Singers : B. Vasantha and S. V. Ponnusamy
Music by : T. Pugazhenthi
Lyrics by : Kannadasan
Thaiyaarae…ae….ae….ae…..
Thaiyaarae….ae….ae….ae…..
Chorus : Thaiyaarae…thaiyaarae…thaiyaarae…
Vennilavae vennilavae
Aanirukka pennirukka neeyum yaenadi
Vennilavae vennilavae
Aanirukka pennirukka neeyum yaenadi
Gopiyargal gangaiyilae
Kulikka vanthom vennilavae
Chorus : Gopiyargal gangaiyilae
Kulikka vanthom vennilavae
Vaalipargal kadhalilae
Mayanga vanthom vennilavae
Chorus : Vaalipargal kadhalilae
Mayanga vanthom vennilavae
Manathu pola jodi kondu
Vaazha vanthom vennilavae
Vennilavae vennilavae
Aanirukka pennirukka neeyum yaenadi
Maalai polae kaigalai podu
Mai vizhiyil kadhai solluvaen
Maalai polae kaigalai podu
Mai vizhiyil kadhai solluvaen
Vannamaan enthan poopanthalil
Konjam naadodi thaen thendralil
Aavalai theerkkavo annamae
Ini thaalaathu en ullamae
Vennilavae vennilavae
Aanirukka pennirukka neeyum yaenadi
Indru mounangal nee paadum sangeethamaa
Illai maappillai naan vaadha santhoshamaa
Indru mounangal nee paadum sangeethamaa
Illai maappillai naan vaadha santhoshamaa
Naanum padhinaaril aalaana pennallavaa
Unnai paarththaalae peraasai varumallavaa
Aasai varumallavaa
Unnai sinthaamal sidharaamal naanallavaa
Intha sevvaayin idhazhodu thaenallavaa
Intha sevvaayin idhazhodu thaenallavaa
Vennilavae vennilavae
Aanirukka pennirukka neeyum yaenadi
Melaaga thaamarai mottu
Female : Vaadaatho kangal pattu
Male : Naan paarththa kolam angae
Female : Yaen maara vendum ingae
……………….
Nee enakkaga
Female : Naan unakkaga
Male : Nee enakkaga
Female : Naan unakkaga
Both : Intha raaththiriyil sugam namakkaga
Intha raaththiriyil sugam namakkaga
Vennilavae vennilavae
Aanirukka pennirukka neeyum yaenadi
Aanirukka pennirukka neeyum yaenadi
Aanirukka pennirukka neeyum yaenadi
பாடகர்கள் : பி. வசந்தா மற்றும் எஸ். வி. பொன்னுசாமி
இசையமைப்பாளர் : டி. புகழேந்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : தையாரே....ஏ....ஏ.....ஏ......
தையாரே.....ஏ....ஏ.....ஏ......
குழு : தையாரே.......தையாரே.....தையாரே....
குழு : வெண்ணிலவே வெண்ணிலவே
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
வெண்ணிலவே வெண்ணிலவே
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
பெண் : கோபியர்கள் கங்கையிலே
குளிக்க வந்தோம் வெண்ணிலவே
குழு : கோபியர்கள் கங்கையிலே
குளிக்க வந்தோம் வெண்ணிலவே
ஆண் : வாலிபர்கள் காதலிலே
மயங்க வந்தோம் வெண்ணிலவே....
குழு : வாலிபர்கள் காதலிலே
மயங்க வந்தோம் வெண்ணிலவே....
குழு : மனது போல ஜோடி கொண்டு
வாழ வந்தோம் வெண்ணிலவே......
குழு : வெண்ணிலவே வெண்ணிலவே
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
ஆண் : மாலை போலே கைகளைப் போடு
மை விழியில் கதை சொல்லுவேன்
மாலை போலே கைகளைப் போடு
மை விழியில் கதை சொல்லுவேன்
பெண் : வண்ணமான் எந்தன் பூப்பந்தலில்
கொஞ்சம் நாடோடித் தேன் தென்றலில்
ஆண் : ஆவலைத் தீர்க்கவோ அன்னமே
இனித் தாளாது என் உள்ளமே.....
குழு : வெண்ணிலவே வெண்ணிலவே
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
ஆண் : இன்று மௌனங்கள் நீ பாடும் சங்கீதமா
இல்லை மாப்பிள்ளை நான் வாத சந்தோஷமா
இன்று மௌனங்கள் நீ பாடும் சங்கீதமா
இல்லை மாப்பிள்ளை நான் வாத சந்தோஷமா
பெண் : நானும் பதினாறில் ஆளான பெண்ணல்லவா
உன்னைப் பார்த்தாலே பேராசை வருமல்லவா
ஆசை வருமல்லவா
ஆண் : உன்னைச் சிந்தாமல் சிதறாமல் நானள்ளவா
இந்தச் செவ்வாயின் இதழோடு தேனள்ளவா......
இந்தச் செவ்வாயின் இதழோடு தேனள்ளவா......
குழு : வெண்ணிலவே வெண்ணிலவே
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
ஆண் : மேலாகத் தாமரை மொட்டு
பெண் : வாடாதோ கண்கள் பட்டு
ஆண் : நான் பார்த்த கோலம் அங்கே
பெண் : ஏன் மாற வேண்டும் இங்கே
குழு : ...........................
ஆண் : நீ எனக்காக
பெண் : நான் உனக்காக
ஆண் : நீ எனக்காக
பெண் : நான் உனக்காக
இருவர் : இந்த ராத்திரியில் சுகம் நமக்காக
இந்த ராத்திரியில் சுகம் நமக்காக
குழு : வெண்ணிலவே வெண்ணிலவே
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி