Singer : Sid Sriram

Music by : Sam C S

Lyrics by : Karthik Netha

Male : Oh……vithi yaar sathi
Yaar vali yaar oli
Aasaiyin kaambilae
Pookkuthey malarae malare
Thuyar yaaraalae

Male : Oo vali vali vali

Male : Eeram ulla koottil
Theeyai umizhnthor yaaro
Paathai vantha velai
Paadham kizhiththor evaro

Male : Neeril ilaippaarum meenin kanavil
Oru thoondil nizhal aattam
Yaarin viralo yaavum maayaiyo….

Male : Oh……vithi yaar sathi
Yaar vali yaar oli

Male : Nettriruntha vaazhvai
Soorai kondu pochcho
Vaangi vantha naalai
Kaalam kondae pochcho

Male : Sambal puyalkaattril
Orr paravai
Adhu saavin sumaiyaeri
Kaanum nilavai
Vaazhvae veliyo

Male : Oh……vithi yaar sathi
Yaar vali yaar oli

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : ஓ……விதி யார் சதி
யார் வலி யார் ஒளி
ஆசையின் காம்பிலே
பூக்குதே மலரே மலரே
துயர் யாராலே

ஆண் : ஓ வலி வலி வலி

ஆண் : ஈரம் உள்ள கூட்டில்
தீயை உமிழ்ந்தோர் யாரோ
பாதை வந்த வேளை
பாதம் கிழித்தோர் எவரோ……

ஆண் : நீரில் இளைப்பாறும் மீனின் கனவில்
ஒரு தூண்டில் நிழல் ஆட்டம்
யாரின் விரலோ யாவும் மாயையோ……

ஆண் : ஓ……விதி யார் சதி
யார் வலி யார் ஒளி

ஆண் : நேற்றிருந்த வாழ்வை
சூரை கொண்டு போச்சோ…..
வாங்கி வந்த நாளை
காலம் கொண்டே போச்சோ…..

ஆண் : சாம்பல் புயற்காற்றில்
ஓர் பறவை
அது சாவின் சுமையேறி
காணும் நிலவை
வாழ்வே வேலியோ

ஆண் : ஓ……விதி யார் சதி
யார் வலி யார் ஒளி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here