Manithanum Inge Song Lyrics is a track from Thanga Durai Tamil Film– 1972, Starring S. S. Rajendran, Master Sekar, A. V. M. Rajan, Junior Balaiah, Senthamarai, K. K. Sounder, Sowkar Janaki, M. S. Sundaribai and Shanmugasundari. This song was sung by T. M. Soundarajan and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.
Singer : T. M. Soundarajan
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
Male : Manidhanum ingae thannai marandhaan
Thavarugal seidhae kannae izhandhaan
Manidhanum ingae thannai marandhaan
Thavarugal seidhae kannae izhandhaan
Anbae deivam endraal
Adhai yaarum nambavillai
Anbae deivam endraal
Adhai yaarum nambavillai
Male : Uyirgal ellaam arivin munnae
Endrum samamaagum
Mirugangal thaana baliyaagum
Idhil arivum baliyaagum
Uyirgal ellaam arivin munnae
Endrum samamaagum
Mirugangal thaana baliyaagum
Idhil arivum baliyaagum
Male : Kodumai kandum nirkkum
Deivam nyaayam enna sollum
Deivam nyaayam enna sollum
Manidhanum ingae thannai marandhaan
Thavarugal seidhae kannae izhandhaan
Male : Mazhaiyillaamal vaadiya payirgal
Mazhaiyai edhirpaarkkum
Varumaiyinaalae yengiya uyirgal
Karunaiyai edhirppaarkkum
Male : Noigalinaalae varundhiya maeni
Marundhai edhirpaarkkum
Vaai illaadha jeevangalellaam
Karunaiyai edhirppaarkkum
Male : Vaadum ezhai ullam nalla
Thalaivanai edhirpparkkum
Anbae deivam endraal
Adhai yaarum nambavillai
Anbae deivam endraal
Adhai yaarum nambavillai
Manidhanum ingae thannai marandhaan
Thavarugal seidhae kannae izhandhaan
Male : Muthan kaadan muniyan maari
Ellaam deivamadaa
Moolaikku moolai kaanbavai ellaam
Deivathin koyiladaa
Male : Bakthan ennum peyarinai soodi
Ethanai manidhanadaa
Paava punniym pesipesi
Parndhadhu kaalamada
Undu deivam endru solla
Manamae illaiyada
Male : Manidhanum ingae thannai marandhaan
Thavarugal seidhae kannae izhandhaan
Anbae deivam endraal
Adhai yaarum nambavillai
Anbae deivam endraal
Adhai yaarum nambavillai
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : மனிதனும் இங்கே தன்னை மறந்தான்
தவறுகள் செய்தே கண்ணை இழந்தான்
மனிதனும் இங்கே தன்னை மறந்தான்
தவறுகள் செய்தே கண்ணை இழந்தான்
அன்பே தெய்வம் என்றால்
அதை யாரும் நம்பவில்லை…….
அன்பே தெய்வம் என்றால்
அதை யாரும் நம்பவில்லை…….
ஆண் : உயிர்கள் எல்லாம் அறிவின் முன்னே
என்றும் சமமாகும்
மிருகங்கள்தானா பலியாகும்
இதில் அறிவும் பலியாகும்
உயிர்கள் எல்லாம் அறிவின் முன்னே
என்றும் சமமாகும்
மிருகங்கள்தானா பலியாகும்
இதில் அறிவும் பலியாகும்
ஆண் : கொடுமை கண்டும் நிற்கும்
தெய்வம் நியாயம் என்ன சொல்லும்
தெய்வம் நியாயம் என்ன சொல்லும்
மனிதனும் இங்கே தன்னை மறந்தான்
தவறுகள் செய்தே கண்ணை இழந்தான்
ஆண் : மழையில்லாமல் வாடிய பயிர்கள்
மழையை எதிர்பார்க்கும்
வறுமையினாலே ஏங்கிய உயிர்கள்
உணவை எதிர்பார்க்கும்
ஆண் : நோய்களினாலே வருந்திய மேனி
மருந்தை எதிர்பார்க்கும்
வாயில்லாத ஜீவன்களெல்லாம்
கருணையை எதிர்பார்க்கும்
ஆண் : வாடும் ஏழை உள்ளம் நல்ல
தலைவனை எதிர்பார்க்கும்
அன்பே தெய்வம் என்றால்
அதை யாரும் நம்பவில்லை
அன்பே தெய்வம் என்றால்
அதை யாரும் நம்பவில்லை…
மனிதனும் இங்கே தன்னை மறந்தான்
தவறுகள் செய்தே கண்ணை இழந்தான்
ஆண் : முத்தன் காடன் முனியன் மாரி
எல்லாம் தெய்வமடா
மூலைக்கு மூலை காண்பவை எல்லாம்
தெய்வத்தின் கோயிலடா
ஆண் : பக்தன் என்னும் பெயரினைச் சூடி
எத்தனை மனிதனடா
பாவபுண்ணியம் பேசிப்பேசி
பறந்தது காலமடா
உண்டு தெய்வம் என்று சொல்ல
மனமே இல்லையடா
ஆண் : மனிதனும் இங்கே தன்னை மறந்தான்
தவறுகள் செய்தே கண்ணை இழந்தான்
அன்பே தெய்வம் என்றால்
அதை யாரும் நம்பவில்லை
அன்பே தெய்வம் என்றால்
அதை யாரும் நம்பவில்லை…