பெண் : குயில் கூவி துயில் எழுப்ப
கொடி அரும்பு கண் விழிக்க
குயில் கூவி துயில் எழுப்ப
கொடி அரும்பு கண் விழிக்க
கதிரவன் வந்தும் இங்கு ஒளியும் இல்லை
உன் கருணையை பெறவும்
எனக்கோர் வழியும் இல்லை
குயில் கூவி துயில் எழுப்ப
கொடி அரும்பு கண் விழிக்க
பெண் : பருவம் நிறைந்த பறவை காக்கும்
திரு பணி ஒன்றை எனக்களித்தாயே
பருவம் நிறைந்த பறவை காக்கும்
திரு பணி ஒன்றை எனக்களித்தாயே
பெரும் புயல் சூழ்ந்த குடும்பத்தை காக்கும்
திறமையை நீயே தந்தருள்வாயே
பெண் : குயில் கூவி துயில் எழுப்ப
கொடி அரும்பு கண் விழிக்க
பெண் : வளம் நிறை தோட்டம் விலங்குகளாலே
அழிந்திடலாமோ இது முறை தானோ
ஆண் : ஹாஹாஹாஹா
பெண் : வளம் நிறை தோட்டம் விலங்குகளாலே
அழிந்திடலாமோ இது முறை தானோ
வாழ்வெனும் ஊஞ்சல் உடைந்து விடாமல்
வரம் தர நீயே மனம் கணிவாயே
பெண் : குயில் கூவி துயில் எழுப்ப
கொடி அரும்பு கண் விழிக்க
கதிரவன் வந்தும் இங்கு ஒளியும் இல்லை
உன் கருணையை பெறவும்
எனக்கோர் வழியும் இல்லை
குயில் கூவி துயில் எழுப்ப….