Bommalattam Idhu Song Lyrics is a track from Mathar Kula Manickam Thambi Tamil Film– 1956, Starring Gemini Ganesan, Nageswara Rao, S. V. Ranga Rao, K. A. Thangavelu, K. S. Sarangapani, D. Balasubramaniam, T. V. Radhakrishnan, Anjalidevi, Savithiri, P. Kannamba, M. N. Rajam, S. D. Subbulakshmi, Kamala and Ragini. This song was sung by T. M. Soundarajan and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : T. M. Soundarajan
Music Director : S. Rajeswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Ye manidhaa indha kaayamae poiyadaa
Idhu kaatradaitha paiyadaa
Male : Bommalaattamidhu bommalaattamdhu
Nambiduvaai manidhaa…manidhaa
Nambiduvaai manidhaa..
Andha bommaiyil nee orr bommaiyada
Idhu unmaiyada manidhaa
Idhai unarndhu paaraai mooda
Male : Hoo..o..o o …o..
Thiraiyil maraindha soothrathaarikkae
Theriyumada namadhattam
Avanukkae theriyumadaa namadhattam
Maru nimishathilae
Maru nimishathilae enna aagumoo
Maayaa ulagin ottam
Aattu mandhaiyada namm koottam
Nari vandhu vittaal thindaattam
Male : Hoo..o..o o …o..
Kaadhal ooridam kalyaanam ooridam
Vindhaiyada indha ulagam
Perum vindhaiyada indha ulagam
Baedhamattra kalyaana maedaiyum
Naadaga maedaiyada
Ivai yaavum naanmugan leelaiyada
Unaiyae nambidadhaedaa moodaa….
Male : Bommalaattamidhu bommalaattamdhu
Nambiduvaai manidhaa…manidhaa
Nambiduvaai manidhaa..
Andha bommaiyil nee orr bommaiyada
Idhu unmaiyada manidhaa
Idhai unarndhu paaraai mooda
Male : Ninaivil neendhidum payanam yaavumae
Nilaiyil serndhu vidumaa
Nilaiyil serndhu vidumaa
Vazhiyinilae ennenna naerumoo
Varum vidhi maaridumaa manidhaa
Vaazhvu nirandharamaa
Maraiyum vaanavilladaa manidhaa
Male : Hoo..o..o o …o..
Manidha preyathanam vetri kandaal
Baghavaan yedhu ulaginilae
Marandhae neeyum sagada vaazhvilae
Maari maari oodathae
Madhiyae izhandhidaathae
Manoradham solladhae
Madhimayangiyae thullaadhae
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : ஏ மனிதா இந்தக் காயமே பொய்யடா
இது காற்றடைத்த பையடா
ஆண் : பொம்மலாட்டமிது பொம்மலாட்டமிது
நம்பிடுவாய் மனிதா..மனிதா
நம்பிடுவாய் மனிதா
அந்தப் பொம்மையில் நீ ஓர் பொம்மையடா
இது உண்மையடா மனிதா
இதை உணர்ந்து பாராய் மூடா…..
ஆண் : ஹோ …ஓ…ஓஒ….ஒ…
திரையில் மறைந்த சூத்ரதாரிக்கே
தெரியுமாடா நமதாட்டம்
அவனுக்கே தெரியுமாடா நமதாட்டம்
மறு நிமிஷத்திலே
மறு நிமிஷத்திலே என்ன ஆகுமோ
மாயா உலகின் ஓட்டம்
ஆட்டு மந்தையடா நம் கூட்டம்
நரி வந்து விட்டால் திண்டாட்டம்
ஆண் : ஹோ …ஓ…ஓஒ….ஒ…
காதல் ஓரிடம் கல்யாணம் ஓரிடம்
விந்தையடா இந்த உலகம்
பெரும் விந்தையடா இந்த உலகம்
பேதமற்ற கல்யாண மேடையும்
நாடக மேடையடா
இவை யாவும் நான்முகன் லீலையடா
உனையே நம்பிடாதேடா மூடா….
ஆண் : பொம்மலாட்டமிது பொம்மலாட்டமிது
நம்பிடுவாய் மனிதா..மனிதா
நம்பிடுவாய் மனிதா
அந்தப் பொம்மையில் நீ ஓர் பொம்மையடா
இது உண்மையடா மனிதா
இதை உணர்ந்து பாராய் மூடா…..
ஆண் : நினைவில் நீந்திடும் பயணம் யாவுமே
நிலையில் சேர்ந்து விடுமா
நிலையில் சேர்ந்து விடுமா
வழியினிலே என்னென்ன நேருமோ
வரும் விதி மாறிடுமா மனிதா
வாழ்வு நிரந்தரமா
மறையும் வானவில்லடா மனிதா
ஆண் : ஹோ …ஓ…ஓஒ….ஒ…
மனிதப் பிரயத்தனம் வெற்றி கண்டால்
பகவான் ஏது உலகினிலே
மறந்தே நீயும் சகட வாழ்விலே
மாறிமாறி ஓடாதே
மதியே இழந்திடாதே
மனோரதம் செல்லாதே
மதிமயங்கியே துள்ளாதே…!