Manadhil Urudhi Vendum Lyrics
Singer : B. Neeraja
Music by : L. Vaidyanathan
Manathil uruthi vendum
Vaakkinilae inimai vendum
Ninaivu nallathu vendum
Nerungina porul kaippada vendum
Kanavu meippada vendum
Kaivasamaavathu viraivil vedum
Thanamum inbamum vendum
Tharaniyilae perumai vendum
Kann thiranthida vendum
Kaariyaththil uruthi vendum
Penn viduthalai vedum
Periya kadavul kaakka vendum
Mann payanura vendum
vaanagam ingu thenpada vendum
Unmai nindrida vendum
Unmai nindrida vendum….
பாடகி : நீரஜா
இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்
பெண் : மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
பெண் : கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
பெண் : கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
பெண் : மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்...