Marundho Marundhu Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by T. M. Soundararajan and Seerkazhi Govindarajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Pattukkottai Kalyanasundaram.

Singer : T. M. Soundararajan and Seerkazhi Govindarajan

Music Director : G. Ramanathan

Lyricist : Pattukkottai Kalyanasundaram

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆண் : மருந்தோ மருந்து
கன்னப்புத்து கண்டமாலை
மஞ்சக் காமாலைகளுக்கெல்லாம் மருந்துண்டு

ஆண் : காசுமாலை போடாமே கழுத்துச் சுளுக்குதுன்னு
கண்ணீர்விடும் பொண்ணுக்கு மருந்துண்டோ

ஆண் : இல்லே…..
ஆண் : இருக்கு…..
ஆண் : அப்ப சொல்லு

ஆண் : மூசைத் தங்கத்தை கம்பி நீட்டி சூடுகாட்டி
முதுகிலே ரெண்டு வாங்கினா!
குணங்கிடைக்கும்

ஆண் : ஜீவ சிந்தாமணி மருந்து
ஆண் : சித்த வைத்திய மருந்து
ஆண் : மருந்தோ மருந்து

இருவர் : நாட்டு வைத்தியர் காட்டு மூலிகை
மருந்தோ மருந்து
நம்ம நாட்டு வைத்தியக் காட்டு மூலிகை
மருந்தோ மருந்து
உடல் நன்மை காணவே உண்மையோடு
பலர் உண்டது கை கண்டது………..

இருவர் : நாட்டு வைத்தியர் காட்டு மூலிகை
மருந்தோ மருந்து

ஆண் : ஏட்டு மூலமாய்ப் பதினெண்சித்தர்
பாட்டாய்த் திருவாய் மலர்ந்தது
ஏட்டு மூலமாய்ப் பதினெண்சித்தர்
பாட்டாய்த் திருவாய் மலர்ந்தது
சிரேஷ்டமான இம்மருந்துகள்
ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது நல்லது

இருவர் : நாட்டு வைத்தியர் காட்டு மூலிகை
மருந்தோ மருந்து

ஆண் : கரப்பான் சொறிபடை சிரங்குகளுக்குக்
களிம்புகள் தருவோம் தடவிக்கலாம்
கரப்பான் சொறிபடை சிரங்குகளுக்குக்
களிம்புகள் தருவோம் தடவிக்கலாம்

ஆண் : காமசுரத்தால் கவலைப்படுவோர்
கலியாண குளிகை சாப்பிடலாம்
காமசுரத்தால் கவலைப்படுவோர்
கலியாண குளிகை சாப்பிடலாம்

ஆண் : கஷ்டப்படாமல் சுகமாய் வாழ
காயகல்பம் உண்டிடலாம்
கஷ்டப்படாமல் சுகமாய் வாழ
காயகல்பம் உண்டிடலாம்

ஆண் : அது கை வசமில்லை தற்கால சாந்திக்கு
காக்காய் பிடித்து புசிக்கலாம்

ஆண் : நம்ம நாட்டு வைத்தியக் காட்டு மூலிகை
மருந்தோ மருந்து
உடல் நன்மை காணவே உண்மையோடு
பலர் உண்டது கை கண்டது………..

ஆண் : பாட்டுப் பாடும் தொண்டைகளெல்லாம்
பாறை போல கட்டிக்கிட்டா
காட்டுக் குயில் சூப்புப் போட்டுச்
சாப்பிடச் சொல்லுங்க!

ஆண் : ஆட்டம் வராக் கால்களுக்கு
மயில்காலுத் தைலம் போட்டு
அரை மண்டலம் அழுத்தியழுத்தத்
தேய்க்கச் சொல்லுங்க

ஆண் : பொறுக்காத பல்லு வலிக்கு
சுருக்கத்திலே மருந்திருக்கு
போக்கிரிகிட்டே வாயைக் குடுத்துப்
பார்க்கச் சொல்லுங்கோ!

ஆண் : கருப்பான தலைமுடியும்
வெளுக்காமே இருப்பதற்குக்
காக்காவை உயிரோடு
முழுங்கச் சொல்லுங்கோ!
அண்டங் காக்காவை உயிரோடு
முழுங்கச் சொல்லுங்கோ!

ஆண் : மருந்தோ மருந்து
ஆண் : மருந்தோ மருந்து…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here