Maalai Ondru Kaiyil Song Lyrics is a track from Kathanayaki Tamil Film – 1955, Starring Padmini. T. R. Ramachandran, M. N. Rajam, K. A. Thangavelu and Others. This song was sung by K. Jamuna Rani and Radha Jayalakshmi and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.

Singers : K. Jamuna Rani and Radha Jayalakshmi

Music Director : G. Ramanathan

Lyricist : Kannadasan

Female : Maalai ondru kaiyil kondu suzhattri
Immandapaththil nindru veesiduvaen
Maalai ondru kaiyil kondu suzhattri
Immandapaththil nindru veesiduvaen
Adhu vanthu kazhuththil vizhnthavarai manavaalanaaga
Udan kootti selvaen
Vanthu kazhuththil vizhnthavarai manavaalanaaga
Udan kootti selvaen

Female : Maalai ondru kaiyil kondu suzhattri
Immandapaththil nindru veesiduvaen

Female : Kalaiyae un idhzh kaanum mudhal paadama
Inba kalaiyae un idhazh kaanum mudhal paadamaa
Kadhal kaniyae un vizhi kooda kavi paadumaa

Female : Kalaiyae un idhzh kaanum mudhal paadama

Female : Nilavodu vilaiyaadum ezhil thaaraiyai
Nilavodu vilaiyaadum ezhil thaaraiyai
Pirikka ninaiththaalum evaraalum niraiverumaa

Female : Kalaiyae un idhzh kaanum mudhal paadama

Female : Vilaimaathar vizhi mevum visham yaavume
Vilaimaathar vizhi mevum visham yaavume
Inba nilai kaanum anuraaga kalai koodamaa

Female : Vilaimaathar vizhi mevum visham yaavume
Inba nilai kaanum anuraaga kalai koodamaa

Female : Ilangkaadhal manam nogum nilaiyaagumaa
Ilangkaadhal manam nogum nilaiyaagumaa
Irul mevum en vaazhvil oli veesumaa oli veesumaa

Female : Deivame kankanda deivamae
Kaalamellaam en vaazhvinil
Kankanda deivamae
Kaalamellaam en vaazhvinil
Kankanda deivamae

Female : Aalaiyin karumpaaga
Alaipdum thurumpaaga
Aalaiyin karumpaaga
Alaipdum thurumpaaga
Amaithiyillaa vaazhvil oli veesa vareer
Naan kanda deivamae…
Amaithiyillaa vaazhvil oli veesa vareer
Naan kanda deivamae…

Female : Kanithu vantha en karunai kadalae
Amuthu unnavaarum swaami
Amuthu unnavaarum…

Female : Kadan kedaamalae maadhaviyin
Kadan kedaamalae maadhaviyin
Amuthunnaen idhen aanai
Kannagiyae enthan maanae…

Female : Kadan kedaamalae maadhaviyin
Amuthunnaen idhen aanai
Kannagiyae enthan maanae…

Female : Adaikkalamae adaikkalame
Adaikkalamae adaikkalame
Adhinaya gunamulla erumai kannagi
Adaikkalamae adaikkalame

Female : Ungal idaikulam thannil vantha
Engalin thaayae
Idaikulam thannil vantha
Engalin thaayae
Ini unaiyallaal kedhi illaiyarivaayae
Ini unaiyallaal kedhi illaiyarivaayae

Female : Adaikkalamae adaikkalame

Female : Vaazhvinilae enakkethaenum thunbam vanthaal
Vaiththa adaiyaalam maarividum
Maangaai azhugividum malligai vaadividum
Maangaai azhugividum malligai vaadividum
Thengaai udainthu vidum
Thiruvilakku anainthu vidum

Female : Vaazhvinilae enakkethaenum thunbam vanthaal
Vaiththa adaiyaalam maarividum

Female : Silambo….silambu
Senthamizh selvi oonjalaadidum
Senthamizh selvi oonjalaadidum
Sanga palagaiyilae valar sanga pulavargalae

Female : Silambo….silambu
Thanmaanam ulla nalla vanigargalae
Thanmaanam ulla nalla vanigargalae
Dharmam yaedhum thavaraa thanigargalae

Female : Sanga palagaiyile valar sanga pulavargalae
Silambo….silambu

Female : Nalla kaalam vanthathaiyaa koodave vaanga
Summa koodavae vaanga nampikkaiyaa
Kaal silamabai ellaa ngaiyilae thaanga
Solli vachcha maathiriyaa neenga
Vilaiyai podunga raja
Sonna sollai ketpaaru koodavae vaanga
Naan sonna sollai ketpaaru koodavae vaanga

Female : Vaazhkkaiyin deepam marainthathae swaami
Vaadaatha malarum ularnthathae swaami
Valamaana chozhaiyum vattraatha poigaiyum
Nilaimaari ponathae neethiyum marainthathae swaami

Female : Kodunkol aatchiyil uruvamaana kottravaa
En kanavar kuttramae purinthathundaa
Kolai paathagam seitha pazhikaara pandiyaa
Innaattil kuraiyedhum nernthathundaa

Female : Aaraatchi illaatha mannavaa unnaiyae
Agampaavaththaaal maranthaai
Antho en silampathai paar

Female : Anthanar aravor aavodu mathanaiyum
Aandror saandror paththini pennmaar
Anpargal vaazha aneethiyum veezha
Vaa…vaa….akkini deva…

பாடகர்கள் : கே. ஜமுனாராணி மற்றும் ராதா ஜெயலட்சுமி

இசையமைப்பாளர் : ஜி ராமநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மாலை ஒன்று கையில் கொண்டு சுழற்றி
இம்மண்டபத்தில் நின்று வீசிடுவேன்
மாலை ஒன்று கையில் கொண்டு சுழற்றி
இம்மண்டபத்தில் நின்று வீசிடுவேன்
அது வந்து கழுத்தில் விழுந்தவரை மணவாளனாக
உடன் கூட்டிச் செல்வேன்…..
வந்து கழுத்தில் விழுந்தவரை மணவாளனாக
உடன் கூட்டிச் செல்வேன்…..

பெண் : மாலை ஒன்று கையில் கொண்டு சுழற்றி
இம்மண்டபத்தில் நின்று வீசிடுவேன்

பெண் : கலையே உன் இதழ் காணும் முதல் பாடமா
இன்பக் கலையே உன் இதழ் காணும் முதல் பாடமா
காதல் கனியே உன் விழிக் கூட கவி பாடுமா

பெண் : கலையே உன் இதழ் காணும் முதல் பாடமா

பெண் : நிலவோடு விளையாடும் எழில் தாரையை
நிலவோடு விளையாடும் எழில் தாரையை
பிரிக்க நினைத்தாலும் எவராலும் நிறைவேறுமா

பெண் : கலையே உன் இதழ் காணும் முதல் பாடமா

பெண் : விலைமாதர் விழி மேவும் விஷம் யாவுமே
விலைமாதர் விழி மேவும் விஷம் யாவுமே
இன்ப நிலை காணும் அனுராக கலை கூடமா

பெண் : விலைமாதர் விழி மேவும் விஷம் யாவுமே
இன்ப நிலை காணும் அனுராக கலை கூடமா

பெண் : இளங்காதல் மனம் நோகும் நிலையாகுமா
இளங்காதல் மனம் நோகும் நிலையாகுமா
இருள் மேவும் என் வாழ்வில் ஒளி வீசுமா ஒளி வீசுமா

பெண் : தெய்வமே கண்கண்ட தெய்வமே
காலமெல்லாம் என் வாழ்வினில்
கண்கண்ட தெய்வமே
காலமெல்லாம் என் வாழ்வினில்
கண்கண்ட தெய்வமே

பெண் : ஆலையின் கரும்பாக
அலைபடும் துரும்பாக
ஆலையின் கரும்பாக
அலைபடும் துரும்பாக
அமைதியில்லா வாழ்வில் ஒளி வீச வாரீர்
நான் கண்ட தெய்வமே….
அமைதியில்லா வாழ்வில் ஒளி வீச வாரீர்
நான் கண்ட தெய்வமே….

பெண் : கனிந்து வந்த என் கருணைக் கடலே
அமுது உண்ணவாரும் ஸ்வாமி
அமுது உண்ணவாரும்…..

பெண் : கடன் கொடாமலே மாதவியின்
கடன் கொடாமலே மாதவியின்
அமுதுண்ணேன் இதென் ஆணை
கண்ணகியே எந்தன் மானே…..

பெண் : கடன் கொடாமலே மாதவியின்
அமுதுண்ணேன் இதென் ஆணை
கண்ணகியே எந்தன் மானே…..

பெண் : அடைக்கலமே அடைக்கலமே
அடைக்கலமே அடைக்கலமே
அதிநய குணமுள்ள அருமை கண்ணகி
அடைக்கலமே அடைக்கலமே

பெண் : உங்கள் இடைகுலம் தன்னில் வந்த
எங்களின் தாயே
இடைகுலம் தன்னில் வந்த
எங்களின் தாயே
இனி உனையல்லால் கெதி இல்லையறிவாயே…
இனி உனையல்லால் கெதி இல்லையறிவாயே…

பெண் : அடைக்கலமே அடைக்கலமே

பெண் : வாழ்வினிலே எனக்கேதேனும் துன்பம் வந்தால்
வைத்த அடையாளம் மாறிவிடும்
மாங்காய் அழுகிவிடும் மல்லிகை வாடிவிடும்
மாங்காய் அழுகிவிடும் மல்லிகை வாடிவிடும்
தேங்காய் உடைந்து விடும்
திருவிளக்கு அணைந்துவிடும்

பெண் : வாழ்வினிலே எனக்கேதேனும் துன்பம் வந்தால்
வைத்த அடையாளம் மாறிவிடும்

பெண் : சிலம்போ……சிலம்பு…….
செந்தமிழ்ச் செல்வி ஊஞ்சலாடிடும்
செந்தமிழ்ச் செல்வி ஊஞ்சலாடிடும்
சங்கப் பலகையிலே வளர் சங்கப் புலவர்களே

பெண் : சிலம்போ……சிலம்பு…….
தன்மானம் உள்ள நல்ல வணிகர்களே
தன்மானம் உள்ள நல்ல வணிகர்களே
தர்மம் ஏதும் தவறா தனிகர்களே……..

பெண் : சங்கப் பலகையிலே வளர் சங்கப் புலவர்களே
சிலம்போ……சிலம்பு…….

பெண் : நல்ல காலம் வந்ததையா கூடவே வாங்க
சும்மா கூடவே வாங்க நம்பிக்கையா
கால் சிலம்பை எல்லா எங்கையிலே தாங்க
சொல்லி வச்ச மாதிரியா நீங்க
விலையை போடுங்க ராஜா
சொன்ன சொல்லை கேட்பாரு கூடவே வாங்க
நான் சொன்ன சொல்லை கேட்பாரு கூடவே வாங்க….

பெண் : வாழ்க்கையின் தீபம் மறைந்ததே ஸ்வாமி
வாடாத மலரும் உலர்ந்ததே ஸ்வாமி
வளமான சோலையும் வற்றாத பொய்கையும்
நிலைமாறி போனதே நீதியும் மறைந்ததே ஸ்வாமி…

பெண் : கொடுங்கோல் ஆட்சியில் உருவமான கொற்றவா
என் கணவர் குற்றமே புரிந்ததுண்டா….
கொலைப் பாதகம் செய்த பழிகாரப் பாண்டியா
இந்நாட்டில் குறையேதும் நேர்ந்ததுண்டா

பெண் : ஆராய்ச்சி இல்லாத மன்னவா உன்னையே
அகம்பாவத்தால் மறந்தாய்
அந்தோ என் சிலம்பதை பார்

பெண் : அந்தணர் அறவோர் ஆவொடு மதனையும்
ஆன்றோர் சான்றோர் பத்தினி பெண்மார்
அன்பர்கள் வாழ அநீதியும் வீழ…..
வா…….வா…….அக்கினி தேவா…………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here