Singer : S. P. Balasubrahmanyam

Music by : Adithyan

Chorus : Hmmm…mmm..mmmm..

Male : Vasanthamae arugil vaa
Nenjamae urugavaa

Male : Venpani veesidum megangalae
Sinthidum mogana raagangalae
Ulaavarum nilaa thodum
Kaadhal raaja veethiyil
Gaanam paadi oorvalam
Vasanthamae arugil vaa

Male : Kanavai sumantha kayalvizhi
Uravil kalantha uyirmozhi
Idhayam muzhuthum pudhu ozhi
Iraval thantha aval mozhi

Male : Sonthamumaagi banthamumaagi
En uyir vaazhum sorgamumaagi
Imaikka maranthu inainthaval

Male : Venpani veesidum megangalae
Sinthidum mogana raagangalae
Ulaavarum nilaa thodum
Kaadhal raaja veethiyil
Gaanam paadi oorvalam
Vasanthamae arugil vaa

Chorus : Haa….aaa….aa….aa….

Male : Mazhalai sumantha maragatham
Manathai sumantha thalir manam
Nizhalai thodutha valai karam
Uyirum avalil adaikkalam

Male : Punniyam kodi seithavan naano
Jenmangal yaavum ennudan sera
Uravu siragai virithaval

Male : Venpani veesidum megangalae
Sinthidum mogana raagangalae
Ulaavarum nilaa thodum
Kaadhal raaja veethiyil
Gaanam paadi oorvalam
Vasanthamae arugil vaa
Nenjamae urugavaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஆதித்யன்

குழு : ம்ம்…..ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்

ஆண் : வசந்தமே…..அருகில் வா…..
நெஞ்சமே….உருக வா….

ஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே…..அருகில் வா……

ஆண் : கனவை சுமந்த கயல்விழி
உறவில் கலந்த உயிர்மொழி
இதயம் முழுதும் புது ஒளி
இரவல் தந்த அவள் மொழி

ஆண் : சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி
என் உயிர் வாழும் சொர்க்கமும் ஆகி
இமைக்க மறந்து இணைந்தவள்

ஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே…..அருகில் வா……

குழு : ஆஅ…..ஆ……ஆஆ……..

ஆண் : மழலை சுமந்த மரகதம்
மனதை சுமந்த தளிர்மரம்
நிழலை தொடுத்த வளைகரம்
உயிரும் அவளின் அடைக்கலம்

ஆண் : புண்ணியம் கோடி
செய்தவன் நானோ
ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர
உறவு சிறகை விரித்தவள்

ஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும் நிலா தொடும்
காதல் ராஜ வீதியில்
கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே…..அருகில் வா……
நெஞ்சமே….உருக வா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here