Singer : Kovai Kamala

Music by : M. S. Vishwanathan

Female : Kundrakudi konda vela
Sankaran bala thaarum aiyaa
Pannirandu kannaal paarum aiyaa
Pannirandu kannaal paarum aiyaa
Paadugalai sonnaal theerum aiyaa

Female : Kundrakudi konda vela
Sankaran bala thaarum aiyaa
Pannirandu kannaal paarum aiyaa
Paadugalai sonnaal theerum aiyaa

Female : Thangai ilanangai kulamangai
Aval sengai
Mana maalai konda naadhar vaazha
Manjal kondu vanji vaazha
Arulae param porule anbu kadale gnyaana kanalae
Arulae param porule anbu kadale gnyaana kanalae

Female : Kundrakudi konda vela
Sankaran bala thaarum aiyaa
Pannirandu kannaal paarum aiyaa

Female : Padi yeridum adiyaar thuyar podiyagida
Vadivel thanai karam yaendhiya perumaan unai
Thozhudhaal vandhu azhudhal kaalil vizhunthaal

Female : Uttra pazhi paavamum pala dhoshamum
Ariyamaiyum abachaaramum
Kadhir thediya pani polavae vilagum
Inbam vilaiyum thunbam vadiyum

Female : Sarba kaavadi naarkodai aada sindhu paada
Undhan sannadhi vaasalai naada
Arul kooda irul oda
Nidham nidham thozhum manam
Ninaithidum varam tharum
Kumara engal amara marai mudhalva arum pudhalvaa

Female : Padhamaadidum vadivangalil
Uyarvaagidum mayil meedhinil
Nadamaadidum kumaraesanum nee andro
Thanthai thaaiyandro adimai naan andro

Female : Unnai oru podhilum maravadhaval
Muruga enum varum vaelaiyil
Visha naagamum vilagaamalae theendumoo
Saabam theerumo enna naerumo

Female : Indha vaelaiyil nee vandhu kaakka
Isai ketka kaiyil vel kondu vaa endhan ellai
Yaarum illai undhan pillai
Unaivida thunaiyaedhu unakkoru inaiyaedhu
Guhanae sakthi maganae aarumuganae kurubaranae

Female : Aadharikka nee irukka
Sodharikku thunbam enna
Murugaa murugaa murugaa
Ammaiendrum appanendrum
Unnaiyindri yaarum illai
Kumara kumara kumara

Female : Pen mugathin kungumathai
Kanivu kondu kaakka vendum
Varuvaai varuvaai varuvaai
Kandhavaelai enni enni
Vandhavaelai kaaval nirkkum
Vadivel vadivel vadivel

பாடகி : கோவை கமலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : குன்றக்குடி கொண்ட வேலா
சங்கரன் பாலா தாருமைய்யா
பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா
பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா
பாடுகளை சொன்னால் தீருமைய்யா…

பெண் : குன்றக்குடி கொண்ட வேலா
சங்கரன் பாலா தாருமைய்யா
பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா
பாடுகளை சொன்னால் தீருமைய்யா…

பெண் : தங்கை இளநங்கை குலமங்கை
அவள் செங்கை
மண மாலைக் கொண்ட நாதர் வாழ
மஞ்சள் கொண்டு வஞ்சி வாழ
அருளே பரம்பொருளே அன்புக் கடலே ஞானக் கனலே
அருளே பரம்பொருளே அன்புக் கடலே ஞானக் கனலே

பெண் : குன்றக்குடி கொண்ட வேலா
சங்கரன் பாலா தாருமைய்யா
பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா..

பெண் : படியேறிடும் அடியார் துயர் பொடியாகிட
வடிவேல் தனை கரம் ஏந்திய பெருமான் உனை
தொழுதால் வந்து அழுதால் காலில் விழுந்தால்

பெண் : உற்ற பழி பாவமும் பல தோஷமும்
அறியாமையும் அபச்சாரமும்
கதிர் தேடிய பனிப் போலவே விலகும்
இன்பம் விளையும் துன்பம் வடியும்

பெண் : சர்ப்ப காவடி நாற்கொடை ஆட சிந்து பாட
உந்தன் சன்னதி வாசலை நாட
அருள் கூட இருள் ஓட
நிதம் நிதம் தொழும் மனம்
நினைத்திடும் வரம் தரும் குமரா எங்கள் அமரா
மறை முதல்வா அரும்புதல்வா

பெண் : பதமாடிடும் வடிவங்களில்
உயர்வாகிடும் மயில் மீதினில்
நடமாடிடும் குமரேசனும் நீயன்றோ
தந்தை தாயன்றோ அடிமை நானன்றோ

பெண் : உன்னை ஒருபோதிலும் மறவாதவள்
முருகா எனும் வரும் வேளையில்
விஷ நாகமும் விலகாமலே தீண்டுமோ
சாபம் தீருமோ என்ன நேருமோ

பெண் : இந்த வேளையில் நீ வந்து காக்க
இசை கேட்க கையில்
வேல் கொண்டு வா எந்தன் எல்லை
யாருமில்லை உந்தன் பிள்ளை
உனைவிட துணையெது உனக்கொரு இணையெது
குகனே சக்தி மகனே ஆறுமுகனே குருபரனே

பெண் : ஆதரிக்க நீயிருக்க சோதரிக்கு துன்பமென்ன
முருகா முருகா முருகா
அம்மையென்றும் அப்பனென்றும்
உன்னையன்றி யாருமில்லை
குமரா குமரா குமரா

பெண் : பெண் முகத்தின் குங்குமத்தை
கனிவு கொண்டு காக்க வேண்டும்
வருவாய் வருவாய் வருவாய்
கந்தவேளை எண்ணி எண்ணி
வந்தவேளை காவல் நிற்கும்
வடிவேல் வடிவேல் வடிவேல்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here