Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : V. Dakshinamurthy
Lyrics by : Kannadasan
Muthu muthu punnagaiyae mukkani thottam
Un munnazhagum pinnazhagum kannukku nottam
Female : Kanni pennai suttruvathen kadhlaraattam
Paadam katru tharum munnae nee eduththidu ottam
Muthu muthu punnagaiyae mukkani thottam
Un munnazhagum pinnazhagum kannukku nottam
Kaiyaal thottaale
Female : Kannam punnaagum
Male : Aasai ennnaagum
Female : Acham undaagm
Male : Aadal inbam
Female : Thedavillai
Male : Aananthamae
Female : Thevai illai
Sevvidhazh malarattumae
Thaen mazhai pozhiyattumae
Ponnudal saainthaalenna
Pudhiya sugam kandaalenna
Kalloori padippil zero
Kadhal nadippil hero
Karpanai onnaa rendaa
Kanavellamae nadapathundaa
Muthu muthu punnagaiyae mukkani thottam
Un munnazhagum pinnazhagum kannukku nottam
Paruvam vanthaalae
Female : Paarththu pazhaganum
Male : Pazhaga vanthaalae
Female : Paasam malaranum
Male : Thaen madhuvo
Female : Bodhai tharum
Male : Maan vizhiyo
Female : Maiyal tharum
Oodal iravu varai koodal vidiyum varai
Iravae vanthaal inbam pongum arai palliyarai
Female : Naanum padithavalthaan naalum therinthavalthaan
Achaththaal aasaigalai adakki vaazhum penn magalthaan
: Muthu muthu punnagaiyae mukkani thottam
Un munnazhagum pinnazhagum kannukku nottam
Female : Kanni ennai kaipidiththaai kadhalaraattam
Paadam kattru kollum aattam thaanae kadhal kondaattam
Both : Laalaalaalaa laalaalaallaa……..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
பெண் : கன்னி பெண்ணை சுற்றுவதேன் காதலராட்டம்
பாடம் கற்றுத் தரும் முன்னே நீ எடுத்திடு ஓட்டம்
ஆண் : முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
ஆண் : கையால் தொட்டாலே......
பெண் : கன்னம் புண்ணாகும்
ஆண் : ஆசை என்னாகும்.........
பெண் : அச்சம் உண்டாகும்
ஆண் : ஆடல் இன்பம்........
பெண் : தேடவில்லை
ஆண் : ஆனந்தமே .........
பெண் : தேவை இல்லை
ஆண் : செவ்விதழ் மலரட்டுமே
தேன் மழை பொழியட்டுமே
பொன்னுடல் சாய்ந்தாலென்ன
புதிய சுகம் கண்டாலென்ன
பெண் : கல்லூரி படிப்பில் ஜீரோ
காதல் நடிப்பில் ஹீரோ
கற்பனை ஒண்ணா ரெண்டா
கனவெல்லாமே நடப்பதுண்டா
ஆண் : முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
ஆண் : பருவம் வந்தாலே..........
பெண் : பார்த்து பழகணும்
ஆண் : பழக வந்தாலே.............
பெண் : பாசம் மலரணும்
ஆண் : தேன் மதுவோ.........
பெண் : போதை தரும்
ஆண் : மான் விழியோ..........
பெண் : மையல் தரும்
ஆண் : ஊடல் இரவு வரை கூடல் விடியும் வரை
இரவே வந்தால் இன்பம் பொங்கும் அறை பள்ளியறை
பெண் : நானும் படித்தவள்தான் நாலும் தெரிந்தவள்தான்
அச்சத்தால் ஆசைகளை அடக்கி வாழும் பெண் மகள்தான்
ஆண் : முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
பெண் : கன்னி என்னை கைப்பிடித்தாய் காதலராட்டம்
பாடம் கற்றுத் கொள்ளும் ஆட்டம் தானே காதல்
கொண்டாட்டம்
இருவர் : லாலாலாலா....லாலாலாலா.....