Ennai Mannikka Song Lyrics is the track from Maadi Veettu Mappillai Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : T. Chalapathi Rao
Lyricist : Kannadasan
Female : Aatrangarai solai amaithiyaana maalai
Kaatru varum velai kan moodi kidanthen
Paartha oru kaalai pakkathil amarthaan
Bayantheno naanum parivodu paarthen (Dialouge)
Female : Ennai manikka vendum kanniyare
Antha mayakathin porul enna
Avan sonnthu pol naan nadanthen
Antha tholviyin sugamenna
Female : Mella ennai anaithaan
Melaaga pidithaan
Kalla na marukka kaniyaanen suvaiyaaga (Dialouge)
Female : Athu ondra irandaa
Ondra irandaa nadanthathai ellam
Ungalidam solla
Antha odamum nathiyum poga poga
Thoongiviten mella…. haan
Female : Ennai manikka vendum kanniyare
Antha mayakathin porul enna
Avan sonnthu pol naan nadanthen
Antha tholviyin sugamenna
Female : Ennvo karpanaigal
Ethanaiyo arputhangal
Kannai vizhithen naan
Kaadhalanai kaanavilai (Dialouge)
Female : Azhuveno illai siripeno
Athai naanthane kaeten
Antha anubavam ondre pothum pothum
Avanukendre vaazhven
Female : Ennai manikka vendum kanniyare
Antha mayakathin porul enna
Avan sonnthu pol naan nadanthen
Antha tholviyin sugamenna
Female : Madhu kinnam maarinaal
Madhuvin suvai maaruma
Pudhu pennai soodinaal
Pudhiya sugam thondruma (Dialouge)
Female : Avan meetiya veenaiyai
Marupadi meetta varuvaan ivvidame
Intha koottathil avanai
Paarkka nernthaal
Koorungal ennidame
Female : Ennai manikka vendum
Ennai manikka vendum
Ennai manikka vendum
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஆற்றங்கரைச் சோலை அமைதியான மாலை
காற்று வரும் வேளை கண்மூடிக் கிடந்தேன்
பார்த்த ஒரு காளை பக்கத்தில் அமர்ந்தான்
பயந்தேனா நானும் பரிவோடு பார்த்தேன் (வசனம்)
பெண் : எனை மன்னிக்க வேண்டும் கன்னியரே
அந்த மயக்கத்தின் பொருளென்ன
அவன் சொன்னது போலே நான் நடந்தேன்
அந்த தோல்வியின் சுகமென்ன
பெண் : மெல்ல எனை அணைத்தான்
மேலாக பிடித்தான்
கல்லா நான் மறுக்க கனியானேன் சுவைக்க (வசனம்)
பெண் : அது ஒன்றா இரண்டா
ஒன்றா இரண்டா நடந்ததையெல்லாம்
உங்களிடம் சொல்ல
அந்த ஓடமும் நதியும் போக போக
தூங்கி விட்டேன் மெல்ல ..ஹான்
பெண் : எனை மன்னிக்க வேண்டும் கன்னியரே
அந்த மயக்கத்தின் பொருளென்ன
அவன் சொன்னது போலே நான் நடந்தேன்
அந்த தோல்வியின் சுகமென்ன
பெண் : என்னவோ கற்பனைகள்
எத்தனையோ அற்புதங்கள்
கண்ணை விழித்தேன் நான்
காதலனைக் காணவில்லை (வசனம்)
பெண் : அழுவேனா இல்லை சிரிப்பேனா
அதை நான்தானே கேட்டேன்
அந்த அனுபவம் ஒன்றே போதும் போதும்
அவனுக்கென்றே வாழ்வேன்
பெண் : எனை மன்னிக்க வேண்டும் கன்னியரே
அந்த மயக்கத்தின் பொருளென்ன
அவன் சொன்னது போலே நான் நடந்தேன்
அந்த தோல்வியின் சுகமென்ன
பெண் : மதுக்கிண்ணம் மாறினால்
மதுவின் சுவை மாறுமா
புதுப்பெண்ணை சூடினால்
புதிய சுகம் தோன்றுமா (வசனம்)
பெண் : அவன் மீட்டிய வீணையை
மறுபடி மீட்ட வருவான் இவ்விடமே
இந்த கூட்டத்தில் அவனைப் பார்க்க நேர்ந்தால்
கூட்டத்தில் அவனைப் பார்க்க நேர்ந்தால்
கூறுங்கள் என்னிடமே
பெண் : எனை மன்னிக்க வேண்டும்
எனை மன்னிக்க வேண்டும்
எனை மன்னிக்க வேண்டும்