Singers : L. R. Eswari and Kovai Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Chorus : Velmurugaa muruga murugaa
Velmurugaa muruga murugaa
Velmurugaa muruga murugaa

Female : Vandu vizhi valli magal
Kandu magizh kandhanukku
Kondu vanthaen tholil oru kaavadi
Naan kumbiduvaen shanmuganin sevadi

Female : Vandu vizhi valli magal
Kandu magizh kandhanukku
Kondu vanthaen tholil oru kaavadi
Naan kumbiduvaen shanmuganin sevadi

Female : Anbu nirai ullamodu
Then pazhani thedi varum
Anbu nirai ullamodu
Then pazhani thedi varum
Sembu nirai paalirukkum kaavadi
Idhu sera vendum aarumugan sevadi

Female : Vel pidiththa velanukku vel kavadi
Tamil paal kudiththa paalanukku paal kaavadi
Vel pidiththa velanukku vel kavadi
Tamil paal kudiththa paalanukku paal kaavadi

Male : Pannirendu kannanukku panneer kaavadi
Neeru pooththirukkum vannanukku pushpa

Female : Aadi varum kaavadiyai thaedi varuvaan
Avan yaar azhaiththa pothilumae odi varuvaan

Male : Paadi varum baktharidam naadi varuvaan
Avan ketta varam kettapadi kodi tharuvaan
Paadi varum baktharidam naadi varuvaan
Avan ketta varam kettapadi kodi tharuvaan

Female : Oyilaaga vadivelan utkaarum ezhil vanna
Mayilaaga naan maara vendume
Maiyal thoondumae mugam thondrumae
Oyilaaga vadivelan utkaarum ezhil vanna
Mayilaaga naan maara vendume
Maiyal thoondumae mugam thondrumae

Female : Gaana kuyilaaga isaipaadi kumaresan thudhi paadi
Thogai viriththaadi varum yaekkamae
Ennai thaakkumae athu thookkamae

Male : Oru pothilum maravaathavan thiruppaathangal
Ninaivaargal ullam kalik kondaada ennumae
Bakthi pannumae koyil annumae pakkam
Irumathargal pudai soozhnthida varum naayagan thirumaeni
Tharsikka kann kollaa
Both : Inbamae chanthira bimbamae theerum thunbamae

Both : Sevarkodi devanukku araharoharaa
Senthoor vaazh kandhanukku araharoharaa
Sevarkodi devanukku araharoharaa
Senthoor vaazh kandhanukku araharoharaa

Both : Aarupadai veeranukku araharoharaa
Aaranangu annalukku araharoharaa
Aarupadai veeranukku araharoharaa
Aaranangu annalukku araharoharaa

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கோவை சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : வேல்முருகா முருகா முருகா
வேல்முருகா முருகா முருகா
வேல்முருகா முருகா முருகா

பெண் : வண்டு விழி வள்ளி மகள்
கண்டு மகிழ் கந்தனுக்கு
கொண்டு வந்தேன் தோளில் ஒரு காவடி
நான் கும்பிடுவேன் ஷண்முகனின் சேவடி

பெண் : வண்டு விழி வள்ளி மகள்
கண்டு மகிழ் கந்தனுக்கு
கொண்டு வந்தேன் தோளில் ஒரு காவடி
நான் கும்பிடுவேன் ஷண்முகனின் சேவடி

பெண் : அன்பு நிறை உள்ளமொடு
தென் பழனி தேடி வரும்
அன்பு நிறை உள்ளமொடு
தென் பழனி தேடி வரும்
செம்பு நிறை பாலிருக்கும் காவடி
இது சேர வேண்டும் ஆறுமுகன் சேவடி ..

பெண் : வேல் பிடித்த வேலனுக்கு வேல் காவடி
தமிழ் பால் குடித்த பாலனுக்கு பால் காவடி
வேல் பிடித்த வேலனுக்கு வேல் காவடி
தமிழ் பால் குடித்த பாலனுக்கு பால் காவடி

ஆண் : பன்னிரெண்டு கண்ணனுக்கு பன்னீர் காவடி
நீரு பூத்திருக்கும் வண்ணனுக்கு புஷ்ப காவடி

பெண் : ஆடி வரும் காவடியை தேடி வருவான்
அவன் யார் அழைத்த போதிலுமே ஓடி வருவான்

ஆண் : பாடி வரும் பக்தரிடம் நாடி வருவான்
அவன் கேட்ட வரம் கேட்டபடி கோடி தருவான்
பாடி வரும் பக்தரிடம் நாடி வருவான்
அவன் கேட்ட வரம் கேட்டபடி கோடி தருவான்

பெண் : ஒயிலாக வடிவேலன் உட்காரும் எழில் வண்ண
மயிலாக நான் மாற வேண்டுமே
மையல் தூண்டுமே முகம் தோன்றுமே
ஒயிலாக வடிவேலன் உட்காரும் எழில் வண்ண
மயிலாக நான் மாற வேண்டுமே
மையல் தூண்டுமே முகம் தோன்றுமே

பெண் : கானக் குயிலாக இசைபாடி குமரேசன் துதி பாடி
தோகை விரித்தாடி வரும் ஏக்கமே
என்னை தாக்குமே அது தூக்கமே…..

ஆண் : ஒரு போதிலும் மறவாதவன் திருப்பாதங்கள்
நினைவார்கள் உள்ளம் களிக் கொண்டாட எண்ணுமே
பக்தி பண்ணுமே கோயில் அண்ணுமே பக்கம்
இருமாதர்கள் புடை சூழ்ந்திட வரும் நாயகன் திருமேனி
தரிசிக்க கண் கொள்ளா
இருவர் : இன்பமே சந்திர பிம்பமே தீரும் துன்பமே….

இருவர் : சேவற்கொடி தேவனுக்கு அரஹரோஹரா
செந்தூர் வாழ் கந்தனுக்கு அரஹரோஹரா
சேவற்கொடி தேவனுக்கு அரஹரோஹரா
செந்தூர் வாழ் கந்தனுக்கு அரஹரோஹரா

இருவர் : ஆறுபடை வீரனுக்கு அரஹரோஹரா
ஆரணங்கு அண்ணலுக்கு அரஹரோஹரா…..
ஆறுபடை வீரனுக்கு அரஹரோஹரா
ஆரணங்கு அண்ணலுக்கு அரஹரோஹரா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here