Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male : Malarae ennenna kolam…
Edhanaal en meedhu kobam…

Male : Malarae ennenna kolam…
Edhanaal en meedhu kobam…
Dhinamum vevvaeru niramo
Idhu thaan unnodu azhago
Malarae ennenna kolam
Malarae nalamaa…malarae nalamaa

Male : Vasantham unnodu sondham
Unakkae ennodu bandham
Vasantham unnodu sondham
Unakkae ennodu bandham
Ezhmaiyin ilaiyudhiru kaalathil ingae
Poo yaedhu kaai yaedhu

Male : Ninaithaal en paadha dhooram
Enakkaen un meedhu mogam
Thiruchabai yaeridum archanai malarae
Nee engae naan engae
Thiruchabai yaeridum archanai malarae
Nee engae naan engae
Nee engae naan engae

Male : Malarae ennenna kolam…
Edhanaal en meedhu kobam…
Dhinamum vevvaeru niramo
Idhu thaan unnodu azhago
Malarae ennenna kolam
Malarae nalamaa…malarae nalamaa

Male : Nilavai vaanathil paarthu
Arugae vaavendru kaettu
Nilavai vaanathil paarthu
Arugae vaavendru kaettu
Azhudhidum kuzhandhaiyin ambuli paruvam
Ennodu naan kandaen

Male : Irukkum vargangal rendu
Ulagil eppodhum undu
Samaveli malaigalai thazhuvida ninaithaal
Vazhiyaedhu mudiyaadhu
Samaveli malaigalai thazhuvida ninaithaal
Vazhiyaedhu mudiyaadhu
Vazhiyaedhu mudiyaadhu

Male : Malarae ennenna kolam…
Edhanaal en meedhu kobam…
Dhinamum vevvaeru niramo
Idhu thaan unnodu azhago
Malarae ennenna kolam
Malarae nalamaa…malarae nalamaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்

ஆண் : மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு அழகோ
மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா…..மலரே நலமா…..

ஆண் : வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்
வசந்தம் உன்னோடு சொந்தம்
உனக்கேன் என்னோடு பந்தம்
ஏழ்மையின் இலையுதிர் காலத்தில்
இங்கு பூவேது காயேது

ஆண் : நினைத்தால் எட்டாத தூரம்
எனக்கேன் உன் மீது மோகம்
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே
நீ எங்கே…….நான் எங்கே…..
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே
நீ எங்கே…….நான் எங்கே…..
நீ எங்கே…….நான் எங்கே…..

ஆண் : மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு அழகோ
மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா…..மலரே நலமா…..

ஆண் : நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு
நிலவை வானத்தில் பார்த்து
அருகே வாவென்று கேட்டு
அழுதிடும் குழந்தையின் அம்புலி பருவம்
என்னோடு நான் கண்டேன்

ஆண் : இருக்கும் வர்க்கங்கள் இரண்டு
உலகில் இப்போதும் உண்டு
சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்
வழி ஏது முடியாது……….
சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்
வழி ஏது முடியாது……….வழி ஏது முடியாது……….

ஆண் : மலரே என்னென்ன கோலம்
எதனால் என் மீது கோபம்
தினமும் வெவ்வேறு நிறமோ
இதுதான் உன்னோடு அழகோ
மலரே என்னென்ன கோலம்
மலரே நலமா…..மலரே நலமா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here