Singer : Al Rufian
Music by : Al Rufian
Lyrics by : Vinoth Singh
Mandhaigal arivadhillai
Than kaalgalaal nasukkapadum
Pulukalin valiyai
Vindhaigal viduvadhillai
Than vidhigalin vilaiyattaal
Vidupatta vaazhvai
Karuvaraiyil uruvagi
Kallaraiyil uruvizhandhom
Idaiyil yennada
Vetrumai unarvada
Arathinai udaitha kombu munai
Than uyiraiyum unarvaiyum
Eduthuthaan sendrathae
Uyirvidum nerathil
Indha unarvugal oomaiyaana
Kadhaithaan idhuvae
Humming …..
Sei ivan thediya thaai ival
Kalaindhu pona kaatchigal
Thaai madi sindhiya paal thuli
Nirangal maarum saatchigal
Both : Vidindhum vidiyadha
Pozhudhidhuvae
Vidiyaadha vaazhkai
Indha pulugalukkae
Verenna kettom
Chinna vaazhvu ondru thaanae
Pulukkalai pirandha piravi
Ivargal thavarum illai
Dharumam illai yedhum illai iraivaa
Nasungidum kaalgal ellaam
Pulukkal valigalai
Unarathaan marukkudhae iraivaa
Karuvaraiyil uruvagi
Kallaraiyil uruvizhandhom
Idaiyil yennada
Vetrumai unarvada
Mandhaigal unarattumae
Than kaalgalaal nasukkapadum
Pulukkalin valiyai
Mandhaigal unarattumae
Than kaalgalaal nasukkapadum
Pulukkalin valiyai
பாடகர் : அல் ரூபியான்
இசை அமைப்பாளர் : அல் ரூபியான்
பாடல் ஆசிரியர் : வினோத் சிங்
ஆண் : மந்தைகள் அறிவதில்லை
தன் கால்களால் நசுக்கப்படும்
புழக்களின் வலியை
ஆண் : விந்தைகள் விடுவதில்லை
தன் விதிகளின் விளையாட்டால்
விடுபட்ட வாழ்வை
ஆண் : கருவறையில் உருவாகி
கல்லறையில் உருவிழந்தோம்
இடையில் ஏனடா?
வேற்றுமை உணர்வடா
ஆண் : அறத்தினை உடைத்த கொம்புமுனை
தன் உயிரையும் உணர்வையும்
எடுத்துதான் சென்றதே
உயிர்விடும் நேரத்தில்
இந்த உணர்வுகள் ஊமையான
கதைதான் இதுவே
குழு : ................
ஆண் : சேய் இவன் தேடி தாய் இவள்
கலைந்து போன காட்சிகள்
தாய் மடி சிந்திய பால் துளி
நிறங்கள் மாறம் சாட்சிகள்
இருவர் : விடிந்தும் விடியாத பொழுதுதிதுவே
விடியாத வாழ்க்கை
இந்த புழுக்களுக்கே
வேறென்ன கேட்டோம்
சின்ன வாழ்வு ஒன்று தானே
ஆண் : புழுக்களாய் பிறந்த பிறவி
இவர்கள் தவறுமில்லை
தருமமில்லை ஏதுமில்லை இறைவா
நசுக்கிடும் கால்கள் எல்லாம்
புழுக்கள் வலிகளை
உணரத்தான் மறுக்குதே இறைவா
ஆண் : கருவறையில் உருவாகி
கல்லறையில் உருவிழந்தோம்
இடையில் ஏனடா?
வேற்றுமை உணர்வடா
ஆண் : மந்தைகள் உணரட்டுமே
தன் கால்களால் நசுக்கப்படும்
புழக்களின் வலியை
ஆண் : மந்தைகள் உணரட்டுமே
தன் கால்களால் நசுக்கப்படும்
புழக்களின் வலியை