Kangalaal Kaadhal Song Lyrics is the track from Sarangathara Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, S. V. Ranga Rao, M. N. Nambiyar, G. Muthukrishnan, A. Karunanidhi, P. Bhanumathi, P. Shanthakumari, Rajasulochana, T. P. Muthulakshmi, E. V. Saroja, Gemini Chandra and Kamala. This song was sung by T. M. Soundarajan and Jikki. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.
Singers : T. M. Soundarajan and Jikki
Music Director : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
பெண் : கண்களால் காதல் காவியம் செய்து
காட்டிடும் உயிர் ஓவியம்
தங்கள் அன்பினால் சாம்ராஜ்ஜியம்
சொந்தமானதே என் பாக்கியம்
ஆண் : கண்களால் காதல் காவியம் செய்து
காட்டிடும் உயிர் ஓவியம்
உந்தன் அன்பெனும் சாம்ராஜ்ஜியம்
சொந்தமானதே என் பாக்கியம்….
பெண் : கண்களால் ஹா ஹா ஆஆ
கண்களால் இந்த இன்பமே என்றும்
சாஸ்வதமாகிட வேண்டுமே
கண்களால் இந்த இன்பமே என்றும்
சாஸ்வதமாகிட வேண்டுமே
ஆண் : தங்கமே அதில் அயமேன்
இன்பசாகரம் மென்மேலும் பொங்குமே
தங்கமே அதில் அயமேன்
இன்பசாகரம் மென்மேலும் பொங்குமே
பெண் : திங்களைக் கண்ட அல்லிபோல்
திருவாய்மொழியால் உள்ளம் மலருதே
ஆண் : செந்தமிழ் கலைச் செல்வியே
மனம் தேனுண்ணும் வண்டாய் மகிழுதே…
பெண் : மண்ணிலே ஹா ஹா ஆஆ
மண்ணிலே உள்ள யாவுமே
எழில் மன்னவன் உம்மை போல் காணுதே
மண்ணிலே உள்ள யாவுமே
எழில் மன்னவன் உம்மை போல் காணுதே
ஆண் : எண்ணமே ஒன்று ஆனதால்
இணையில்லாத ஆனந்தம் தோன்றுதே
எண்ணமே ஒன்று ஆனதால்
இணையில்லாத ஆனந்தம் தோன்றுதே
பெண் : இன்பமோ அன்றி துன்பமோ
இது நேரிலும் நம் கண்டு கொள்ளுவோம்
ஆண் : அன்றில் போல் பிரியாமலே நாம்
இன்று போல் என்றுமே வாழுவோம்
இருவர் : கண்களால் காதல் காவியம் செய்து
காட்டிடும் உயிர் ஓவியம்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி


