Singer : Saindhavi Prakash
Music Director : Gavaskar Avinash
Lyricist : Mohan Rajan
பாடகி : சைந்தவி பிரகாஷ்
இசை அமைப்பாளர் : கவாஸ்கர் அவினாஷ்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
பெண் : வெங்காட்டு பூமியில் புழுதி காத்து வீசுதே
வெஞ்சோகம் நெஞ்சிலே பெருகி பாயுதே
நீ போன பாதைய நெஞ்சம் தேடி வாடுதே
எங்கே நீ போனியோ கண்கள் ஏங்கி தேடுதே
பெண் : விழாத வானம் இன்று
மண்ணில் வீழ்ந்து போனதோ
தொடாத தூரம் சென்று கேள்வியானதோ
முனங்கல் : .....................
பெண் : ஓ போகும் பாதை
குழு : சேரவில்ல
பெண் : தேடலது
குழு : ஓயவில்ல
பெண் : கேள்விகளும்
குழு : தீரவில்ல
பெண் : இன்னும் எங்க போகும்
பெண் : சொன்னபடி
குழு : வரவில்ல
பெண் : பட்டவழி
குழு : கொஞ்சமல்ல
பெண் : நல்ல வழி
குழு : காண வில்ல
பெண் : நெஞ்சம் என்ன ஆகும்
பெண் மற்றும் குழு : பொல்லாத ஊருக்குள்ள
சந்தேகம் குறையவில்லை
சொல்லாத விடுகதையில
விடை தெரியில்லையே ஏனோ
பெண் மற்றும் குழு : மண் ஆழம் போகும்
ஈரம் எளிதில் காய்வதில்லை
நெஞ்சோடு வாழும் நேசம்
வழியில் வீழ்வதில்லை
பெண் : கண்ணோடு தேடல் அது தீராதா
கண்ணீரின் சாரல் அது ஓயாதா
குழு : எல்லாமே கண்முன் மாறி போகுமா
ஊர் சொன்ன வார்த்த பொய்யா ஆகுமா
விடுகதையில விடை தெரியல
உயிரும் உடையுதே
புது புதிரில முடிச்சி அவிழல
இதயம் நொருங்குதே
முனங்கல் : ..........................