Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Mullai pooppolae
Rendu mookuthi minnuthadi
Mullai pooppolae
Rendu mookuthi minnuthadi
Un munthaanai melae
Koondhal naattiyam aaduthadi
Mullai pooppolae
Rendu mookuthi minnuthadi
Sithanna vaasalilae
Azhagu chithiram kaanuthaiyyaa
Sithanna vaasalilae
Azhagu chithiram kaanuthaiyyaa
Antha chithira maeniyilae
Unthan muthirai kaanuthaiyyaa
Velavan vel polae
Rendu vizhigal minnuthaiyyaa
Pudhu velli radham polae
Unthan vadivam ponguthaiyyaa
Velavan vel polae
Rendu vizhigal minnuthaiyyaa
Illai illai engira idaiyil
Ethanai malaradiyo
Illai illai engira idaiyil
Ethanai malaradiyo
Adhil yaedho ondru ennidam solvathu
Ethanai kadhaiyadiyo
Nillaa iravil pollaa nilavil
Nerukku ner varuvaen
Nillaa iravil pollaa nilavil
Nerukku ner varuvaen
Andru ellaaa kalaiyum villaal eduthu
Velaalae tharuvaen
Mullai pooppolae
Rendu mookuthi minnuthadi
Un munthaanai melae
Koondhal naattiyam aaduthadi
Velavan vel polae
Rendu vizhigal minnuthaiyyaa
Pattu kaalgal pattathanaalae
Panju vilanthathadi
Un chittu kaigal thottathunaalae
Nenju malarnthathadi
Kottu mazhaiyum paniyum thendralum
Kanalaai kaayuthaiyyaa
Unkooda irunthaal paadi magizhnthaal
Kuliraai kuliruthaiyyaa
Panjanai meedhu malargalai thoovi
Pazhaguvathu ennaalo
Female : Paalum pazhamum kaiyil yaenthi
Varuvathum ennaalo
Panjanai meedhu malargalai thoovi
Pazhaguvathu ennaalo….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : முல்லை பூப்போலே
ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
முல்லை பூப்போலே
ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
உன் முந்தானை மேலே
கூந்தல் நாட்டியம் ஆடுதடி........
ஆண் : முல்லை பூப்போலே
ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
பெண் : சித்தன்ன வாசலிலே
அழகு சித்திரம் காணுதய்யா
சித்தன்ன வாசலிலே
அழகு சித்திரம் காணுதய்யா
அந்த சித்திர மேனியிலே
உந்தன் முத்திரை தோணுதய்யா.....
பெண் : வேலவன் வேல் போலே
ரெண்டு விழிகள் மின்னுதய்யா
புது வெள்ளி ரதம் போலே
உந்தன் வடிவம் பொங்குதய்யா....
பெண் : வேலவன் வேல் போலே
ரெண்டு விழிகள் மின்னுதய்யா
ஆண் : இல்லை இல்லை என்கிற இடையில்
எத்தனை மலரடியோ
இல்லை இல்லை என்கிற இடையில்
எத்தனை மலரடியோ
அதில் ஏதோ ஒன்று என்னிடம் சொல்வது
எத்தனை கதையடியோ
பெண் : நில்லா இரவில் பொல்லா நிலவில்
நேருக்கு நேர் வருவேன்
நில்லா இரவில் பொல்லா நிலவில்
நேருக்கு நேர் வருவேன்
அன்று எல்லாக் கலையும் வில்லால் எடுத்து
வேலாலே தருவேன்......
ஆண் : முல்லை பூப்போலே
ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
உன் முந்தானை மேலே
கூந்தல் நாட்டியம் ஆடுதடி........
பெண் : வேலவன் வேல் போலே
ரெண்டு விழிகள் மின்னுதய்யா
ஆண் : பட்டுக் கால்கள் பட்டதனாலே
பஞ்சு விளைந்ததடி
உன் சிட்டுக் கைகள் தொட்டதனாலே
நெஞ்சு மலர்ந்ததடி
பெண் : கொட்டும் மழையும் பனியும் தென்றலும்
கனலாய் காயுதய்யா
உன் கூட இருந்தால் பாடி மகிழ்ந்தால்
குளிராய் குளிருதய்யா.....
ஆண் : பஞ்சணை மீது மலர்களை தூவி
பழகுவது எந்நாளோ
பெண் : பாலும் பழமும் கையில் ஏந்தி
வருவதும் எந்நாளோ.......
ஆண் : பஞ்சணை மீது மலர்களை தூவி
பழகுவது எந்நாளோ