Singer : K. J. Yesudas

Music by : Gangai Amaran

Male : Vaazhvae maayam
Indha vaazhvae maayam
Vaazhvae maayam
Indha vaazhvae maayam
Tharai meedhu kaanum yaavum
Thanneeril podum kolam
Nilaikkaadhammaa…

Male : Yaaroadu yaar vandhathu..
Naam pogumpothu
Yaaroadu yaar selvathu…

Male : Vaazhvae maayam
Indha vaazhvae maayam

Male : Yaar yaarkku enna vesamo
Ingae yaar yaarkku entha medaiyo…
Aadum varai koottam varum
Aattam nindraal ottam vidum

Male : Thaayaalae vandhathu
Theeyaalae vendhathu
Thaayaalae vandhathu
Theeyaalae vendhathu
Mei endru meniyai yaar sonnathu…

Male : Vaazhvae maayam
Indha vaazhvae maayam

Male : Pirandhaalum paalai ootruvaar
Ingae iranthaalum paalai ootruvaar
Undaavathu rendaalathaan
Oorpovathu naalaaladhaan

Male : Karuvodu vandhadhu
Theruvodu povadhu
Karuvodu vandhadhu
Theruvodu povadhu
Mei endru meniyai yaar sonnathu…

Male : Vaazhvae maayam
Indha vaazhvae maayam

Male : Naadagam vidum neramthaan
Uchcha kaatchi nadakkuthammaa
Chorus : Aaa….aaa….aaa….aaaa….
Male : Vesham kalaikkavum oivu edukkavum
Velai nerungathammaa
Chorus : Aaa….aaa….aaa….aaaa….

Male : Paadhaigal pala maariyae
Vantha payanam mudiyuthammaa
Thaai kondu vandhathai
Thaalaatti vaithathai
Noi kondu pogum neramammaa….

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : வாழ்வே மாயம்
இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம்
இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா…

ஆண் : யாரோடு யார் வந்தது
நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது….

ஆண் : வாழ்வே மாயம்
இந்த வாழ்வே மாயம்

ஆண் : யார் யார்க்கு என்ன வேஷமோ

இங்கே
யார் யார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்

ஆண் : தாயாலே வந்தது
தீயாலே வெந்தது
தாயாலே வந்தது
தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது..

ஆண் : வாழ்வே மாயம்
இந்த வாழ்வே மாயம்

ஆண் : பிறந்தாலும் பாலை ஊற்றுவார்
இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்
ஊர்போவது நாலாலதான்

ஆண் : கருவோடு வந்தது
தெருவோடு போவது
கருவோடு வந்தது
தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது..

ஆண் : வாழ்வே மாயம்
இந்த வாழ்வே மாயம்

ஆண் : நாடகம் விடும் நேரம்தான்
உச்சக் காட்சி நடக்குதம்மா
குழு : ஆஅ….ஆஅ…..ஆஅ……
ஆண் : வேஷம் கலைக்கவும்
ஒய்வு எடுக்கவும்
வேலை நெருங்குதம்மா
குழு : ஆஅ….ஆஅ…..ஆஅ……

ஆண் : பாதைகள் பல மாறியே
வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை
தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here