Aanantham Indru Song Lyrics is a track from Kalyanikku Kalyanam Tamil Film– 1959, Starring S. S. Rajendran, Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, V. K. Ramasamy, V. R. Rajagopal, M. N. Rajam, Mynavathi, G. Sakunthala, Ragini, K. Malathi, Lakshmi Praba and S. N. Lakshmi. This song was sung by P. Leela and M. L. Vasanthakumari and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.

Singers : P. Leela and M. L. Vasanthakumari

Music Director : G. Ramanathan

Lyricist : Pattukottai Kalyanasundaram

Females : Aanandham indru aarambam
Aanandham indru aarambam
Manam anbil pinaindhaal
Pinn adhuvae perinbam
Aanandham indru aarambam
Manam anbil pinaindhaal
Pinn adhuvae perinbam
Aanandham indru aarambam

Females : Aadum kadalum ponni aarum
Kalandhadhu pol
Female : Haa..aaa…aa…aa…
Females : Aadum kadalum ponni aarum
Kalandhadhu pol
Aadum kadalum ponni aarum
Kalandhadhu pol
Koodum ivargal iru perum thaedum utar
Aanandham indru aarambam
Koodum ivargal iru perum thaedum utar
Aanandham indru aarambam

Females : Meenudan maanum
Mangai vizhigalilae thulludhae
Vindhai migum maunam
Veerathai velludhae
Meenudan maanum
Mangai vizhigalilae thulludhae
Vindhai migum maunam
Veerathai velludhae

Female : Thaenai sumandha
Malar maalai sumandha aval
Thaenai sumandha
Malar maalai sumandha aval

Females : Naani kunindha mugam
Nalla panbai solludhae
Naani kunindha mugam
Nalla panbai solludhae
Aanandham indru aarambam
Manam anbil pinaindhaal
Pinn adhuvae perinbam
Aanandham indru aarambam

Females : Nalla kudumbam oru palgalai kazhagam endru
Thellu thamizh kavinjan thelivurai sonnadhundu
Nalla kudumbam oru palgalai kazhagam endru
Thellu thamizh kavinjan thelivurai sonnadhundu
Illaram yerppavargal idhanai manadhil kondu
Illaram yerppavargal idhanai manadhil kondu
Inbamudan nadanthaal vaazhvukku migha nandru
Inbamudan nadanthaal vaazhvukku migha nandru
Aanandham indru aarambam
Manam anbil pinaindhaal
Pinn adhuvae perinbam
Aanandham indru aarambam

Carnatic : ……………………..

Females : Aanandham indru aarambam

பாடகர்கள் : பி. லீலா மற்றும் எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பெண்கள் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மனம் அன்பில் பிணைந்தால்
பின் அதுவே பேரின்பம்….
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மனம் அன்பில் பிணைந்தால்
பின் அதுவே பேரின்பம்….
ஆனந்தம் இன்று ஆரம்பம்

பெண்கள் : ஆடும் கடலும் பொன்னி ஆறும்
கலந்தது போல்
பெண் : ஹா..ஆஅ…..ஆஆ….
பெண்கள் : ஆடும் கடலும் பொன்னி ஆறும்
கலந்தது போல்
ஆடும் கடலும் பொன்னி ஆறும்
கலந்தது போல்
கூடும் இவர்களிரு பேரும் தேடும் உயர்..
ஆனந்தம் இன்று ஆரம்பம்
கூடும் இவர்களிரு பேரும் தேடும் உயர்..
ஆனந்தம் இன்று ஆரம்பம்

பெண்கள் : மீனுடன் மானும்
மங்கை விழிகளிலே துள்ளுதே
விந்தை மிகும் மௌனம்
வீரத்தை வெல்லுதே
மீனுடன் மானும்
மங்கை விழிகளிலே துள்ளுதே
விந்தை மிகும் மௌனம்
வீரத்தை வெல்லுதே

பெண் : தேனைச் சுமந்த
மலர் மாலைச் சுமந்த அவள்
தேனைச் சுமந்த
மலர் மாலைச் சுமந்த அவள்

பெண்கள் : நாணிக் குனிந்த முகம்
நல்ல பண்பைச் சொல்லுதே….
நாணிக் குனிந்த முகம்
நல்ல பண்பைச் சொல்லுதே….
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மனம் அன்பில் பிணைந்தால்
பின் அதுவே பேரின்பம்….
ஆனந்தம் இன்று ஆரம்பம்

பெண்கள் : நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று
தெள்ளு தமிழ்க் கவிஞன் தெளிவுரை சொன்னதுண்டு
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று
தெள்ளு தமிழ்க் கவிஞன் தெளிவுரை சொன்னதுண்டு
இல்லறம் ஏற்பவர்கள் இதனை மனதில் கொண்டு
இல்லறம் ஏற்பவர்கள் இதனை மனதில் கொண்டு
இன்பமுடன் நடந்தால் வாழ்வுக்கு மிக நன்று…
இன்பமுடன் நடந்தால் வாழ்வுக்கு மிக நன்று…
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மனம் அன்பில் பிணைந்தால்
பின் அதுவே பேரின்பம்….
ஆனந்தம் இன்று ஆரம்பம்

கர்நாடிக் : ……………………….

பெண்கள் : ஆனந்தம் இன்று ஆரம்பம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here