Singers : P. Suseela, P. Madhuri and T. K. Kala
Music by : D. B. Ramachandran and S. P. Venkatesh
Lyrics by : A. Maruthakasi
Thiruvennum peyarukku uriyavalo vaa
Engal thirumanaiyil nirantharamaai kudiyirukka vaa
Chorus : Thiruvennum peyarukku uriyavalo vaa
Engal thirumanaiyil nirantharamaai kudiyirukka vaa
Thiruvennum peyarukku uriyavalo vaa
Porulennum oru sollin arumporulae vaa
Porulennum oru sollin arumporulae vaa
Valam pongum selvam pathinaarum pongidavae vaa
Valam pongum selvam pathinaarum pongidavae vaa
Sengamalamthanil thangi nalantharum mangalakaramae vaa
Mangaiyar vendidum manjal kungumam
Vazhangum varalakshmi vaa
Sengamalamthanil thangi nalantharum mangalakaramae vaa
Mangaiyar vendidum manjal kungumam
Vazhangum varalakshmi vaa
Angaiyar kanniyin aaruyir naaththi
Sangaran sodhari vaa
Sangaran sodhari vaa
Ponnil maniyil poovil anbil
Porunthi iruppavalae
Sennel kadhiril dheepa sudaril
Siriththu magizhpavalae
Kannal suvaiyil pannin oliyil
Kalanthu iruppavalae
Kannal suvaiyil pannin oliyil
Kalanthu iruppavalae
Minnum vaanaga villin yaezhvagai
Vannaththil iruppavalae
Minnum vaanaga villin yaezhvagai
Vannaththil iruppavalae
Vannaththil iruppavalae
Engal ennaththil iruppavalae
Thiruvennum peyarukku uriyavalo vaa
Thoranai panthalil thogaiyar nagaiyl
Thondridum arputhamae
Thoranai panthalil thogaiyar nagaiyl
Thondridum arputhamae
Veerarkal tholinil verththidum uzhaippinil
Vilangidum porpathamae
Carena pozhinthidum kaalnadai selvaththai
Kaaththidum narpathamae
Aaranam poottridum naaranan maarbinil
Amarnthidum karpagamae
Amarnthidum karpagamae
Thiruvennum peyarukku uriyavalo vaa
Engal thirumanaiyil nirantharamaai kudiyirukka vaa
பாடகர்கள் : பி. சுஷீலா, பி. மாதுரி மற்றும் டி. கே. கலா
இசையமைப்பாளர் : டி. பி. ராமசந்திரன் மற்றும் எஸ். பி.
வெங்கடேஷ்
பாடலாசிரியர் : எ. மருதகாசி
பெண் : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா
எங்கள் திருமனையில் நிரந்தரமாய் குடியிருக்க வா
குழு : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா
எங்கள் திருமனையில் நிரந்தரமாய் குடியிருக்க வா
பெண் : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா
பெண் : பொருளென்னும் ஒரு சொல்லின் அரும்பொருளே வா
பொருளென்னும் ஒரு சொல்லின் அரும்பொருளே வா
வளம் பொங்கும் செல்வம் பதினாறும் பொங்கிடவே வா
வளம் பொங்கும் செல்வம் பதினாறும் பொங்கிடவே வா
பெண் : செங்கமலம்தனில் தங்கி நலந்தரும் மங்களகரமே வா
மங்கையர் வேண்டிடும் மஞ்சள் குங்குமம்
வழங்கும் வரலட்சுமி வா.....
பெண் : செங்கமலம்தனில் தங்கி நலந்தரும் மங்களகரமே வா
மங்கையர் வேண்டிடும் மஞ்சள் குங்குமம்
வழங்கும் வரலட்சுமி வா.....
பெண் : அங்கையர் கன்னியின் ஆருயிர் நாத்தி
சங்கரன் சோதரி வா
சங்கரன் சோதரி வா
பெண் : பொன்னில் மணியில் பூவில் அன்பில்
பொருந்தி இருப்பவளே
செந்நெல் கதிரில் தீபச் சுடரில்
சிரித்து மகிழ்பவளே
பெண் : கன்னல் சுவையில் பண்ணின் ஒலியில்
கலந்து இருப்பவளே.....
கன்னல் சுவையில் பண்ணின் ஒலியில்
கலந்து இருப்பவளே.....
பெண் : மின்னும் வானக வில்லின் ஏழ்வகை
வண்ணத்தில் இருப்பவளே
மின்னும் வானக வில்லின் ஏழ்வகை
வண்ணத்தில் இருப்பவளே
வண்ணத்தில் இருப்பவளே
எங்கள் எண்ணத்தில் இருப்பவளே
குழு : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா
பெண் : தோரணைப் பந்தலில் தோகையர் நகையில்
தோன்றிடும் அற்புதமே
தோரணைப் பந்தலில் தோகையர் நகையில்
தோன்றிடும் அற்புதமே
பெண் : வீரர்கள் தோளினில் வேர்த்திடும் உழைப்பினில்
விளங்கிடும் பொற்பதமே
காரெனப் பொழிந்திடும் கால்நடை செல்வத்தை
காத்திடும் நற்பதமே
ஆரணம் போற்றிடும் நாரணன் மார்பினில்
அமர்ந்திடும் கற்பகமே......
அமர்ந்திடும் கற்பகமே......
குழு : திருவென்னும் பெயருக்கு உரியவளே வா
எங்கள் திருமனையில் நிரந்தரமாய் குடியிருக்க வா