Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Naadaala vanthaaru naadaala vanthaaru hoi
Female : Naadaala vanthaaru naadaala vanthaaru
Both : Rajangam kandaarammaa
Female : Kallaamai kandaaru illaamai kandaaru
Both : Kalloori thanthaarammaa ammammaa
Kalloori thanthaarammaa…..
Both : Naadaala vanthaaru naadaala vanthaaru
Rajangam kandaarammaa
Kallaamai kandaaru illaamai kandaaru
Kalloori thanthaarammaa ammammaa
Kalloori thanthaarammaa…..
Pandiya nattu seemaiyilae
Oru pachai kuzhanthai azhuthathadi
Paalukkaga azhavillai
Adhu padippukkaga azhuthathadi
Maadu meikkum siruvanai kandu
Manathum udalum padhaiththathadi
Maadu meikkum siruvanai kandu
Manathum udalum padhaiththathadi
Valarum pillai tharkuriyaanaal
Vaazhvathu eppadi endrathadi
Naadaala vanthaaru naadaala vanthaaru
Rajangam kandaarammaa
Petra thaaiyaiyum maranthathadi
Adhu pirantha ponnaattai ninaiththathadi
Petra thaaiyaiyum maranthathadi
Adhu pirantha ponnaattai ninaiththathadi
Uttraar uravinar yaaraiyum maranthu
Ulagam kaakka thuninthathadi
Kalyaanam seiyyavum ennamillai
Oru kaasukkum panaththukkum aasaiyillai
Kalyaanam seiyyavum ennamillai
Oru kaasukkum panaththukkum aasaiyillai
Both : Ellaarkkum ellaamum vendumendrae
Dhinam ennuvathallaal yaedhumillai
Both : Naadaala vanthaaru naadaala vanthaaru
Rajangam kandaarammaa
Kallaamai kandaaru illaamai kandaaru
Kalloori thanthaarammaa ammammaa
Kalloori thanthaarammaa…..
Pirappinil pachai thamizhanadi
Avar periyavar enpom naangaladi
Pirappinil pachai thamizhanadi
Avar periyavar enpom naangaladi
Karma veeranai kaalaa Gandhi
Endrazhaippar india makkaladi
Avarai azhaippom vaangaladi
Orr arasae amaippom vaangaladi
Avarai azhaippom vaangaladi
Orr arasae amaippom vaangaladi
Viruthu koduththu nagarvalam varuvom
Vettri muzhangida koodungadi
Chorus : Vettri muzhangida koodungadi
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : நாடாள வந்தாரு நாடாள வந்தாரு ஹோய்...
பெண் : நாடாள வந்தாரு நாடாள வந்தாரு
இருவர் : ராஜாங்கம் கண்டாரம்மா
பெண் : கல்லாமை கண்டாரு இல்லாமை கண்டாரு
இருவர் : கல்லூரி தந்தாரம்மா அம்மம்மா
கல்லூரி தந்தாரம்மா..........
இருவர் : நாடாள வந்தாரு நாடாள வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
கல்லாமை கண்டாரு இல்லாமை கண்டாரு
கல்லூரி தந்தாரம்மா அம்மம்மா
கல்லூரி தந்தாரம்மா..........
பெண் : பாண்டிய நாட்டுச் சீமையிலே
ஒரு பச்சைக் குழந்தை அழுததடி
பாலுக்காக அழவில்லை
அது படிப்புக்காக அழுததடி
பெண் : பாண்டிய நாட்டுச் சீமையிலே
ஒரு பச்சைக் குழந்தை அழுததடி
பாலுக்காக அழவில்லை
அது படிப்புக்காக அழுததடி
ஆண் : மாடு மேய்க்கும் சிறுவனைக் கண்டு
மனதும் உடலும் பதைத்ததடி
மாடு மேய்க்கும் சிறுவனைக் கண்டு
மனதும் உடலும் பதைத்ததடி
வளரும் பிள்ளை தற்குரியானால்
வாழ்வது எப்படி என்றதடி
குழு : நாடாள வந்தாரு நாடாள வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
ஆண் : பெற்ற தாயையும் மறந்ததடி
அது பிறந்த பொன்னாட்டை நினைத்ததடி
பெற்ற தாயையும் மறந்ததடி
அது பிறந்த பொன்னாட்டை நினைத்ததடி
உற்றார் உறவினர் யாரையும் மறந்து
உலகம் காக்கத் துணிந்ததடி
ஆண் : கல்யாணம் செய்யவும் எண்ணமில்லை
ஒரு காசுக்கும் பணத்துக்கும் ஆசையில்லை
கல்யாணம் செய்யவும் எண்ணமில்லை
ஒரு காசுக்கும் பணத்துக்கும் ஆசையில்லை
இருவர் : எல்லார்க்கும் எல்லாமும் வேண்டுமென்றே
தினம் எண்ணுவதல்லால் ஏதுமில்லை
இருவர் : நாடாள வந்தாரு நாடாள வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
கல்லாமை கண்டாரு இல்லாமை கண்டாரு
கல்லூரி தந்தாரம்மா அம்மம்மா
கல்லூரி தந்தாரம்மா..........
ஆண் : பிறப்பினில் பச்சைத் தமிழனடி
அவர் பெரியவர் எண்போம் நாங்களடி
பிறப்பினில் பச்சைத் தமிழனடி
அவர் பெரியவர் எண்போம் நாங்களடி
கர்ம வீரனைக் காலா காந்தி
என்றைழைப்பார் இந்திய மக்களடி
பெண் : அவரை அழைப்போம் வாங்களடி
ஓர் அரசே அமைப்போம் வாங்களடி
அவரை அழைப்போம் வாங்களடி
ஓர் அரசே அமைப்போம் வாங்களடி
ஆண் : விருது கொடுத்து நகர்வலம் வருவோம்
வெற்றி முழங்கிடக் கூடுங்கடி....
குழு : வெற்றி முழங்கிடக் கூடுங்கடி....