Singer : Haricharan

Music by : G. V. Prakash Kumar

Male : Orae oru ooril oru veedu
Uravugal koodum kili koodu
Indha anbai pola veredhu
Vaarthaigal ellaam podhaathu

Male : Endha ooril vaazhndhidum bothum
Paravai sontha koottai maranthiduma
Engu sendru poothidum bothum
Malarai vergal vittu koduthiduma
Verengum illaadha veraarum sollaadha
Idhigaasam indha paasam thaan

Male : Orae oru ooril oru veedu
Uravugal koodum kili koodu
Thaanae naanae naanae
Thanae naanae naa
Thaanae naanae naanae
Thanae naanae naa

Male : Thaerodum veedhi
Adhil mann vaasam veesum
Thaazhvaaram engum
Dhinam devaaram thaan

Male : Moodaatha vaasal
Adhu virunthombal pesum
Ennaalum ingae
Ada santhosham thaan

Male : Kanneerai kangal
Endrum paarthathillaiyae
Mann meedhu sorgam idhuthaan
Anilaadum muttrathil
Anbennum raagathil
Mayilaaga thulli aadipaadu

Male : Orae oru ooril oru veedu
Uravugal koodum kili koodu

Male : Panam kaasu illai
Perum pugazh kooda illai
Edhu indha mannil
Ada inbam tharum

Male : Sondhangal vandhu
Oru siripondru thandhaal
Adhu pothum endrum
Intha vaazhvae varam

Male : Thanthai sol vedham endru
Pottrum pillaigal
Varungaala vizhudhallavaa
Aagaayam veezhnthaalum
Bhoologam saainthaalum
Anbondrae nammai thaangum naalum

Male : Orae oru ooril oru veedu
Uravugal koodum kili koodu
Thaanae naanae naanae
Thanae naanae naa
Thaanae naanae naanae
Thanae naanae naa

பாடகர் : ஹரிசரண்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
இந்த அன்பை போல வேறேது
வார்த்தைகள் எல்லாம் போதாது

ஆண் : எந்த ஊரில் வாழ்ந்திடும் போதும்
பறவை சொந்த கூட்டை மறந்திடுமா
எங்கு சென்று பூத்திடும் போதும்
மலரை வேர்கள் விட்டுக் கொடுத்திடுமா
வேறெங்கும் இல்லாத வேராரும் சொல்லாத
இதிகாசம் இந்த பாசம் தான்

ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
தானே நானே நானே தானே நானே நா
தானே நானே நானே தானே நானே நா

ஆண் : தேரோடும் வீதி
அதில் மண் வாசம் வீசும்
தாழ்வாரம் எங்கும்
தினம் தேவாரம் தான்

ஆண் : மூடாத வாசல்
அது விருந்தோம்பல் பேசும்
எந்நாளும் இங்கே
அட சந்தோசம் தான்

ஆண் : கண்ணீரை கண்கள்
என்றும் பார்த்ததில்லையே
மண்மீது சொர்க்கம் இது தான்
அணில் ஆடும் முற்றத்தில்
அன்பென்னும் ராகத்தில்
மயிலாக துள்ளி ஆடிப்பாடு

ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு

ஆண் : பணம் காசு இல்லை
பெரும் புகழ் கூட இல்லை
எது இந்த மண்ணில்
அட இன்பம் தரும்

ஆண் : சொந்தங்கள் வந்து ஒரு
சிரிப்பொன்று தந்தால்
அது போதும் என்றும்
இந்த வாழ்வே வரம்

ஆண் : தந்தை சொல் வேதம் என்று
போற்றும் பிள்ளைகள்
வருங்கால விழுதல்லவா
ஆகாயம் வீழ்ந்தாலும்
பூலோகம் சாய்ந்தாலும்
அன்பொன்றே நம்மை தாங்கும் நாலும்

ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
தானே நானே நானே தானே நானே நா
தானே நானே நானே தானே நானே நா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here