Singers : Sadhana Sargham and Madhu Balakrishnan
Music by : Karthik Raja
Thaanana…naanaa..nananaanaa..
Thanananaa….nananannaaa…
Aa…aaaa….
Aayiram vaanavil ondraai serndhu
Oviyam varaigiradhae
Oohhh…
Aagayaththin vinmeen koottam
Kanmun pookiradhae
Idhuvarai yaarum ezhudhaa kavidhai
Manadhil thondridudhae
Punnagai ellaam samudhiramaaga
Pongi vazhigiradhae
{Ini dinamdhorum pookkaalam
Nam manadhodu mazhaikkaalam} (2)
Aayiram vaanavil ondraai serndhu
Oviyam varaigiradhae
Aagayaththin vinmeen koottam
Kanmun pookiradhae
Oohooo…
Malayil pirakkum aruvigal ellaam
Kadalil kalakkiradhu
Malayil pirakkum aruvigal ellaam
Kadalil kalakkiradhu
Engo pirandhu engo valarndha
Idhayangal inaigiradhu
Kadavul orunaal
Bhoomikku vandhaal
Ingae vaazha virumbiduvaan
Serndhu siriththu serndhu azhudhu
Meendum piriya thayangiduvaan
Nadhiyil vizhundha
Nilavin bimbam
Nanaivadhu kidaiyaadhu
Azhagiya uravugal
Arugil irundhaal
Sogam namakkedhu…
Ini dinamdhorum pookkaalam
Nam manadhodu mazhaikkaalam
Aayiram vaanavil ondraai serndhu
Oviyam varaigiradhae
Aagayaththin vinmeen koottam
Kanmun pookiradhae
Netru urundu naalai aagum
Kaalam nirkaadhu
Oohoo…
Netru urundu naalai aagum
Kaalam nirkaadhu
Maatram kodi vandhaal kooda
Manangal maaraadhu
Kallum mannum veeda – illai
Anbil seidhadhu veedaagum
Koottu puzhuvukku koottaal dhaanae
Vannam nooru undaagum
Vedandhaangal paravaiyai pola
Ondraai parakkiradhu
Kaatril kilaigaL thavazhndaal kooda
Verai madhikkiradhu
{Ini dinamdhorum pookkaalam
Nam manadhodu mazhaikkaalam} (2)
Aayiram vaanavil ondraai serndhu
Oviyam varaigiradhae
Oohhh…
Aagayaththin vinmeen koottam
Kanmun pookiradhae
Idhuvarai yaarum ezhudhaa kavidhai
Manadhil thondridudhae
Punnagai ellaam samudhiramaaga
Pongi vazhigiradhae
{Ini dinamdhorum pookkaalam
Nam manadhodu mazhaikkaalam} (2)
Female & Male : Aayiram vaanavil ondraai serndhu
Oviyam varaigiradhae
Aagayaththin vinmeen koottam
Kanmun pookiradhae …
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : தானான நானா
நனனானா தனனனா
நநநன்னா ஆஆ ஆஆ
ஆண் : ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே ஓ ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண் முன்
பூக்கிறதே
ஆண் : இது வரை யாரும்
எழுதா கவிதை மனதில்
தோன்றிடுதே புன்னகை
எல்லாம் சமுத்திரமாக
பொங்கி வழிகிறதே
ஆண் : { இனி தினம் தோறும்
பூக்காலம் நம் மனதோடு
மழைக்காலம் } (2)
ஆண் : ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண் முன்
பூக்கிறதே
பெண் : ஓஹோ மலையில்
பிறக்கும் அருவிகள் எல்லாம்
கடலில் கலக்கிறது
ஆண் : மலையில் பிறக்கும்
அருவிகள் எல்லாம் கடலில்
கலக்கிறது எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்த இதயங்கள்
இணைகிறது
பெண் : கடவுள் ஒரு நாள்
பூமிக்கு வந்தால் இங்கே
வாழ விரும்பிடுவான்
ஆண் : சேர்ந்து சிரித்து
சேர்ந்து அழுது மீண்டும்
பிரிய தயங்கிடுவான்
பெண் : நதியில் விழுந்த
நிலவின் பிம்பம் நனைவது
கிடையாது
ஆண் : அழகிய உறவுகள்
அருகில் இருந்தால்
சோகம் நமக்கேது
பெண் : இனி தினம்
தோறும் பூக்காலம்
நம் மனதோடு மழைக்காலம்
ஆண் : ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண் முன்
பூக்கிறதே
பெண் : நேற்று உருண்டு
நாளை ஆகும் காலம்
நிற்காது
ஆண் : ஓஹோ நேற்று
உருண்டு நாளை ஆகும்
காலம் நிற்காது மாற்றம்
கோடி வந்தால் கூட
மனங்கள் மாறாது
பெண் : கல்லும் மண்ணும்
வீடா இல்லை அன்பில்
செய்தது வீடாகும்
ஆண் : கூட்டு புழுவுக்கு
கூட்டால் தானே வண்ணம்
நூறு உண்டாகும்
பெண் : வேடந்தாங்கல்
பறவையை போல
ஒன்றாய் பறக்கிறது
ஆண் : காற்றில் கிளைகள்
தவழ்ந்தால் கூட வேரை
மதிக்கிறது
ஆண் : { இனி தினம் தோறும்
பூக்காலம் நம் மனதோடு
மழைக்காலம் } (2)
பெண் : ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே
ஆண் : ஓ ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண்
முன் பூக்கிறதே
பெண் : இது வரை யாரும்
எழுதா கவிதை மனதில்
தோன்றிடுதே புன்னகை
எல்லாம் சமுத்திரமாக
பொங்கி வழிகிறதே
ஆண் : { இனி தினம் தோறும்
பூக்காலம் நம் மனதோடு
மழைக்காலம் } (2)
பெண் & ஆண் : ஆயிரம் வானவில்
ஒன்றாய் சேர்ந்து ஓவியம்
வரைகிறதே ஆகாயத்தின்
விண்மீன் கூட்டம் கண் முன்
பூக்கிறதே