Singer : T. L. Maharajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvathu oru paadal

Male : Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvathu oru paadal

Male : Kavi ezhuthi paarkkuthammaa
Kannaaru kann aaru
Kanniyival azhaginukkae
Kannaeru kannaeru

Male : Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvathu oru paadal

Male : Sengumatha pani vaayil
Thaen sidharum ponnaruvi
Thendralilae paranthapadi
Rasikkuthammaa oru kuruvi

Male : Pongi varum kadal nurai pol
Pooththu nirkkum perazhagi
Bodhaiyilae mithakkuthammaa
Paavaiyaval perezhuthi

Male : Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvathu oru paadal

Male : Koottinilae irunthapadi
Kulavuthammaa maadappuraa
Kaattinilae ulavuthammaa
Kadhalikkum jodi puraa

Male : Theettuthammaa oviyaththai
Thedi nirkkum vannappuraa
Sevai seiyya parakkuthammaa
Vayal veliyil chinnapuraa

Male : Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvathu oru paadal

Male : Paruvam vantha sirukkathaiyai
Yaar ezhuthi mudippaaro
Paal vadiyum thaamaraiyai
Yaar inimel parippaaro

Male : Moovarilae evar inimel
Nadhiyinilae kulippaaro
Mogaththilae mei maranthu
Karaiyinil yaar nirppaaro…

Male : Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvathu oru paadal

பாடகர் : டி. எல். மகாராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்

ஆண் : நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்

ஆண் : கவி எழுதி பார்க்குதம்மா
கண்ணாறு கண் ஆறு
கன்னியிவள் அழகினுக்கே
கண்ணேறு கண்ணேறு…..

ஆண் : நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்

ஆண் : செங்குமத பனி வாயில்
தேன் சிதறும் பொன்னருவி
தென்றலிலே பறந்தபடி
ரசிக்குதம்மா ஒரு குருவி

ஆண் : பொங்கி வரும் கடல் நுரை போல்
பூத்து நிற்கும் பேரழகி
போதையிலே மிதக்குதம்மா
பாவையவள் பேரெழுதி…..

ஆண் : நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்

ஆண் : கூட்டினிலே இருந்தபடி
குலவுதம்மா மாடப்புறா
காட்டினிலே உலவுதம்மா
காதலிக்கும் ஜோடி புறா

ஆண் : தீட்டுதம்மா ஓவியத்தை
தேடி நிற்கும் வண்ணப்புறா
சேவை செய்ய பறக்குதம்மா
வயல் வெளியில் சின்னப்புறா

ஆண் : நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்

ஆண் : பருவம் வந்த சிறுகதையை
யார் எழுதி முடிப்பாரோ
பால் வடியும் தாமரையை
யார் இனிமேல் பறிப்பாரோ

ஆண் : மூவரிலே எவர் இனிமேல்
நதியினிலே குளிப்பாரோ
மோகத்திலே மெய் மறந்து
கரையினில் யார் நிற்பாரோ….

ஆண் : நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here