Singer : Saindhavi

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Vaira Muthu

Humming : ……………..

Female : Suththamulla nenjam hooo..
Suththi suththi konjum
Paala pola ullam hooo…
Paasathukku kenjum

Female : Ithu pol oru uravu
Indha ulagil irukkaa
Idhayam theadum idhayam pola
Punitham erukkaa
Kannilae sindhum neerukku
Oru kanakku erukkaa

Female : Koodi vandha bantham hooo…
Saagum varai sontham
Koodi vandha bantham hooo…
Saagum varai sontham

Female : Paasangal paathi
Naesangal paathi
Anbu vandha pinnae
Mannil naanum vazha
Thembu vandhadhenakku

Female : Paazhpatta nilaththil
Paal mazhai vizhunthaa
Putham puthu pachai
Kachai katti kondu
Pullu varum molachi

Female : Kaadalai thaandiyum mannirukku
Udalai thaandiyum anbirukku
Maadhaavin kolathil
Manidha uruvathil
Dheivangal ingirukku

Female : Soththukkueatha uppu hooo..
Sonthamenna thappu
Soththukkueatha uppu hooo..
Sonthamenna thappu

Female : Ithu pol oru uravu
Indha ulagil irukkaa
Idhayam theadum idhayam pola
Punitham erukkaa
Kannilae sindhum neerukku
Oru kanakku erukkaa

Female : Koodi vandha bantham hooo…
Saagum varai sontham
Koodi vandha bantham hooo…
Saagum varai sontham

Humming : ……………..

Female : Sonthangal anaiththum
Thodarvathumillai
Bhanthangal sila
Bhanthangal vandhu
Kalaivathumillai

Female : Veyilukku kudaiyaai
Puyalukku thunaiyaai
Karunaiyil udan thunaivara
Oru kaaranamillai

Female : Kaavalai pol oru sonthamundaa
Kanneerai pol oru theerathamundaa
Thiyaagaththai poloru
Dheiva gunaththinai
Ulagaththil paathathundaa

Female : Suththa manam pola hooo…
Sontha bhantham illa
Suththa manam pola hooo…
Sontha bhantham illa

Female : Ithu pol oru uravu
Indha ulagil irukkaa
Idhayam theadum idhayam pola
Punitham erukkaa
Kannilae sindhum neerukku
Oru kanakku erukkaa

Female : Koodi vandha bantham hooo…
Saagum varai sontham
Koodi vandha bantham hooo…
Saagum varai sontham

பாடகி : சைந்தவி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர்  : வைரமுத்து

முனகல் : ……………..

பெண் : சுத்தமுள்ள நெஞ்சம் ஓஓ..
சுத்தி சுத்தி கொஞ்சும்
பால போல உள்ளம் ஓஓ…
பாசத்துக்கு கெஞ்சும்

பெண் : இது போல் ஒரு உறவு
இந்த உலகில் இருக்கா
இதயம் தேடும் இதயம் போல
புனிதம் இருக்கா
கண்ணிலே சிந்தும் நீருக்கு
ஒரு கணக்கு இருக்கா

பெண் : கூடி வந்த பந்தம் ஓஓ…
சாகும் வரை சொந்தம்
கூடி வந்த பந்தம் ஓஓ…
சாகும் வரை சொந்தம்

பெண் : பாசங்கள் பாதி
நேசங்கள் பாதி
அன்பு வந்த பின்னே
மண்ணில் நானும் வாழ
தெம்பு வந்ததெனக்கு

பெண் : பாழ்பட்ட நிலத்தில்
பால் மழை விழுந்தா
புத்தம் புது பச்சை
கச்சை கட்டி கொண்டு
புல்லு வரும் மொளச்சி

பெண் : கடலை தாண்டியும் மண்ணிருக்கு
உடலைத் தாண்டியும் அன்பிருக்கு
மாதாவின் கோலத்தில்
மனித உருவத்தில்
தெய்வங்கள் இங்கிருக்கு

பெண் : சோத்துக்கேத்த உப்பு ஓஓ..
சொந்தமென்ன தப்பு
சோத்துக்கேத்த உப்பு ஓஓ..
சொந்தமென்ன தப்பு

பெண் : இது போல் ஒரு உறவு
இந்த உலகில் இருக்கா
இதயம் தேடும் இதயம் போல
புனிதம் இருக்கா
கண்ணிலே சிந்தும் நீருக்கு
ஒரு கணக்கு இருக்கா

பெண் : கூடி வந்த பந்தம் ஓஓ…
சாகும் வரை சொந்தம்
கூடி வந்த பந்தம் ஓஓ…
சாகும் வரை சொந்தம்

முனகல் : ………….

பெண் : சொந்தங்கள் அனைத்தும்
தொடர்வதுமில்லை
பந்தங்கள் சில
பந்தங்கள் வந்து
கலைவதுமில்லை

பெண் : வெயிலுக்கு குடையாய்
புயலுக்கு துணையாய்
கருணையில் உடன் துணைவர
ஒரு காரணமில்லை

பெண் : காவலை போல் ஒரு சொந்தமுண்டா
கண்ணீரை போல் ஒரு தீர்த்தமுண்டா
தியாகத்தைப் போலொரு
தெய்வ குணத்தினை
உலகத்தில் பார்ததுண்டா

பெண் : சுத்த மனம் போல ஓஓ…
சொந்த பந்தம் இல்ல
சுத்த மனம் போல ஓஓ…
சொந்த பந்தம் இல்ல

பெண் : இது போல் ஒரு உறவு
இந்த உலகில் இருக்கா
இதயம் தேடும் இதயம் போல
புனிதம் இருக்கா
கண்ணிலே சிந்தும் நீருக்கு
ஒரு கணக்கு இருக்கா

பெண் : கூடி வந்த பந்தம் ஓஓ…
சாகும் வரை சொந்தம்
கூடி வந்த பந்தம் ஓஓ…
சாகும் வரை சொந்தம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here