Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Aagaya pandhalilae
Ponoonjal aadudhamma
Aagaya pandhalilae
Ponoonjal aadudhamma
Oorgolam povomaa
Ullam angae oodudhamma
Oorkolam povoma
Ullam angae oodudhamma
Aagaya pandhalilae
Ponoonjal aadudhamma
Humming…
Poochoodi pudhupattu naan soodi
Mana sembhu kaiyendhi
Naam angae povoma
Poochoodi pudhupattu naan soodi
Mana sembhu kaiyendhi
Naam angae povoma
Meenaalin kungumathai
Meenaalin kungumathai
Naanaala vendum amma
Maanodu neerada
Manjal kondu selvoma
Aagaya pandhalilae
Ponoonjal aadudhamma
Oorgolam povomaa
Ullam angae oodudhamma
Paal vannam
Pazhathattu pookinnam
Mana pennin thaai thandha
Seeraga kaanboma
Paal vannam
Pazhathattu pookinnam
Mana pennin thaai thandha
Seeraga kaanboma
Ooraarin sannidhiyil
Ondraaga vendum amma
Thaai endrum sei endrum
Thandhai endrum aavoma
Aagaya pandhalilae
Ponoonjal aadudhamma
Kannendrum
Valai konda kai endrum
Ival konda angangal
Nee kaanum illangal
Ponmaalai andhiyilae
En maalai thedi varum
Amma un pennullam
Naanam solli aadi varum
Both : Aagaya pandhalilae
Ponoonjal aadudhamma
Oorgolam povomaa
Ullam angae oodudhamma
Both : Humming…
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ் .விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
பெண் : ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
பெண் : முனகல் ...
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச் செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச் செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
பெண் : மீனாளின் குங்குமத்தை
மீனாளின் குங்குமத்தை
நானாள வேண்டுமம்மா
மானோடு...... நீராட
மஞ்சள் கொண்டு செல்வோமா
பெண் : ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆண் : பால் வண்ணம்
பழத் தட்டு பூக்கிண்ணம்
மணப் பெண்ணின் தாய் தந்த
சீராக காண்போமா
ஆண் : பால் வண்ணம்
பழத் தட்டு பூக்கிண்ணம்
மணப் பெண்ணின் தாய் தந்த
சீராக காண்போமா
ஆண் : ஊராரின் சன்னதியில்
ஒன்றாக வேண்டுமம்மா
தாயென்றும் சேயென்றும்
தந்தையென்றும் ஆவோமா
ஆண் : ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
பெண் : கண்ணென்றும்
வளை கொண்ட கை என்றும்
இவள் கொண்ட அங்கங்கள்
நீ காணும் சின்னங்கள்
ஆண் : பொன்மாலை அந்தியிலே
என் மானை தேடி வரும்
அம்மா உன் பெண்ணுள்ளம்
நாணம் சொல்லி ஆடி வரும்
இருவர் : ஆகாயப் பந்தலிலே
பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா
உள்ளம் அங்கே ஓடுதம்மா
முனகல் : ..................