Engal Kula Nayagiye Song Lyrics is a track from Thanga Padhumai Tamil Film– 1959, Starring Sivaji Ganesan, M. N. Nambiyar, N. S. Krishnan, V. R. Rajagopal, R. Balasubramaniam, Padmini, M. N. Rajam, T. P. Muthulakshmi, T. R. Rajakumari, Lalitha, E. V. Saroja and Lakshmi Rajyam. This song was sung by P. Leela and Chorus and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singers : P. Leela and Chorus
Music Director : Vishwanathan- Ramamoorthy
Lyricist : Kannadasan
Male : Vaanam poiyaadhu valam pizhaippadhu yaadhu
Neel nila vendhan kuttram sidhaiyaadhu
Pathini pendir irundha naadu
Pathini pendir irundha naadu
Female Chorus : Engal kulanayagiyae kannagiyamma
Nalla inamudhaai vandhu udhithaai kannagiyamma
Engal kulanayagiyae kannagiyamma
Nalla inamudhaai vandhu udhithaai kannagiyamma
Female : Thangatamil naatinilae kannagiyamma
Karppu thaayaagha vandhu udhithaai kannagiyamma
Female Chorus : Karppu thaayaagha vandhu udhithaai kannagiyamma
Female : Kovalarkku manaiyaana kannagiyamma
Paandi kaavalarkku pagaiyaana kannagiyamma
Paavalarkku kaviyaana kannagiyamma
Tamil paamararukku perumai thandha kannagiyamma
Female Chorus : Kannagiyamma engal kannagiyamma
Female : Karpu kanniyarkku deivamaana kannagiyamma
Female Chorus : Karpu kanniyarkku deivamaana kannagiyamma
Kannagiyamma engal kannagiyamma
Kannagiyamma engal kannagiyamma
Female : Maalaiyitta kanavanodu kaaviri poompattinathil
Manamigundhu vaazhnthirundha naalilae
Kodi madhaviyaal aada vandhaal oorilae
Female Chorus : Kodi madhaviyaal aada vandhaal oorilae
Female : Pon maalai konda manavaalan
Madhaviyai pin thodarnthum
Vaazhkavendru vaazhthi nindraai vaazhvilae
Female Chorus : Avan varavai enni porumai kondaai deviyae
Uyar perumai kondaayae tamil pengalin thaayae
Unnai thaal panindhom
Seer peravae arul purivaaye
Female Chorus : Kannagiyamma engal kannagiyamma
Kannagiyamma engal kannagiyamma
Female : Madhavi kodiyin kaadhalukkenavae
Perum pon porul nee thandhaai
Female Chorus : Perum pon porul nee thandhaai
Female : Naadhanin sugamae en sugam endraai
Udal nalivilum pani seidhaai
Female Chorus : Udal nalivilum pani seidhaai
Female : Vedhanai kovalan veedu thirumbiyum
Veruthadhillai neeyae
Mani naadham olithidum paadha silambinai
Kolkena koduthaayae
Female : Kaalgal nogha andha maada madurai varai
Kanavanai thodarnthaayae
Angu aayar kulathilae perungudi magal
Nee adaikalam adainthaayae
Female Chorus : Angu aayar kulathilae perungudi magal
Nee adaikalam adainthaayae
Female : Maaya kollanin sadhiyaal kovalan
Maandathai arindhaayae
Engal thooyavalae nee puliyena seeri
Thulli ezhundhaaye
Female Chorus : Thooyavalae nee thulli ezhundhaaye
Thooyavalae nee thulli ezhundhaaye
Female Chorus : Kottram engae
Female : Kottram engae kottravan engae
Kuttram padindha kudai engae
Female Chorus : Kottram engae kottram engae
Female : Kattalaiyidu munn arivenghae
Female Chorus : Kottram
Female : Kaavalar thandha silambengae
Silambengae silambengae
Female : Pulambum oli silambai eduthae
Mani porigal sidhara munnar udaithae
Pulambum oli silambai eduthae
Mani porigal sidhara munnar udaithae
Kalanga peyar muzhuthum thudaithae
Madhurai gadhigal kalangha por thoduthae
Kalanga peyar muzhuthum thudaithae
Madhurai gadhigal kalangha por thoduthae
Female : Vaanagamae vaiyagamae solver
En kanavan kalvano
Sengadhir selvanae nee sol
En kanavan kalvano kalvano
En kanavan kalvano
Female : Ettu dhisai kottida kumarida
Sadasada sadavena theruvilae
Kottra kudai suttram padharida
Pada pada padavena thanalilae
Pattu pala sethu karugida
Pathiniyae un vizhiyilae
Paazhum puvi moozhgi thuyar pada
Oozhi sadhura pala aadiyae
பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : வானம் பொய்யாது வளம் பிழைப்பது யாது
நீள் நில வேந்தன் குற்றம் சிதையாது
பத்தினி பெண்டிர் இருந்த நாடு
பத்தினி பெண்டிர் இருந்த நாடு……..
பெண் குழு : எங்கள் குலநாயகியே கண்ணகியம்மா
நல்ல இன்னமுதாய் வந்துதித்தாய் கண்ணகியம்மா
எங்கள் குலநாயகியே கண்ணகியம்மா
நல்ல இன்னமுதாய் வந்துதித்தாய் கண்ணகியம்மா
பெண் : தங்கத்தமிழ் நாட்டினிலே கண்ணகியம்மா
கற்புத் தாயாக வந்துதித்தாய் கண்ணகியம்மா
பெண் குழு : கற்புத் தாயாக வந்துதித்தாய் கண்ணகியம்மா
பெண் : கோவலர்க்கு மனையான கண்ணகியம்மா
பாண்டி காவலர்க்கு பகையான கண்ணகியம்மா
பாவலர்க்கு கவியான கண்ணகியம்மா
தமிழ் பாமரர்க்குப் பெருமை தந்த கண்ணகியம்மா
பெண் குழு : கண்ணகியம்மா எங்கள் கண்ணகியம்மா
பெண் : கற்புக் கன்னியர்க்குத் தெய்வமான கண்ணகியம்மா
பெண் குழு : கற்புக் கன்னியர்க்குத் தெய்வமான கண்ணகியம்மா
கண்ணகியம்மா எங்கள் கண்ணகியம்மா……
கண்ணகியம்மா எங்கள் கண்ணகியம்மா……
பெண் : மாலையிட்ட கணவனோடு காவிரிப்பூம் பட்டினத்தில்
மணமிகுந்து வாழ்ந்திருந்த நாளிலே
கொடி மாதவியாள் ஆட வந்தாள் ஊரிலே
பெண் குழு : கொடி மாதவியாள் ஆட வந்தாள் ஊரிலே
பெண் : பொன் மாலை கொண்ட மணவாளன்
மாதவியை பின் தொடர்ந்தும்
வாழ்கவென்று வாழ்த்தி நின்றாய் வாழ்விலே…
பெண் குழு : அவன் வரவை எண்ணிப் பொறுமை கொண்டாய் தேவியே
உயர் பெருமை கொண்டாயே தமிழ் பெண்களின் தாயே
உன்னைத் தாள் பணிந்தோம்
சீர் பெறவே அருள் புரிவாயே
பெண் குழு : கண்ணகியம்மா எங்கள் கண்ணகியம்மா……
கண்ணகியம்மா எங்கள் கண்ணகியம்மா……
பெண் : மாதவிக் கொடியின் காதலுக்கெனவே
பெரும் பொன் பொருள் நீ தந்தாய்
பெண் குழு : பெரும் பொன் பொருள் நீ தந்தாய்
பெண் : நாதனின் சுகமே என் சுகமென்றாய்
உடல் நலிவிலும் பணி செய்தாய்…..
பெண் குழு : உடல் நலிவிலும் பணி செய்தாய்…..
பெண் : வேதனைக் கோவலன் வீடு திரும்பியும்
வெறுத்ததில்லை நீயே
மணி நாதம் ஒலித்திடும் பாதச் சிலம்பினை
கொள்கெனக் கொடுத்தாயே
பெண் : கால்கள் நோக அந்த மாட மதுரை வரை
கணவனைத் தொடர்ந்தாயே
அங்கு ஆயர் குலத்திலே பெருங்குடி மகள்
நீ அடைக்கலம் அடைந்தாயே
பெண் குழு : அங்கு ஆயர் குலத்திலே பெருங்குடி மகள்
நீ அடைக்கலம் அடைந்தாயே
பெண் : மாயக் கொல்லனின் சதியால் கோவலன்
மாண்டதை அறிந்தாயே
எங்கள் தூயவளே நீ புலியெனச் சீறி
துள்ளி எழுந்தாயே……
பெண் குழு : தூயவளே நீ துள்ளி எழுந்தாயே……
தூயவளே நீ துள்ளி எழுந்தாயே……
பெண் குழு : கொற்றம் எங்கே
பெண் : கொற்றம் எங்கே கொற்றவன் எங்கே
குற்றம் படிந்த குடை எங்கே
பெண் குழு : கொற்றம் எங்கே கொற்றம் எங்கே
பெண் : கட்டளையிடு முன் அறிவெங்கே
பெண் குழு : கொற்றம்
பெண் : காவலர் தந்த சிலம்பெங்கே…..
சிலம்பெங்கே……….சிலம்பெங்கே…….
பெண் : புலம்பும் ஒலிச் சிலம்பை எடுத்தே
மணிப் பொறிகள் சிதற முன்னர் உடைத்தே
புலம்பும் ஒலிச் சிலம்பை எடுத்தே
மணிப் பொறிகள் சிதற முன்னர் உடைத்தே
களங்கப் பெயர் முழுதும் துடைத்தே
மதுரை கதிகள் கலங்கப் போர் தொடுத்தே…….
களங்கப் பெயர் முழுதும் துடைத்தே
மதுரை கதிகள் கலங்கப் போர் தொடுத்தே…….
பெண் : வானகமே வையகமே சொல்வீர்
என் கணவன் கள்வனோ…..
செங்கதிர் செவ்வனே நீ சொல்
என் கணவன் கள்வனோ கள்வனோ
என் கணவன் கள்வனோ……..
பெண் : எட்டுத் திசை கொட்டிக் குமுறிட….
சடசட சடவெனத் தெருவிலே…..
கொற்றக் குடை சுற்றம் பதறிட….
பட பட படவெனத் தணலிலே…..
பட்டுப் பல செத்துக் கருகிட…….
பத்தினியே உன் விழியிலே……
பாழும் புவி மூழ்கித் துயர் பட…..
ஊழிச் சதுர பல ஆடியே……