Singers : Anand Aravindakshan and Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Male : Meththayaai un vaiyurum
Moththamaai un uyirum
Suththamaai en udhiram
Niththamum nee koduthaai

Male : Maarbum koduthaai
Un manadhum koduthaai
Naan valiyil thudithaal
Un madiyum koduthaai

Male : Maarbum koduthaai
Un manadhum koduthaai
Naan valiyil thudithaal
Un madiyum koduthaai

Male : Garbamaai enai sumandhu
Unnaiyae unavalanthu
Arpamaai kidandha ennai
Sirppamaai mudithu vaithaai

Male : Naan payila nee silirthaai
Naan muyala nee viyarthaai
Naan thuyila nee isaithaai
Naan uyara nee vizhithaai

Male : Hmm mm mm mm…
Male : Maarbum koduthaai
Un manadhum koduthaai
Naan valiyil thudithaal
Un madiyum koduthaai

Male : Thaalae laeloo laeloo laeloo
Thaalae laelaeloo laeloo laelaeloo

Male : Thottilil naan azhuthaal
Thulli vandhu kaadhalithaai
Kitta vandha katterumbai
Katti vaithu nee udhaithaai

Male : Kannukkul ennai vaithu
Kan imaiyil kaaval vaithu
Kangaroo kutty pola
Unnodu otti vaithaai

Male : Nee ennai oottri sutta dhosai
Eppadiyo nei manakkum
Unnai ootri suttathaal thaan
Uyir varai adhu inikkum

Male : Hmm mm mm mm…
Male : Maarbum koduthaai
Un manadhum koduthaai
Naan valiyil thudithaal
Un madiyum koduthaai

Male : Meththayaai un vaiyurum
Moththamaai un uyirum
Suththamaai en udhiram
Niththamum nee koduthaai

Male : Un uyiril paadhi vetti
En uyiril serthu katti
Ulagaththu paasam ellaam
Enakkaai kotti vaithaai

Male : Jenmam ondru enakku irundhaal
Pirandha udan kan vizhippen
Thaai aaga nee illai endraal
Thayangamal uyir thurappen

Male : Yugam pala aanaalum
Un mugam kaana thavam iruppen
Un garbam serum varai
Pirakkaamal kaathiruppen

Male : Hmm mm mm mm…
Male : Maarbum koduthaai
Un manadhum koduthaai
Naan valiyil thudithaal
Un madiyum koduthaai

Male : Hmm mm mm mm…
Male : Maarbum koduthaai
Un manadhum koduthaai
Naan valiyil thudithaal
Un madiyum koduthaai

Male : Meththayaai un vaiyurum
Moththamaai un uyirum
Suththamaai en udhiram
Niththamum nee koduthaai

பாடகர்கள் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் சந்தோஷ் நாராயணன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : மெத்தையாய் உன் வயிறும்
மொத்தமாய் உன் உயிரும்
சுத்தமாய் என் உதிரம்
நித்தமும் நீ கொடுத்தாய்

ஆண் : மார்பும் கொடுத்தாய்
உன் மனதும் கொடுத்தாய்
நான் வலியில் துடித்தால்
உன் மடியும் கொடுத்தாய்

ஆண் : மார்பும் கொடுத்தாய்
உன் மனதும் கொடுத்தாய்
நான் வலியில் துடித்தால்
உன் மடியும் கொடுத்தாய்

ஆண் : கர்ப்பமாய் எனை சுமந்து
உன்னையே உணவளந்து
அற்பமாய் கிடந்த என்னை
சிற்பமாய் முடித்து வைத்தாய்

ஆண் : நான் பயில நீ சிலிர்த்தாய்
நான் முயல நீ வியர்த்தாய்
நான் துயில நீ இசைத்தாய்
நான் உயர நீ விழித்தாய்

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : மார்பும் கொடுத்தாய்
உன் மனதும் கொடுத்தாய்
நான் வலியில் துடித்தால்
உன் மடியும் கொடுத்தாய்

ஆண் : தாலேலோ லேலோ லேலோ லேலோ
தாலே லேலேலோ லேலோ லேலேலோ

ஆண் : தொட்டிலில் நானா அழுதால்
கிட்ட வந்து காதலித்தாய்
கிட்ட வந்த கட்டெறும்பை
கட்டி வைத்து நீ உதைத்தாய்

ஆண் : கண்ணுக்குள் என்னை வைத்து
கண் இமையில் காவல் வைத்து
கங்காரு குட்டி போல
உன்னோடு ஒட்டி வைத்தாய்

ஆண் : நீ என்னை ஊற்றி சுட்ட தோசை
எப்படியோ நெய் மணக்கும்
உன்னை ஊற்றி சுட்டதால் தான்
உயிர் வரை அது இனிக்கும்

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : மார்பும் கொடுத்தாய்
உன் மனதும் கொடுத்தாய்
நான் வலியில் துடித்தால்
உன் மடியும் கொடுத்தாய்

ஆண் : மெத்தையாய் உன் வயிறும்
மொத்தமாய் உன் உயிரும்
சுத்தமாய் என் உதிரம்
நித்தமும் நீ கொடுத்தாய்

ஆண் : உன் உயிரில் பாதி வெட்டி
என் உயிரில் சேர்த்து கட்டி
உலகத்து பாசம் எல்லாம்
எனக்காய் கொட்டி வைத்தாய்

ஆண் : ஜென்மம் ஒன்று எனக்கு இருந்தால்
பிறந்த உடன் கண் விழிப்பேன்
தாயாக நீ இல்லை என்றால்
தயங்காமல் உயிர் துறப்பேன்

ஆண் : யுகம் பல ஆனாலும்
உன் முகம் காண தவம் இருப்பேன்
உன் கர்பம் சேரும் வரை
பிறக்காமல் காத்திருப்பேன்

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : மார்பும் கொடுத்தாய்
உன் மனதும் கொடுத்தாய்
நான் வலியில் துடித்தால்
உன் மடியும் கொடுத்தாய்

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : மார்பும் கொடுத்தாய்
உன் மனதும் கொடுத்தாய்
நான் வலியில் துடித்தால்
உன் மடியும் கொடுத்தாய்

ஆண் : மெத்தையாய் உன் வயிறும்
மொத்தமாய் உன் உயிரும்
சுத்தமாய் என் உதிரம்
நித்தமும் நீ கொடுத்தாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here