Muruga Muruga Song Lyrics is a track from Naalu Veli Nilam Tamil Film– 1959, Starring R. Muthuraman, S. V. Sahasranamam, V. R. Rajagopal, S. V. Subbaiah, A. K. Veerasamy, Devika, S. N. Lakshmi, Pandari Bai, Mynavathi and A. Sakunthala. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Mahakavi Subramanya Bharthiyaar.
Singer : Seerkazhi Govindarajan
Music Director : K. V. Mahadevan
Lyricist : Mahakavi Subramanya Bharthiyaar
Male : Muruga muruga muruga
Muruga muruga muruga
Male : Varuvai mayil meedhinile
Vadi veludane varuvai
Varuvai mayil meedhinile
Vadi veludane varuvai
Tharuvai nalamum thagavum pugazhum
Thavamum thiramum dhanamum ganamum
Male : Muruga muruga muruga
Muruga muruga muruga
Male : Suruthi porule varuga
Thunive kanale varuga
Suruthi porule varuga
Thunive kanale varuga
Karuthi karuthi kavalai paduvaar
Kavalai kadalai kadiyum vadivel muruga
Male : Muruga muruga muruga
Muruga muruga muruga
Male : Arivagiya koyilile
Arulgayathaiu madi mel
Pori veludane valarvaai
Adiyar pudhu vaazhvurave
Puvi meedhu arulvaai
Male : Muruga muruga muruga
Muruga muruga muruga
Male : Guruve paraman magane
Guhayil valarum kanale
Guruve paraman magane
Guhayil valarum kanale
Tharuvai thozhilum payanum
Amarar samarathipane saranam saranam
Male : Muruga muruga muruga
Muruga muruga muruga
Muruga…….
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
ஆண் : முருகா முருகா முருகா!
முருகா முருகா முருகா!
ஆண் : வருவாய் மயில்மீதினிலே
வடிவேலுடனே வருவாய்!
வருவாய் மயில்மீதினிலே
வடிவேலுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்
ஆண் : முருகா முருகா முருகா!
முருகா முருகா முருகா!
ஆண் : சுருதிப் பொருளே வருக!
துணிவே கனலே வருக!
சுருதிப் பொருளே வருக!
துணிவே கனலே வருக!
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் முருகா
ஆண் : அறிவாகிய கோயிலிலே
அருளாகியதாய் மடிமேல்
பொறிவேலுடனே வளர்வாய்!
அடியார் புதுவாழ்வுறவே புவிமீதருள்வாய்
ஆண் : முருகா முருகா முருகா!
முருகா முருகா முருகா!
ஆண் : குருவே!பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
குருவே!பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும்
அமரர் சமராதிபனே! சரணம்!சரணம்
ஆண் : முருகா முருகா முருகா!
முருகா முருகா முருகா!
முருகா ……