Singer : S. Janaki

Music by : Usha Khanna

Female : Malare malare yaei
Malare malare mounamenna mayakkamenna
Thendralthaan thodaththaan sugamo….oo….
Malare malare malare malare…..

Female : Orr vaalipan ner vanthathum
Aasaithaan vilainthatho
Poomaeniyil yaen vervaigal
Aadaithaan nanainthatho

Female : Kangal paadhiyum kaigal paadhiyum
Unnai thottatho ullam suttatho
Un manam un vasam illaiyo

Female : Malare malare malare malare…..

Female : Yaar kaigalil yaar saaivatho
Sollaththaan thayakkamo
Orr leelaithaan pon maalaiyil
Mellaththaan thodangumo

Female : Kadhal vedhanai kaaval meerumo
Kaaval meerinaal aaval theerumo
Yaaridam solvatho ammammaa

Female : Malare malare yaei
Malare malare mounamenna mayakkamenna
Thendralthaan thodaththaan sugamo….oo….
Malare malare malare malare…..

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : உஷா கண்ணா

பெண் : மலரே மலரே ஏய்…
மலரே மலரே மௌனமென்ன மயக்கமென்ன
தென்றல்தான் தொடத்தான் சுகமோ……ஓ….
மலரே மலரே மலரே மலரே..

பெண் : ஓர் வாலிபன் நேர் வந்ததும்
ஆசைதான் விளைந்ததோ
பூமேனியில் ஏன் வேர்வைகள்
ஆடைதான் நனைந்ததோ

பெண் : கண்கள் பாதியும் கைகள் பாதியும்
உன்னைத் தொட்டதோ உள்ளம் சுட்டதோ
உன் மனம் உன் வசம் இல்லையோ

பெண் : மலரே மலரே மலரே மலரே…

பெண் : யார் கைகளில் யார் சாய்வதோ
சொல்லத்தான் தயக்கமோ
ஓர் லீலைதான் பொன் மாலையில்
மெல்லத்தான் தொடங்குமோ

பெண் : காதல் வேதனை காவல் மீறுமோ
காவல் மீறினால் ஆவல் தீருமோ
யாரிடம் சொல்வதோ அம்மம்மா

பெண் : மலரே மலரே ஏய்…
மலரே மலரே மௌனமென்ன மயக்கமென்ன
தென்றல்தான் தொடத்தான் சுகமோ……ஓ….
மலரே மலரே மலரே மலரே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here