Singers : B. S Sasirekha and T. K. Kala

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Orae vaanam orae bhoomi orae saamithaan
Naam orae kulam orae inam orae jaathithaan
Orae vaanam orae bhoomi orae saamithaan
Naam orae kulam orae inam orae jaathithaan
Orae raththamthaan orae uyirumthaan

Female : Orae vaanam orae bhoomi orae saamithaan

Female : Therkku vadakku verupaadu
Dhisaiyil irukkalaam
Therkku vadakku verupaadu
Dhisaiyil irukkalaam
Oru dhesa makkal verupattaal
Amaithi nilaikkumaa

Female : Andru inaveri madha veriyai
Maranthu sendreerae
Adhae maranthathaalae sudhanthiraththai
Vaangi kondeerae

Female : Indru ungalukkul jaadhi petha
Sandai varuvatho
Rama raajiyaththil raththa gangai
Pongi paaivatho
Pongi paaivatho…oo….
Pongi paarvatho….oo…..

Female : Medaiyilae jaathigalai
Ozhippaen enbaargal
Thangal peyarin pinnae
Jaathi perai pottukolvathaen

Female : Aadhiyilae vanthuvitta
Pazhakkamthaanaiyyaa
Arinthu kondu thirunthi
Vaazhnthaal petham yaedhaiyyaa

Female : Palliyilae kuzhanthaigalai
Padikka saerkkaiyilae
Angu jaathi perum ennavendru ketkiraargalae

Female : Idhai aatchiyilae ullavargal
Unarnthu kondaalae
Agilamellaam jaathi pedham ozhiyum thannaalae

Female : Oru thaayin vayittrinilae
Udhiththa pillaigal
Neegal ottrumaiyaai vaazhvatharkku
Valarntha mullaigal

Female : Ondrupattaal undu vaazhvu
Kettu kollungal
Idhai unarnthu kondu maraavarkku
Eduththu sollungal….

Female : Kaattu moongil koottam pola
Saernthu vaazhuvom
Chorus : Saernthu vaazhuvom
Female : Kaakkai kuruvi jaathi pola
Pagirnthu unnuvom
Chorus : Pagirnthu unnuvom

Female : Ulagamellaam samaththuvaththai
Oonga seiguvom
Chorus : Oonga seiguvom
Female : Orumaippaadu enum kodiyai
Ulagil yaettruvom
Chorus : Ulagil yaettruvom

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் டி. கே. கலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஒரே வானம் ஒரே பூமி ஒரே சாமிதான்
நாம் ஒரே குலம் ஒரே இனம் ஒரே ஜாதிதான்
ஒரே வானம் ஒரே பூமி ஒரே சாமிதான்
நாம் ஒரே குலம் ஒரே இனம் ஒரே ஜாதிதான்
ஒரே ரத்தம்தான் ஒரே உயிரும்தான்

பெண் : ஒரே வானம் ஒரே பூமி ஒரே சாமிதான்…

பெண் : தெற்கு வடக்கு வேறுபாடு
திசையில் இருக்கலாம்
தெற்கு வடக்கு வேறுபாடு
திசையில் இருக்கலாம்
ஒரு தேச மக்கள் வேறுபட்டால்
அமைதி நிலைக்குமா

பெண் : அன்று இனவெறி மத வெறியை
மறந்து சென்றீரே
அதை மறந்ததாலே சுதந்திரத்தை
வாங்கி கொண்டீரே

பெண் : இன்று உங்களுக்குள் ஜாதி பேத
சண்டை வருவதோ
ராம ராஜ்ஜியத்தில் ரத்த கங்கை
பொங்கி பாய்வதோ
பொங்கி பாய்வதோ…..ஓ…..
பொங்கி பாய்வதோ…..ஓ….

பெண் : மேடையிலே ஜாதிகளை
ஒழிப்பேன் என்பவர்கள்
தங்கள் பெயரின் பின்னே
ஜாதிப் பேரை போட்டுக்கொள்வதேன்

பெண் : ஆதியிலே வந்துவிட்ட
பழக்கம் தானய்யா
அறிந்துக் கொண்டு திருந்தி
வாழ்ந்தால் பேதம் ஏதய்யா

பெண் : பள்ளியிலே குழந்தைகளை
படிக்கச் சேர்க்கையிலே
அங்கு ஜாதிப் பேரும் என்னவென்று கேட்கிறார்களே

பெண் : இதை ஆட்சியிலே உள்ளவர்கள்
உணர்ந்து கொண்டாலே
அகிலமெல்லாம் ஜாதி பேதம் ஒழியும் தன்னாலே

பெண் : ஒரு தாயின் வயிற்றினிலே
உதித்த பிள்ளைகள்
நீங்கள் ஒற்றுமையாய் வாழ்வதற்கு
வளர்ந்த முல்லைகள்

பெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
கேட்டுக் கொள்ளுங்கள்
இதை உணர்ந்து கொண்டு மற்றவர்க்கு
எடுத்து சொல்லுங்கள்..

பெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
கேட்டுக் கொள்ளுங்கள்
இதை உணர்ந்து கொண்டு மற்றவர்க்கு
எடுத்து சொல்லுங்கள்..

பெண் : காட்டு மூங்கில் கூட்டம் போல
சேர்ந்து வாழுவோம்
குழு : சேர்ந்து வாழுவோம்
பெண் : காக்கை குருவி ஜாதி போல
பகிர்ந்து உண்ணுவோம்
குழு : பகிர்ந்து உண்ணுவோம்

பெண் : உலகமெல்லாம் சமத்துவத்தை
ஓங்கச் செய்குவோம்
குழு : ஓங்கச் செய்குவோம்
பெண் : ஒருமைப்பாடு எனும் கொடியை
உலகில் ஏற்றுவோம்…
குழு : உலகில் ஏற்றுவோம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here