது
இன்று நான் தருவது என்றுமே இனியது
பெண் : மதுவிலே பழையது மங்கையில் புதியது
பெண் : அந்தியிலே ஒரு மாளிகை மஞ்சத்தில்
மல்லிகை மலராட
அழகியக் கிண்ணத்தில் பலவகை மதுரசம்
ஆனந்தக் கவிபாட
பெண் : அந்தியிலே ஒரு மாளிகை மஞ்சத்தில்
மல்லிகை மலராட
அழகியக் கிண்ணத்தில் பலவகை மதுரசம்
ஆனந்தக் கவிபாட
பெண் : சந்திரன் ஒளியில் மங்கையின் மேனி
தளதள வென்றாட
தாவி விழுந்தொரு காவியம் செய்வோம்
ஆவி கலந்தாட .......
பெண் : சந்திரன் ஒளியில் மங்கையின் மேனி
தளதள வென்றாட
தாவி விழுந்தொரு காவியம் செய்வோம்
ஆவி கலந்தாட.......
பெண் : மதுவிலே பழையது மங்கையில் புதியது
இன்று நான் தருவது என்றுமே இனியது
இன்று நான் தருவது என்றுமே இனியது
பெண் : பாரசீகமென்னும் நாட்டில் வாழ்ந்ததொரு
பாடும் பறவை அன்றோ...ஓ.....ஓ......
பத்துப் பெண்கள்தனை சுற்றி வைத்து
விளையாடும் பறவை அன்றோ...ஓ.....ஓ......
பெண் : பாரசீகமென்னும் நாட்டில் வாழ்ந்ததொரு
பாடும் பறவை அன்றோ...ஓ.....
பத்துப் பெண்கள்தனை சுற்றி வைத்து
விளையாடும் பறவை அன்றோ...ஓ.....
பெண் : காதல் இல்லையெனில்
வாழ்வில் ஏது சுகம்
காணும் ஆசை உண்டோ
கண்ணும் கண்ணும் ஒரு பெண்ணும்
உள்ளவரை வேறு எண்ணம் உண்டோ
பெண் : மதுவிலே பழையது மங்கையில் புதியது
பெண் : தூரிகையை ஆடவிட்டு மேல் விழுந்து
மூச்சு விட்டு நாள் முழுதும் ஆடி வரலாம்
நூறுவகை ஆன பின்னும் வேறு வகை
வேண்டுமென்று தேவனுக்கு தூது விடலாம்
பெண் : பாலிருக்கும் மேனி இது
பஞ்சு படும்பாடு பட பந்து விளையாடி விடலாம்
பாலிருக்கும் மேனி இது
பஞ்சு படும்பாடு பட பந்து விளையாடி விடலாம்
பாதி வரை சொல்லி விட்டேன் மீதியை
காண்பதற்கு பள்ளியறை சென்று விடலாம்
பெண் : மதுவிலே பழையது மங்கையில் புதியது
இன்று நான் தருவது என்றுமே இனியது
இன்று நான் தருவது என்றுமே இனியது