Aarambam Aavadhu Song Lyrics is a track from Thanga Padhumai Tamil Film– 1959, Starring Sivaji Ganesan, M. N. Nambiyar, N. S. Krishnan, V. R. Rajagopal, R. Balasubramaniam, Padmini, M. N. Rajam, T. P. Muthulakshmi, T. R. Rajakumari, Lalitha, E. V. Saroja and Lakshmi Rajyam. This song was sung by C. S. Jayaraman and Padmini and the music was composed by Vishwanathan- Ramamoorthy.  Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.

Singers : C. S. Jayaraman and Padmini

Music Director : Vishwanathan- Ramamoorthy

Lyricist : Pattukottai Kalyanasundaram

Female : Athaan neengal kolaikaranaa?
Kotravanai kondreergalaa?
Koorungal athaan koorungal

Male : Eedattra pathiniyin inbathai
Kondravan naan
Aval Idhayathil kondhalitha
Ennangalai kondravan naan

Male : Vaazha thagunthavalai
Vaazhaamal vaithu vittu
Paazhum parathaiyinaal panbuthanai
Kondravan naan
Andha kolaigalukkae aalaaga irundhu vitten
Ini endha kolai seidhaalum
Ennadi en gyaana pennae
Ennadi en gyaana pennae
Ennadi en gyaana pennae

Male : Aarambam aavadhu pennukullae
Avan aadi adanguvadhu mannukkullae
Manidhan aarambam aavadhu pennukullae
Avan aadi adanguvadhu mannukkullae

Male : Aaraaindhu paar mana kannukkullae
Aathirang kolladhae nenjukkullae
Aaraaindhu paar mana kannukkullae
Aathirang kolladhae nenjukkullae

Male : Aarambam aavadhu
Manidhan aarambam aavadhu pennukullae
Avan aadi adanguvadhu mannukkullae

Female : Athaan athaan ungal meedhu kodum pazhi
Vandhirukkiradhae athaan en meedhu unmaiyaagha
Anbirundhaal anjaamal unmaiyai sollungal
Yaarukkum anjaamal unmaiyai sollungal

Male : Anbai keduthu nal aasaiyai kondravan
Anji nadappena gyaana pennae
Anbai keduthu nal aasaiyai kondravan
Anji nadappena gyaana pennae
Thunbathai katti sumakka thunindhavan
Sonnalum kaetpaanoo gyaana pennae
Sonnalum kaetpaanoo gyaana pennae

Male : Aarambam aavadhu
Manidhan aarambam aavadhu pennukullae
Avan aadi adanguvadhu mannukkullae

Female : Athaan unmaiyai koora mudiyathapadi
Avvalavu thavaru enna seidhu vitteergal?

Male : Thavarukkum thavaraana thavarai purindhu vittu
Thanipattu ponavan gyaana pennae..ye
Thavarukkum thavaraana thavarai purindhu vittu
Thanipattu ponavan gyaana pennae..
Thanipattu ponavan gyaana pennae..
Padhari padhari nindru ..kadhari kadhari pulambinaalum
Payanpattu varuvaanoo gyaana pennae..
Payanpattu varuvaanoo gyaana pennae..

Male : Aarambam aavadhu
Manidhan aarambam aavadhu pennukullae
Avan aadi adanguvadhu mannukkullae
Aaraaindhu paar mana kannukkullae
Aathirang kolladhae nenjukkullae

Female : Aaaaaaaaaaaaaaa…
Athaan …athaan
Idhu enn athaan …idhu enna…
Ungal kangal engae athaan
Ungal kangal engae athaan
Ungal kangal engae
Athaan

Dialogue : ……………….

Male : Koduthavanae
Parithu kondaanadi
Maanae valarthavanae veruthu vittandi
Kannai koduthavanae
Parithu kondaanadi
Maanae valarthavanae veruthu vittandi

Male : Poruthamaana thunai irundhum
Pongi varum azhagirundhum
Pona pakkam poga vitten paarvaiyai
Avan poruthirundhae
Purindhu kondaan velaiyai

Male : Poruthamaana thunai irundhum
Pongi varum azhagirundhum
Pona pakkam poga vitten paarvaiyai
Avan poruthirundhae
Purindhu kondaan velaiyai

Male : Kannai koduthavanae
Parithu kondaanadi
Maanae valarthavanae veruthu vittandi

Female : Karunaiyae vadivamaana deivama
Ungal kangalai parithu kondathu

Male : Edhiri vandhu kedukkavillai
Idhayam idam kodukkavillai
Edhiri vandhu kedukkavillai
Idhayam idam kodukkavillai
Engirundho yevi vittaan kiliyai
Adhu en thalaiyil pottadhadi pazhiyai
Kannai koduthavanae
Parithu kondaanadi
Maanae valarthavanae veruthu vittandi

Female : Needhi nilaipera en
Nettriyil kungumam thigazha
Unmaiyai koorungal
Ungal manaivi ketkkiraal
En manjalum kungumamum
Ketkkiradhu athaan

Male : Singaaram kettu siraipatta paavikku
Samsaaram yedhukkadi thangam samsaaram yedhukkadi
Singaaram kettu siraipatta paavikku
Samsaaram yedhukkadi thangam samsaaram yedhukkadi
Singaaram kettu siraipatta paavikku
Samsaaram yedhukkadi thangam samsaaram yedhukkadi

Male : Mainiviyai kuzhandhaiyai marandhu thirindhavanai
Vaazhthuvadhu aagathadhadi
Mainiviyai kuzhandhaiyai marandhu thirindhavanai
Vaazhthuvadhu aagathadhadi mannikka koodathadi
Singaaram kettu siraipatta paavikku
Samsaaram yedhukkadi thangam samsaaram yedhukkadi

பாடகர்கள் : சி. எஸ். ஜெயராம் மற்றும் பத்மினி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பெண் : அத்தான் நீங்கள் கொலைக்காரனா?
கொற்றவனைக் கொன்றீர்களா?
கூறுங்கள் அத்தான் கூறுங்கள்

ஆண் : ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக்
கொன்றவன் நான்
அவள் இதயத்தில் கொந்தளித்த
எண்ணங்களைக் கொன்றவன் நான்

ஆண் : வாழத் தகுந்தவளைக்
வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பரத்தையினால் பண்புதனைக்
கொன்றவன் நான்
அந்த கொலைகளுக்கே ஆளாக இருந்துவிட்டேன்
இனி எந்த கொலை செய்தாலும்
என்னடி என் ஞானப்பெண்ணே
என்னடி என் ஞானப்பெண்ணே
என்னடி என் ஞானப்பெண்ணே

ஆண் : ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே

ஆண் : ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே

ஆண் : ஆரம்பம் ஆவது
மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே

பெண் : அத்தான் அத்தான் உங்கள் மீது கொடும் பழி
வந்திருக்கிறதே அத்தான் என் மீது உண்மையாக
அன்பிருந்தால் அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்
யாருக்கும் அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்

ஆண் : அன்பைக் கெடுத்து நல் ஆசையைக் கொன்றவன்
அஞ்சி நடப்பானா ஞானப் பெண்ணே
அன்பைக் கெடுத்து நல் ஆசையைக் கொன்றவன்
அஞ்சி நடப்பானா ஞானப் பெண்ணே
துன்பத்தைக் கட்டிச் சுமக்கத் துணிந்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே
சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே

ஆண் : ஆரம்பம் ஆவது
மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே

பெண் : அத்தான் உண்மையைக் கூற முடியாதபடி
அவ்வளவு தவறு என்ன செய்து விட்டீர்கள் ?

ஆண் : தவறுக்கும் தவறான தவறைப் புரிந்துவிட்டு
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே..ஏ
தவறுக்கும் தவறான தவறைப் புரிந்துவிட்டு
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே
பதறிபதறி நின்று …கதறிகதறிப் புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே

ஆண் : ஆரம்பம் ஆவது
மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரங் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே

பெண் : ஆஆஆஆஆஆஆஆ………
அத்தான்……அத்தான் ….
இது என்ன அத்தான் …….இது என்ன…
உங்கள் கண்கள் எங்கே அத்தான் ……..
உங்கள் கண்கள் எங்கே அத்தான் ……..
உங்கள் கண்கள் எங்கே
அத்தான் ……..

வசனம் : ……………..

ஆண் : கொடுத்தவனே
பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
கண்ணைக் கொடுத்தவனே
பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி

ஆண் : பொருத்தமான துணையிருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொறுத்திருந்தே
புரிந்துக் கொண்டான் வேலையை

ஆண் : பொருத்தமான துணையிருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொறுத்திருந்தே
புரிந்துக் கொண்டான் வேலையை

ஆண் : கண்ணைக் கொடுத்தவனே
பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி

பெண் : கருணையே வடிவமான தெய்வமா
உங்கள் கண்களைப் பறித்துக்கொண்டது ?

ஆண் : எதிரி வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எதிரி வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை
அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணைக் கொடுத்தவனே
பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி

பெண் : நீதி நிலைப்பெற என்
நெற்றியில் குங்குமம் திகழ
உண்மையைக் கூறுங்கள்
உங்கள் மனைவி கேட்கிறாள்
என் மஞ்சளும் குங்குமமும்
கேட்கிறது அத்தான்

ஆண் : சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி

ஆண் : மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி…
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி தங்கம் மன்னிக்ககூடாதடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் எதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here